search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
    X

    மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பிரவீன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அகஸ்தியர் கூட்டத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

    • மண்டபம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் பிரவீன் தலைமையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. ஆணைக்கிணங்க மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி ஏராளமான கட்சி நிர்வாகிகள் காரில் சென்று உற்சாக வரவேற்பளித்தனர்.

    முன்னதாக அகஸ்தியர் கூட்டத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட கவுன்சி லர்கள் கவிதா கதிரேசன், ரவிச்சந்திர ராமவன்னி, பொதுக்குழு உறுப்பினர் தண்டபானி, ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி, கிளை செயலாளர்கள் கிருஷ்ணா, ராக்கு, மகேசுவரன், சங்கர், சாமி, சுகுன சீலன், சோமசுந்தரம், கோட்டைசாமி, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×