search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைவினை பொருட்கள் கண்காட்சி
    X

    கைவினை பொருட்கள் கண்காட்சி

    • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நாட்டுப்புற கைவினை கலைப் பொருட்களின் கண்காட்சி நடந்தது. 8-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் நாட்டுப்புற கைவினைக் கலைகள் என்ற பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினை கலைப் பொருட்களைச் செய்துவர தமிழாசிரியர் கிருஷ்ணவேணி மாணவர்களுக்கு செயல்திட்டம் கொடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள், ஓலை கொட்டான்கள், உடுக்கை, பறவைக் கூடுகள், படகு போன்ற பொருட்களைச் செய்தனர்.

    இந்த பொருட்களின் கண்காட்சியை தலைமையாசிரியர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதில் தாதனேந்தலைச் சேர்ந்த அசிகா என்ற மாணவி செய்த பனை ஓலையில் புட்டு அவிக்கும் பெட்டி, பொக்கனாரேந்தல் ரித்திகாஸ்ரீ, திருப்புல்லாணி ஆயிசத் சபா, தவுபிக் நிஷா ஆகியோர் பனை ஓலையில் செய்திருந்த ரோஜா, தாமரை பூக்கள், குருவிகள் உருவங்கள் அனைவரையும் கவர்ந்தது.

    Next Story
    ×