என் மலர்
புதுக்கோட்டை
- இலுப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு நடைபெற்றுள்ளது
- பொதுமக்கள் அச்சம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஆடத்தடுத்த இரு வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். இலுப்பூர் அருகே இடையபட்டி ஊராட்சி காசியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். விவசாயியான இவர், குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு அருகே நடந்த திருவிழாவிற்கு சென்றார்.
பின்னர் விழா முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்கமாக பூட்டிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியானார். உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அறையில் இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் நகை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இதே போல் இவர் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் மதி என்பவர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்:- எங்கள் பகுதியில் தொடர்ந்து இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. எனவே பொது மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
- ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
- 15 பேருக்கு தீர்வு காணப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கி வரும் பொதுவுடமைக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் வங்கியில் நீண்ட கால தவணை களாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் கட்ட முடியாத நபர்கள் ஆலங்குடி நீதிமன்ற லோக்கல் அதாலத் சமரச கூட்ட தீர்வு மூலமாக 15 பேருக்கு தீர்வு காணப்பட்டது. சமரச கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவி தலைமை வகித்தார் வழக்கறிஞர் விஜய, சமூக ஆர்வலர் அழகுசுந்தரம் வங்கி கிளை மேலாளர் அசோக்குமார், அரசு வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நீண்டகால கடன்களான விவசாயம் கல்விக்கடன் சுய உதவிக் குழு சிறு தொழில் வியாபாரம் மற்றும் ஏனைய கடன்கள் பெற்றவர்களு க்கு சமரச கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது. இதில் கடன் பெற்றவர்களுக்கு நீண்ட கால நிலுவையில் இருந்த 15 பேருக்கு 39, லட்சத்து,40, ஆயிரத்து,360 கொடுத்து சமரச கூட்டதீர்வு காணப்பட்டது..
நிகழ்ச்சியில் வட்ட சட்டப்பணி குழு நிர்வாக உதவியாளர் அருண்கு மார் தன்னார்வ சட்ட பணியாளர் செந்தில்ராஜா மற்றும் வழக்கறிஞ ர்கள் 100க்கும் அதிகமான பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண் டனர்.
- 3 பஸ்களை பொது மக்கள் சிறைபிடித்தனர்.
- மோதுவது போல வந்ததால் ஆத்திரம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ,பேராவூரணி பகுதிகளுக்கு 2 அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ் ஆகியவை புறப்பட்டன. இந்த மூன்று பஸ்களும் ஆலங்குடி வம்பன் பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த பஸ் களின் டிரைவர்களுக்கு இடையே யார்? முந்தி செல்வது என்பதில் போட்டோ போட்டு ஏற்பட்டது.
உச்சகட்டமாக ஆலங்குடி சந்தைப்பேட்டை பஸ் திருத்தம் அருகே தனியார் பஸ் ,அரசு பஸ்சை உரசுவது போன்று நெருக்கமாக முந்தி சென்றது.
இதைக் கண்டு பஸ்ஸில் இருந்த பயணிகளும் சாலையோரம் பஸ்களுக்கு காத்து நின்ற பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே ஆலங்குடி சந்தை பகுதியில் பஸ்ஸுக்கு காத்திருந்த பொதுமக்கள் மீது அந்த பஸ்கள் மோதுவது போல வேகமாக வந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் பொதுமக்கள் துணிச்சலுடன் முந்தி சொல்வதில் போட்டா போட்டி நடத்தி மக்களை அலறவிட்ட மூன்று பஸ்களையும் நடுரோட்டில் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
இதில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளும் டிரைவர்களுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து போலீசார் டிரைவர்களை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக புதுக்கோட்டை ஆலங்குடி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இருபுறமும் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. முந்தி செல்வதற்கு போட்டா போட்டி நடத்திய பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- தியாகி சத்தியமூர்த்தி சிலைக்கு மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர்
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது
புதுக்கோட்ைட:
இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்தியா முழுவதும் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படுகின்ற வேளையில், தமிழக அரசு 3 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் ஒரு மாவட்டமாக புதுக்கோட்டையை அறிவித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சத்தியமூர்த்தியின் நினைவை போற்றுகின்ற வகையில், தீரர் சத்தியமூர்த்தி பிறந்த திருமயத்தில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்து, தியாகி சத்தியமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து மாணவ மாணவிகளுடன் புகழ் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மா.மஞ்சுளா புதுக்கோட்டை பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளையம்மாள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதியார், திருமயம் வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன், ஜேம்ஸ் , இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி மற்றும் இருபால் பள்ளி ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- அமைச்சருடன் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றக்கொண்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடை பெற்றது.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றார். தொடர்ந்து ஆசிரியர்களும், மாண விகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், பள்ளி மாணவிகளான நீங்கள் வீட்டில் தந்தை, அண்ண்ன், தம்பி என உங்கள் உறவினர்கள் போதைக் கு அடிமையாவதை தடுக்கவேண்டும்.
மேலும் அது போன்ற பழக்கங்களை மாற்றுவதற்கு உடற்பயிற்சியில் கவனம் செலுத்த சொல்ல வேண்டும். விளையாட்டுகளில் சாதிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் தேடிவருகிறது. என்றார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரி யர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண் மைக்குழு நிர்வாகிகள், பள் ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- போதை பொருள் பயன்படுத்துபவர், விற்பவரை அடையாளம் காட்ட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை, பொன்னமராவதி மற்றும் திருமயம் ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுது. இதில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேரணிைய தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சிறப்பு கூட்டம் நடத்தியுள்ளார். அதன் மூலம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் அவலுவலர்களுக்கு தெரிவித்துள்ளார்.
போதை பொருட்கள் எந்த மாநிலத்திலிருந்தும், எந்த ரூபத்தில் நுழைந்தாலும் அதைத்தடுத்தாக வேண்டும். போதை பொருள் விற்பனை செய்வோரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
போதை பொருள் பயன்படுத்துபவரை, விற்பவரை மக்கள் அடையாளம் காட்ட வேண்டும்.
காவல்துறையினரும் தங்களது கடமைகளை உணர்ந்து செய்பட ேவண்டும். போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்காகவே தமிழகத்தில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் செய்படுகின்றன. இவற்றை 2 மாவட்டங்களுக்கு ஒரு நீதிமன்றம் வீதம் உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் போதை பொருட்களை விற்பவர்கள் மீதும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்ற உத்தரவுபடி கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் பிறகு இதை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டுவரப்படும்.
நிச்சயம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்பி ஒழிக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
- நிகழ்ச்சியை ரத்து செய்து வழியிலேயே திரும்பியதால் பரபரப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் மற்றும் சேந்தன்குடி அரசு தொடக்க பள்ளிகளுக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கௌசல்யா அ.தி.மு.க. பரிந்துரையின் பெயரில் மேஜை நாற்காலி வழங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொள்வதாக இருந்தது.
இந்நிலையில் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ., ஆலங்குடி தொகுதிக்கு வந்து மேஜை நாற்காலிகள் வழங்கினால் அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட கூடும் என்று கீரமங்கலம் காவல் நிலையத்தில் தி.மு.க.வை சேர்ந்த திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் கீரமங்கலம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது கீரமங்கலம் போலீசார், அவருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு திரும்பி சென்றார். இதனை தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சியும் ரத்த செய்யப்பட்டது.
ஆனால் விஜயபாஸ்கர் பள்ளி நிகழ்ச்சிக்கு வருவார் என்று கொத்தமங்கலம் பள்ளி முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் காத்திருந்து ஏமாற்றத்துடுன் திரும்பி சென்றனர்.
இது குறித்து விசாரித்தபோது, கட ந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆலங்குடி தொகுதியில் சிவ.வீ. மெய்யநாதன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அவரை அழைக்காமலேயே தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் அ.தி.மு.க.வினர் நடத்தினர்.
ஆலங்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் மெய்யநாதன் வழங்கியதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி சைக்கிள் வழங்கியதாக ஆலங்கு டி, கீரமங்கலம் காவல் நிலையத்தில் 2019 வருடத்தில் மெய்யநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தற்போது மெய்யநாதன் அமைச்சராக இருக்கும்போது அவர் இல்லாமல் அ.தி.மு.க.வினர் நிகழ்ச்சி நடத்த முயன்றதால் தி.மு.க.வினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்றனர்.
- தேசிய கொடிகள் வழங்கும் விழா நடைபெற்றது
- 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தில் தேசிய கொடிகள் வழங்கும் விழா மற்றும் பேரணி நடைப்பெற்றது.
வருகின்ற ஆகஸ்ட் 15 -ந் தேதி 75-வது சுதந்திர தின விழா நடைப்பெற உள்ளது.இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியின் சார்பில், நடுநிலை பள்ளி முன்பு தேசிய கொடி வழங்கும் விழா மற்றும் பேரணி நடைப்பெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தலைமை வகித்தார்.ஒன்றியக்குழு தலைவர் சுதாஅடைக்கலமணி பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்கு தேசிய கொடி வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார். கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் 75- வது சுதந்திர தின விழா பற்றியும் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும் முறை குறித்து பேசினார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் அழகப்பன் சரோஜாதேவி தலைமை ஆசிரியர் சுபத்ரா ஊராட்சி செயலாளர் அழகப்பன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
- பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்
- பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பிடாரி அம்மனுக்கு ஆடித்திருவிழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு, பின்னர் அலங்காரிக்கப்பட்ட பிடாரி அம்மன் தேரில் எழுந்தருளியபின் பக்தர்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.
பிடாரி அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட பூக்கள் , மாலைகள் பக்தர்களை நோக்கி வீசப்பட்ட அவற்றை அம்மனின் அருள்பிரசாம் என போட்டி போட்டுக்கொண்டு பக்தர்கள் பிடித்து வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.
விழாவில் அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், நகரப்பட்டி, கல்லம்பட்டி மற்றும் சுற்றுக்கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதுகாபபில் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் ஈடுபட்டனர்.
- சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
புதுக்கோட்டை:
தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டத்தினை அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட பள்ளி சத்துணவு மையங்களிலேயே சமைத்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் எஸ்.செம்பன் தலைமைவகித்தார். நிர்வாகிகள் மகாராஜன், சீதாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் மாநில பொதுச்செயலர் மலர்விழி, மாவட்டத்துணைத்தலைவர் குமரேசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப்பேசினர்.
- நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது
- ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூரில் அருள் பாலித்து வரும் நாடியம்மனுக்கு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. ஆடி திருவிழாவை முன்னிட்டு நாடியம்மனுக்கு பூச்சொறிதல் கடந்த வாரம் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதலும் மண்டக படிகளும் நடைபெற்றன. தொடரந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மது எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் நெல் மணிகளை போட்டு அதில் தென்னம்பாளைகளை வைத்து அதனை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக நாடியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மூன்று முறை கோவிலை சுற்றி வந்து தென்ம்பாளைகள் மற்றும் நெல் மணிகளை கோவிலில் கொட்டி அம்மனை வழிபட்டு சென்றனர். அதில் கீழாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் பூசாரி அம்மனுக்கு மகா தீபாராதனை செய்து மது குடங்களுக்கும் அபிஷேகம் செய்தார்.ஆலங்குடி மற்றும் வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து நேற்று முன்தினம் அப்பணியில் இருந்து மாற்றப்பட்டார்.
- பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேரோட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. தேர் புறப்பட தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேர் விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் காரணம் என பக்தர்கள் தரப்பிலும், பா.ஜ.க.வினரும் கூறி வந்தனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து நேற்று முன்தினம் அப்பணியில் இருந்து மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.






