என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WARENESS"

    • போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • அமைச்சருடன் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றக்கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடை பெற்றது.

    நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றார். தொடர்ந்து ஆசிரியர்களும், மாண விகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், பள்ளி மாணவிகளான நீங்கள் வீட்டில் தந்தை, அண்ண்ன், தம்பி என உங்கள் உறவினர்கள் போதைக் கு அடிமையாவதை தடுக்கவேண்டும்.

    மேலும் அது போன்ற பழக்கங்களை மாற்றுவதற்கு உடற்பயிற்சியில் கவனம் செலுத்த சொல்ல வேண்டும். விளையாட்டுகளில் சாதிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் தேடிவருகிறது. என்றார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரி யர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண் மைக்குழு நிர்வாகிகள், பள் ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×