search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதுக்கோட்டை தேர் விபத்து- கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
    X

    புதுக்கோட்டை தேர் விபத்து- கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

    • கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து நேற்று முன்தினம் அப்பணியில் இருந்து மாற்றப்பட்டார்.
    • பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேரோட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. தேர் புறப்பட தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்களில் அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேர் விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் காரணம் என பக்தர்கள் தரப்பிலும், பா.ஜ.க.வினரும் கூறி வந்தனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து நேற்று முன்தினம் அப்பணியில் இருந்து மாற்றப்பட்டார்.

    இந்தநிலையில் பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×