என் மலர்
புதுக்கோட்டை
- அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிளக்குபூஜை நடைபெற்றது
- 1,401 பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.
புதுக்கோட்டை:
அழகியநாச்சியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 31 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 9-ந் தேதி தேரோட்ட விழா நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோயிலின் அறங்காவலா் ராம. ராஜா அம்பலகாரா் தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் தொடக்கமாக அழகிய நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற விளக்குப் பூஜையில் 1,401 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். சிவாச்சாரியாா் சரவணன் குருக்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி பூஜையை வழிநடத்தினாா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை குழுவினா் செய்திருந்தனா்.
- அரசு பள்ளியில் உலக இளைஞா் தின விழா நடைபெற்றது.
- அரசு பள்ளியில் உலக இளைஞா் தின விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக இளைஞா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தலைமை ஆசிரியா் முனைவா் ந. சாந்தி தலைமை வகித்தாா்.வல்லம் பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை இயக்குநா் செல்வகுமாா், மூத்த பேராசிரியா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலக இளைஞா் தினம் குறித்தும், வருங்கால இளைஞா்களாகிய மாணவா்களுக்கு தேவையான சமூகப் பற்று குறித்தும் இளைஞா்கள் சக்தியின் பலம், தேசத்திற்கு வளமான இளைஞா்களின் தேவை குறித்தும் அரசியல் அறிவியல் துறை பேராசிரியா் லெனின் சிறப்புரை ஆற்றினாா். இதில், பள்ளி ஆசிரியா்கள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பள்ளி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனா். சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் குமரேசன் நன்றி கூறினாா்.
- வீடு எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் நாசமானது
- மின்கசிவு காரணமாக நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலபுரம் கிராமத்தில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீடு நேற்று மின் கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது.
மணமேல்குடி தாலுகா கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது62), இவரது மனைவி பேச்சி இவர்களுக்கு மகன் மாரிமுத்து, மகள்கள் கல்பனா, சித்திரா ஆகியோர் உள்ளனர். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணமான நிலையில், ஒரே வீட்டில் குறுக்கே சுவர் வைத்து மகன் ஒரு பகுதியிலும், காளிமுத்து குடும்பம் ஒரு பகுதியிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.
விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர்கள் அருகே உள்ள வயல்காட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதே போன்று லாரி ஓட்டுனரான மகன் மாரிமுத்து வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஜெகதாப்பட்டினம் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே தீ மளமளவென பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. தீ விபத்தில் 11 சவரன் நகை, 70 ஆயிரம் ரொக்கப்பணம், தொலைக்காட்சிப்பெட்டி, சலவை எந்திரம் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளது. சம்பவம் குறித்து நாகுடி காவல்த்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- அரசினர் பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா
புதுக்கோட்டை:
மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது கணினி ஆய்வகம், நூலகம் திறந்து வைத்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.
ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் நூலகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும் போது,
ஆலங்குடி மண்ணில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்கும் இப்பள்ளியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பயிலும் மாணவிகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகம் கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம் மூலம் உங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
நம் தமிழக முதல்வர் 2 ஆண்டு காலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வந்துள்ளார். அதன் மூலம் மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டுள்ளனர்.மாணவர்கள் அனைவரும் அதிகமாக படிக்க வேண்டும்
அறிவார்ந்த சமுதாய மக்களாக உருவாக வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் காணாமல் போய் உள்ளார்கள். நூற்றுக்கு முப்பத்தைந்து மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சாதித்து உள்ளார்கள். எனவே மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது.
மாணவர்கள் அனைவரும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கேள்வியையும் அதற்கான பதிலையும் எழுதிப் படியுங்கள்.ஒரு முறை எழுதி ப்படிப்பது,பத்து முறை படிப்பதற்கு சமம்.எனவே மாணவர்கள் அனை வரும் நன்றாக படித்து சாதிக்கணும்.மற்றவர்கள் மதிக்கும் அளவு உயரனும்.நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். நான் மறமடக்கி அரசுப்பள்ளியில் பயின்றவன்.எனக்கு உயர்கல்வி படிக்க வசதி இல்லை.கலைஞர் தந்த இலவச உயர்கல்வியால் எனது கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதே போல் ஆலங்குடி பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கலை அறிவியல் கல்லூரியை தந்தவர் நம் தமிழக முதல்வர் தான்.எனவே மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் ஒன்றியக் குழுத்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் ( மேற்கு) தங்கமணி அரு.,வடிவேலு( தெற்கு) நகரச்செயலாளர் பழனிக்குமார், ஒருங்கிணை ந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் மாரிமுத் து, இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனிய சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர், ஆசிரி யர்கள் மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
- ஆசிரியர்களுடன் அன்பில்” நிகழ்ச்சி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 'ஆசிரியர்களுடன் அன்பில்" நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கொரோனா காலத்தில் கற்றல், கற்பித்தல் திறன்களை தடைபடாமல் மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்து, இன்று தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு வருகை தந்துள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பல்வேறு விதமான கோரிக்கைகள் இருக்கும். இக்கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர், மாணவர்களிடையேயான உறவுகள் இரத்த பந்தம் பாசத்தை போன்றதாகும்.
எனவே ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை கல்வியில் முன்னேற்றி அவர்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு பொதுமக்களிடையே கிடைக்கப்பெறும் அங்கீகாரமாகும். ஆசிரியர் மனசுப் பெட்டி மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைசசர் தெரிவித்தார்.
- மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
- அரிமளம் அரசு பள்ளியில் ரூ.10 லட்சத்தில் புதிய வகுப்பறை திறப்பு விழா
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்தினை, அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது,
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியாரின் பங்களிப்புடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
மாணவ, மாணவியர்கள் தற்பொழுது அரசுப் பள்ளிகளில் பயில்வதற்கு அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதன்மூலம் நடப்பாண்டில் சுமார் 5 லட்சம் மாணவி, மாணவியர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உயர்கல்வி பெறும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் கல்விகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் வழங்கப்படுவதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர்.
எனவே மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- மாணவர்கள் போராட்டத்தால் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் பூட்டினார்
- சாலை மறியலில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள இச்சடி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கும்முப்பட்டி, இச்சடி, முள்ளுர், முக்காணிப்பட்டி கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இச்சடி முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி மற்றும் துணை வட்டாட்சியர் கவியரசு, ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி, ஆலங் குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் செம்பட்டிவிடுதி போலீசா ர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த கடையை மூடுவதாக கூறி தாசில்தார் மற்றும் அதிகாரிகள முன்னிலையில் கடைக்கு பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 390 மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது
- டிரைவர் தப்பி ஓட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 390 மது பாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை பல இடங்களில் நடப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதாபண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.அதன் பேரில் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக ஆலங்குடி பகுதி யில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி இன்று ஆலங்குடி அண்ணாநகர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்த முயன்றனர்.ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது. வாகத்தை பிடிப்பதற்காக போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த ஓட்டுநர், வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில், 390 மது பாட்டில் இருப்பது தெரியவந்தது. பின்னர் வாகனத்துடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
- மின்வயர்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- ஆழ்குழாய் கிணற்றில் இருந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பகுதியில் உள்ள பல்வேறு ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின்வயர்களை சில மர்மநபர்கள் திருடிச்செல்வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், வேம்பங்குடி பகுதியில் சிங்காரம் என்பவரது தோட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சிலர் மின்வயர்களை திருடியது தெரியவந்தது.
அவர்களை அப்பகுதியினர் விரட்டிச்சென்று , ஒருவரை பிடித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சேந்தன்குடியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பதும், பல இடங்களில் மின்வயர்களை சிலரோடு சேர்ந்து திருடி விற்றது தெரியவந்தது. அவர் அளித்த தகவலைத்தொடர்ந்து, அதே ஊரரைச் சேர்ந்த ஆர்.மனோஜ் , தமிழ்குமார்ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கீரமங்கலத்தில் உள்ள பழைய இரும்புக்கடை வியாபாரியிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
- அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்களை அனுமதிக்க கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது
- உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றுவிடும் முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் ஆண்டிற்கு ஒரு முறை மட்மே விவசாயம் செய்யப்படுகிறது. அதிலும் பறவையினங்கள், எலி போன்றவற்றால் போதிய மகசூல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே உரிய காலத்தில் அதிக மகசூல் பெறவும், 10 சதவீதத்திற்கும் குறைவாக உரம் பயன்படுத்தப்படும் சிஆர் 1009, ஆடுதுறை 37 போன்ற நெல் ரகங்களை புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதித்திட வேண்டும் என்று கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் கொக்குமடை ரமேஷ், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது, மற்ற நெல் ரகங்களுக்கு 90 சதவீதம் வரை பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்த வேண்டும், ஆனால் சிஆர் 1009, ஆடுதுறை 37 போன்ற ரக நெல்களுக்கு 10 சதவீதம் உரம் பயன்படுத்தினால் போதும், எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி சிஆர் 1009, ஆடுதுறை 37 நெல் ரகங்களை மாவட்டத்தில் அனுமதித்திட வேண்டும். மேலும் உரிய காலத்தில் யூரியா, டிஎபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ்போன்ற உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
- ஊராட்சிமன்றத் தலைவர்களுடன் கலெக்டர் கலந்தாலோசனை நடைபெற்றது
- அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு நடந்தது
புதுக்கோட்டை:
75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், காணொலிக்காட்சி வாயிலாக அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அனைத்து இல்லங்களிலும் 13, 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடப்படவுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கொடியேற்றுவதற்காக அனைத்து இல்லங்களுக்கும் கொடிகள் சென்று சேரும் வகையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் மூலமாக கொடியேற்றப்படுவதை, சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 15-ந் தேதி அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் அதிக அளவிலான பொதுமக்கள் பங்கேற்கவும், கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது
- குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் எஸ்டிபிஐ கட்சி 14-வது ஆண்டு தொட தினம் மற்றும் வெறுப்பு அரசியல் எதிர்ப்பு பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாள ர் அப்துல்ராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் முகமது முஹைதீன் அனைவரையும் வரவேற்றார்.
ஆலங்குடி தொகுதி து ணைத் தலைவர் ராயல் கனி எஸ்டிபிஐ கட்சியின் அப்துல் சுபஹான், மருத்துவர் அணி தலைவர் டி எஸ் எம் ஜமால்முகமது ஆகியோர் முன் னிலையில் வகித்தனர்.
மயானம் அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆலங் குடி அரசமரம் மற்றும் பழைய நீதிமன்றம் அருகில் உள்ள இரண்டு டாஸ்மார்க் கடைகளை அப்புறப்படுத்தவும், ஆலங்குடியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட தலைவர்கள் ஸலாஹுதீன், நபிஷா பேகம், அபூபக்கர் சித்திக் , மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆலங்குடி கிளை தலைவர் பீர் முகமது நன்றி கூறினார்.






