என் மலர்
புதுக்கோட்டை
- ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தார்
- பரோலில் வெளியே வந்தவர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி பெரியார்நகர் ராசு மகன் சரவணன்(வயது 40). இரட்டை ஆயுள் தண்டனை கைதியான இவர், பரோலில் வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு வயிற்றுவலி ஏற்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பரோலில் வந்த கைதி உயிரிழந்த விவகாரம் பொன்னமராவதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
- லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
- போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி கடைவீதியில் லாட்டரி சீட்டு விற்பதாக ஆலங்குடி காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பாரதிநகரை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (வயது 25) மூன்று இலக்க லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை பார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.16 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிடையில் அடைக்கப்பட்ட 34 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
- மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் இருக்கும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில், ஆவணம் பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி-மதலைமேரி. இந்த தம்பதியினர் ஆடுகள் வளர்த்து தொழில் செய்து வந்தனர்.
வழக்கம்போல் நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, வீட்டின் அருகே உள்ள கிடையில் 38 ஆடுகளையும் அடைத்துவிட்டு இரவில் தூங்க சென்றனர்.
விடியற்காலையில் எழுந்து பார்த்த போது பட்டியில் அடைத்து வைத்திருந்த 38 ஆடுகளும் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்திற்கு சென்று தேடிய போது 4 ஆடுகள் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மீதம் 34 ஆடுகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன 34 ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றி அர்ப்பணிக்கப்பட்டது
- முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
புதுக்கோட்டை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், எரிசக்திதுறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.161 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார். அதன்படி புதுக்கோட்ைட மாவட்டம் கறம்பக்குடி துணை மின்நிலையத்தில் 10 மெகா வோல்ட் ஆம்பியர்ஸ் பவர் மின்மாற்றியை 16 மெகா வோல்ட் ஆம்பியர்ஸ்சாக தரம் உயர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் காணொலி காட்சி வழியாக அர்ப்பணித்தார்.
அப்போது கறம்பக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, ஆலங்குடி செயற்பொறி யாளர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி மின் பொறியாளர்கள் முத்து, அப்துல் வஹாப், சி.பி.ஐ.எம். ஒன்றிய செயலாளர் வீரமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- வேனில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
- ஓட்டுநர் கைது
ஆலங்குடி, ஆக.16-
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மகேந்திரவேனில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆலங்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கலிபுல்லா நகர் வளைவு முக்கத்தில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி பரி சோதனை செய்தபோது, அதில் 390 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்ததோடு, வாகனத்தின் உரிமையாளரும், ஓட்டுநனருமான கறம்பக்குடி தாலுகா மழையூரைச்சேர்ந்த அருணாச்சலம் மகன் கோவிந்தசாமியை கைது செய்து, புதுக்கோட்டை குடிமைமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு அலுவலரிடம் ஆலங்குடி காவல் ஆய் வாளர் அழகம்மை நேற்றிரவு ஒப்படைத்தார்.
- நாடியம்மன் கோவிலில் சம பந்தி விருந்து நடைபெற்றது
- பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோ யிலில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட அலுவலர் ரம்யாதேவி தலைமை தாங்கினார்.
ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி முன்னிலை வகித்தார். ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், புதுக்கோட்டை மாவட்ட சங்கத் தலைவரும், கிராம நிர்வாக அலுவலருமான லோகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமான கலந்துகொண்டனர். ஜமபந்தி விருந்தில் நகர மக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொது ம மக்கள் ஏராள மானோர் கலந்துகொண்டனர்.
- மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது
- 23 கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. வன்னியப்பிள்ளைவயல் கிராமத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நீதிராஜ் முன்னிலையில் நடைபெற்றக் கூட்டத்தில், கிராமபொதுமக்கள், அரசு அலுவலர்கள், காவல்த்துறையினர் கலந்து கொண்டனர். அப்போது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்தல், தூய்மையான குடிநீர் வழங்குதல், இலக்கு மக்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட 23 கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று பின்பு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)தேவிகாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இறையருள், கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள்,வார்டு உறுப்பினர்கள்,கிராம உதவியாளர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பொன்னமராவதி பகுதியில் நாளை மின் நிறுத்தப்படுகிறது
- மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது
புதுக்கோட்டை:
கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன் கிழமை( நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், பொன்னமராவதி, வேந்தன்பட்டி, தொட்யம்பட்டி, பிடாரம்பட்டி, வளர்ப்பட்டி, வேகுப்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, மைலாப்பூர், ஆலவயல், நகரப்பட்டி, குழிபிறை, பாளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- 550 மது பாட்டில்கள் பறிமுதல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் சுதந்திரதினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையை பயன்படுத்தி, முதல் நாளே டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். அவற்றை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அன்னவாசல் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடை மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் அரசு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட கல்லாங்குடி மணிகண்டன் (வயது 20), மாரப்பட்டி இளங்கோவன் (42), ராமச்சந்திரன், மாறன் (60) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 550 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர் கவிதா ராமு, திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
- 101 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரத்து 26 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு வருகை தந்த கலெக்டர் கவிதா ராமுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வரவேற்றார்.
இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர் கவிதா ராமு, திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தீயணைப்பு மீட்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 609 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலன், சமூக பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரத்து 26 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சமி தமிழ்செல்வன், மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட திட்ட அலுவலர் கருப்பசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், ஆர்.டி.ஓ. (பொ) கருணாகரன், புதுக்கோட்டை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- அவதூறு பதிவிட்ட அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
- அமைச்சர் பயனாளிகளைச் சந்தித்துப் பேசினாா்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் சுற்றுப்பயணம் சென்றபோது, அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளைச் சந்தித்துப் பேசினாா். இதை, செரியலூா் கிராமத்தைச் சோ்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து, செரியலூரைச் சோ்ந்த சங்கா் அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீஸாா் அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்
- சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- 300-க்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நடமாடும் மருத்துவக் குழு சாா்பில் ஸ்ரீ பொற்பனைக்கோட்டை முனீஸ்வரா் கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சா்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம், கரோனா பரிசோதனை போன்ற பரிசோதனைகளை டாக்டா் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மேற்கொண்டனா். இதில், 300-க்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.






