search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் சுதந்திர தினவிழா - கலெக்டர்  கவிதா  ராமு தேசிய கொடியை ஏற்றினார்
    X

    புதுக்கோட்டையில் சுதந்திர தினவிழா - கலெக்டர் கவிதா ராமு தேசிய கொடியை ஏற்றினார்

    • தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர் கவிதா ராமு, திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
    • 101 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரத்து 26 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு வருகை தந்த கலெக்டர் கவிதா ராமுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வரவேற்றார்.

    இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர் கவிதா ராமு, திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தீயணைப்பு மீட்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 609 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலன், சமூக பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரத்து 26 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சமி தமிழ்செல்வன், மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட திட்ட அலுவலர் கருப்பசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், ஆர்.டி.ஓ. (பொ) கருணாகரன், புதுக்கோட்டை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    Next Story
    ×