என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THEFT OF 34 GOATS"

    • கிடையில் அடைக்கப்பட்ட 34 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    • மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் இருக்கும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில், ஆவணம் பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி-மதலைமேரி. இந்த தம்பதியினர் ஆடுகள் வளர்த்து தொழில் செய்து வந்தனர்.

    வழக்கம்போல் நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, வீட்டின் அருகே உள்ள கிடையில் 38 ஆடுகளையும் அடைத்துவிட்டு இரவில் தூங்க சென்றனர்.

    விடியற்காலையில் எழுந்து பார்த்த போது பட்டியில் அடைத்து வைத்திருந்த 38 ஆடுகளும் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்திற்கு சென்று தேடிய போது 4 ஆடுகள் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மீதம் 34 ஆடுகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன 34 ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    ×