search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் - அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவுரை
    X

    மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் - அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவுரை

    • மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
    • அரிமளம் அரசு பள்ளியில் ரூ.10 லட்சத்தில் புதிய வகுப்பறை திறப்பு விழா

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்தினை, அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியாரின் பங்களிப்புடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

    மாணவ, மாணவியர்கள் தற்பொழுது அரசுப் பள்ளிகளில் பயில்வதற்கு அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதன்மூலம் நடப்பாண்டில் சுமார் 5 லட்சம் மாணவி, மாணவியர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

    அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உயர்கல்வி பெறும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் கல்விகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் வழங்கப்படுவதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர்.

    எனவே மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×