என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு மாணவர்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்
- வெள்ளை நிற சீருடை வழங்கும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், வெள்ளைநிற சீருடை அணியும் நிகழ்ச்சியில், முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளைநிற சீருடையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஹிப்போகிராடிக் உறுதிமொழியினை, கலெக்டர்முன்னிலையில் எடுத்துக்கொண்டனர். மேலும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்திய கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் ேபாது, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நடப்பாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகளின் வெள்நிளைற சீருடை அணியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களுக்க சீருடைகள் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். மாணவ, மாணவிகளால் நிகழ்த்திக்காட்டப்பட்ட கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பான முறையில் அமையப்பெற்றுள்ளது.
மேலும் மாணவ, மாணவிகள் கலைத் திறனுடன் நல்ல முறையில் படித்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பெருமை சேர்த்து, செல்லும் இடங்களில் எல்லாம் மருத்துவப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மருத்துவர்கள், மாணவர் கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கடல் குதிரை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்
- அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
புதுக்கோட்டை:
அறந்தாங்கி அருகே கடலோர பகுதியில் வனசரகர் மேகலா தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு புதுக்குடி கடற்கரையில் சந்தேகப்படும்படியாக நின்ற முதியவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகப்பட்டு அவரை சோதனை செய்த போது, அவர் கையில் இருந்த பையில் அரசால் தடை செய்யப்பட்ட 21 கடல் குதிரை ஒரு கடல் அட்டை இருந்ததை பார்த்து அவற்றை பறிமுதல் செய்து விசாரித்த போது கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (வயது 65) என்பதும், இவர் இதனை விற்க வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து பணியில் வன சரகர் மேகலா தலைமையில் சோணமுத்து அன்புமணி முத்துராமன் உள்ளிட்டோர் சென்றனர்.
- இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.
பொன்னமராவதி:
மாண்டவர் மீண்டார் போன்ற அதிசய நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்ந்தாலும் அது அவர்களின் உறவினர்களிடம் மட்டுமல்லாமல் அப்பகுதியில் பல நாட்கள் வரை பேசும்பொருளாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் பொன்னமராவதி பகுதியில் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60), விவசாயி. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமரவாதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சண்முகம் திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர்.
ஊரை நெருங்கிய போது மயங்கிய நிலையில் இருந்த சண்முகம் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடினர். மேலும் அவர்கள் ஆலம்பட்டி விலக்கு மற்றும் முரண்டாம்பட்டி விலக்கு உள்ளிட்ட மூன்று இடங்களில் மருத்துவமனையில் இறந்து கொண்டு வந்ததால் சாலையின் குறுக்கே வைக்கோல் மற்றும் பல்வேறு பொருட்கள் போட்டு எரித்து சடங்குகள் செய்து பின் முரண்டாம்பட்டியில் உள்ள அவரது வீட்டின் திண்ணையில் சண்முகத்தை வைத்தனர்.
இதற்கிடையே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்த அவரது மகன் சுப்பிரமணியன் மாலையை கழற்றினார். பின்னர் தந்தைக்கு பால் ஊற்றினார். அப்போது திடீரென்று அருள் வந்த நிலையில், என் தந்தை சாகவில்லை, அவர் பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் சுப்பிரமணியனை தேற்றினர். தந்தை இறந்த வேதனையிலும், அவர் மீதுள்ள பாசத்திலும் அவ்வாறு கூறியதாக நினைத்தனர்.
சிறிது நேரத்தில் சண்முகம் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டன. இதனைக்கண்ட உறவினர் ஆச்சரியத்துடனும், பதட்டத்துடனும் அவரை பார்த்தனர்.
சிலர் அவரின் அருகே அமர்ந்து சத்தம் போட்டு கூப்பிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த சண்முகம் பேசத்தொடங்கினார். உடல் நலமும் சீராகி இருந்தது.
இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.
- எண்ணெய் கடையில் தீ விபத்து ஏற்பட்டது
- பொருட்கள் எரிந்து சேதம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டவுனில் உள்ள காமராஜர் தெருவில் அப்துல் ரஜாக் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அருகில் உள்ள கடைகளில் தீப்பற்றுவதற்குள் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் தீ பற்றியதால் கடையில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தப்பினர். எண்ணெய் கடையில் உள்ள எண்ணை டின்கள் மற்றும் அதற்குண்டான உபகரணங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- மது போதையில் சுற்றித்திரிந்த பள்ளி ஆசிரியர் மர்மச்சாவு
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் வேலுச்சாமி (வயது 32). இவர் கொன்றைக்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 12-ந்தேதி முதல் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துவிட்டு மது போதையில் ஆலங்குடி பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆலங்குடி அரசமரம் அருகில் உள்ள சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். நகரின் மையப்பகுதியில் இறந்து கிடந்ததால் இன்று அதிகாலை மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டடர் அழகம்மை மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தது மது போதையில் சுற்றித்திரிந்த ஆசிரியர் வேலுச்சாமி என்பது உறுதியானது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை
- உண்டியல் காணிக்கை ரூ.6.50 லட்சம் வசூல் வந்துள்ளது
- வீரமாகாளியம்மன் கோவில்
புதுக்கோட்டை:
அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இவ்வாலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் நேற்று உண்டியல் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் பள்ளி மாணவிகள் வரவழைக்கப்பட்டு உண்டியல் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 493 ரொக்கப் பணமும், 32 கிராம் தங்கம் மற்றும் 68 கிராம் வெள்ளி நகைகள் உண்டியலில் இருந்து தெரியவந்தது. இந்த பணியின்போது செயல் அலுவலர் முத்துக்குமரன், ஆய்வாளர் யசோதா உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
- 1291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- பொன்னமராவதி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் தேனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கலந்து கொண்டார்.
மேலும் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 1291 பயனாளிகளுக்கு ரூ 2.08 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அப்போது பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
மேலும் அரசின் பல்வேறு துறைகளைச்சார்ந்த அலுவலர்கள் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். முகாமில் தோட்டக்கலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. முகாமில் பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, தேனூர் ஊராட்சிமன்றத்தலைவர் வி.கிரிதரன், வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- வெங்கடேஸ்வரா பள்ளியில் பிஐஎஸ் கிளை தொடக்க விழா நடைபெற்றது
- புதுக்கோட்டை திருக்கோகர்ணம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் மதுரை இந்திய தர நிர்ணய அமைவனமும் இணைந்து நடத்திய புதுக்கோட்டை பிஐஎஸ் தர நிர்ணய சங்கத்தின் கிளை துவக்க விழா நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவினை தலைமையேற்க மாணவர்கள் நர்மதா, ஹரினிபிரியா, சுந்தர், முகமது சாஃபிக் மற்றும் ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை கிளை மேலாளர்கள் சிவகுமார் மற்றும் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இந்திய தர நிர்யணத்தின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் மேம்பாட்டிற்கான ஒரு கருவி "பிஐஎஸ் கேர் ஆப்" ஆகியவை பற்றி விளக்கி கூறினர்.
அப்போது அவர்கள் பேசும்போது "பொதுவாக கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்கும்போது அந்தப் பொருள் தரமானதாக உள்ளதா என்பதை சரிபார் த்து வாங்கவேண்டும். சந்தையில் ஏராளமான தரமற்ற பொருட்கள் விற்கப்படும் நிலையில் வாங்கும் பொருளில் இந்திய தர நிர்யண முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்கவேண்டியது அவசியம் என்று கூறினர். மேலும் பொருள்களின் தர நிர்ணயம் பற்றிய மாணவர்களுக்கான வினாடிவினா போட்டியினை நடத்தி ரொக்கப்பரிசு வழங்கினாரகள். பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிஐஎஸ் கிளப்பின் மாணவர் தலைவர்களாக நர்மதா, ஹரினிபிரியா, சுந்தர், முகமது சாஃபிக் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த அமைப்பின் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி பள்ளியின் முதல்வர் பேசும்போது, மாணவர் கள், பெற்றோர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பொருள்கள் வாங்கும்போது தரமான ஐஎஸ்ஐ முத்திரை உள்ள பொருட்களை வாங்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் துணைமுதல்வர் குமாரவேல், ஆசிரியர;கள் கமல்ராஜ், துர் காதேவி, அபிராமசுந்தரி, ராஜா, உதயகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து க்கொண்டனர்.
- 2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்
- டிரைவர் தப்பி ஓடிவிட்டார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குடிமை பொருள் குற்றபுலனாய்வுதுறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை தாசில்தார் வரதராஜன் தலைமையிலான அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ வந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய மறித்த போது வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடு த்து வாகனத்தில் இருந்த 2 ஆயிரத்து 38 கிலோ ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாவட்ட குடிமைபொருள் குற்றப்புலனய்வு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர். இதே போல் கே.புதுப்பட்டி பகுதியில் சின்னசாமி மகன் கைலாசம் என்பவர் 636 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த அரிசியையும் பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார் வரதராஜ், புதுக்கோட்டை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கைலாசம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிக்கு சென்ற மாணவன் மாயமானார்
- 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் நவீன்ஜனா (வயது 16 ). இவர், பாத்திமாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள மாஞ்சன்விடுதி அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற நவீன்ஜனா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பள்ளிக்கு சென்ற கேட்ட போது இன்று வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். அக்கம் பக்கம் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
- டாஸ்மாக் பாரில் சலூன் கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
- கொலையா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள கொத்தகம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சத்திய செல்வன் (வயது 35). சலூன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் உள்ள அரசு மதுபானக்கடைக்கு அருகிலுள்ள பாரில் சமையல் செய்யும் கூடத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இன்று காலை பாரில் வேலை செய்யும் ஊழியர் பணிக்கு வந்தபோது சத்தியசீலன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுபற்றி அவர் உடனடியாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார் பிணமாக கிடந்த சத்திய செல்வன் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அளவுக்கு அதிகமான மது போதையில் தவறி குப்புற விழுந்ததில் அவர் இறந்தாரா அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இறந்த சத்திய செல்வனுக்கு தேவி என்ற மனைவியும், கோபிகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். இந்த சம்பவம் கந்தர்வகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்சி காயமடைந்தார்
- 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம்
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை அருகே கோமாபுரம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மணியம்மை (வயது 65). இவர் வீட்டின் அருகில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் வீதியில் இருப்பதால் அந்த வீதியை ஆலமர தெரு என்று அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இந்த நிலையில் பழமை வாய்ந்த இந்த ஆலமரம் 3 ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலையும் எதிர்கொண்டு நிமிந்து நின்றது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கிளைகளில் நீர் தேங்கி கனம் தாங்காமல் மிகப்பெரிய ஆலமரக்கிளை ஒன்று மணியம்மை வீட்டின் மீது விழுந்தது. இதில் மணியம்மை காயம் அடைந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயம் அடைந்த மணியம்மையை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் ஆல மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கான பாதையை சரி செய்து கொடுத்தனர். ஆலமரத்தின் கிளைகள் பகல் நேரத்தில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.






