என் மலர்
உள்ளூர் செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ.6.50 லட்சம் வசூல்
- உண்டியல் காணிக்கை ரூ.6.50 லட்சம் வசூல் வந்துள்ளது
- வீரமாகாளியம்மன் கோவில்
புதுக்கோட்டை:
அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இவ்வாலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் நேற்று உண்டியல் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் பள்ளி மாணவிகள் வரவழைக்கப்பட்டு உண்டியல் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 493 ரொக்கப் பணமும், 32 கிராம் தங்கம் மற்றும் 68 கிராம் வெள்ளி நகைகள் உண்டியலில் இருந்து தெரியவந்தது. இந்த பணியின்போது செயல் அலுவலர் முத்துக்குமரன், ஆய்வாளர் யசோதா உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story






