என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு மாணவர்கள் பெருமை சேர்க்க வேண்டும் - கலெக்டர் கவிதா ராமு பேச்சு
- புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு மாணவர்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்
- வெள்ளை நிற சீருடை வழங்கும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், வெள்ளைநிற சீருடை அணியும் நிகழ்ச்சியில், முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளைநிற சீருடையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஹிப்போகிராடிக் உறுதிமொழியினை, கலெக்டர்முன்னிலையில் எடுத்துக்கொண்டனர். மேலும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்திய கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் ேபாது, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நடப்பாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகளின் வெள்நிளைற சீருடை அணியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களுக்க சீருடைகள் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். மாணவ, மாணவிகளால் நிகழ்த்திக்காட்டப்பட்ட கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பான முறையில் அமையப்பெற்றுள்ளது.
மேலும் மாணவ, மாணவிகள் கலைத் திறனுடன் நல்ல முறையில் படித்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பெருமை சேர்த்து, செல்லும் இடங்களில் எல்லாம் மருத்துவப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மருத்துவர்கள், மாணவர் கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






