என் மலர்
பெரம்பலூர்
- சிறுவாச்சூரில் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி தொடக்கம்
- போட்டிகளில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.
பெரம்பலூர்
தேசிய பாராஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் ராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய பாராஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், மாவட்ட வாலிபால் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023 போட்டி சிறுவாச்சூர் தனியார் பள்ளியில் இன்று (7ம்தேதி) மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. போட்டியை பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைக்கிறார்.
இந்த போட்டியில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஜார்கண்ட் உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிகளில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ராம்குமார், துணை தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர் என தெரிவித்தனர்.
- 10-ம் வகுப்பு பொதுதேர்வு முதல்நாளில் 160 பேர் தேர்வு எழுதவில்லை
- 60 பறக்கும்படை மற்றும் 540 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 600 பேர் தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. 10-ம் வகுப்பு அரசு தேர்வு நேற்று துவங்கியது. இந்த தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 143 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 288 மாணவர்களும், 3 ஆயிரத்து 905 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 193 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 60 பறக்கும்படை மற்றும் 540 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 600 பேர் தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போலீஸ் பாதுகாப்பு போன்ற பணிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று நடந்த தமிழ்பாட தேர்வினை 4 ஆயிரத்து 172 மாணவர்களும், 3 ஆயிரத்து 861 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 33 பேர் தேர்வெழுதினர். 116 மாணவர்களும், 44 மாணவிகளும் என மொத்தம் 160 பேர் தேர்வெழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நான்கு கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது
- பொதுமக்கள் வந்து திருத்தங்கள் செய்து கொள்ள பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் வட்டாரத்திற்கு லாடபுரம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு பூலாம்பாடி (கிழக்கு), குன்னம் வட்டாரத்திற்கு கீழப்புலியூர் (தெற்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு சிறுகன்பூர் ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு மேலப்பழுவூர், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு தர்மசமுத்திரம், செந்துறை வட்டாரத்திற்கு வஞ்சினபுரம், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு விளந்தை (வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- முத்தமிழ்விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா நடைபெற்றது
- மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டு
பெரம்பலூர்
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இதற்கு கல்லூரியின் முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் விஜயலெட்சுமி கலந்து கொண்டு நுண்கலை போட்டிகளில் வெற்றிபெற்ற 120 மாணவ-மாணவிகளுக்கும், பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற 17 மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். கடந்த 1-ந்தேதி நடைபெற்ற கல்லூரியின் முத்தமிழ் விழாவில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியின் முதல்வர் பானுமதி இலக்கியத்தில் அறம் என்ற தலைப்பில் பேசி, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் அன்றைய தினம் மதியம் நடந்த கல்லூரி விளையாட்டு விழாவில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் கலந்து கொண்டு பேசி விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 151 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
- வரும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது
- பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணியளவில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு, தக்க சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவண செய்யப்படும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- வயலுக்கு சென்ற போது தவறி மின்வேலியில் விழுந்தார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்
வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்(வயது 70) வயலுக்கு குளிக்க சென்றார். அப்போது வரப்பில் நடந்து சென்றபோது, சோளக்காட்டின் வரப்பு ஓரத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியின் மீது அவர் தவறி விழுந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அப்போது அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாயும் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி செத்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 24ம்தேதிமுகூர்த்தகால் நடும் விழாவுடன் தொடங்கி தேரோட்டம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந் தேதி முகூர்த்தகால் நடும் விழாவுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 28 - ந் தேதி வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அரங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கடந்த 3- ந் தேதி நடந்தது.நேற்று (5ம்தேதி) பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடந்தது. பிரபாகரன் எம்.எல்.எ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் கோயில் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று இரவு நிலை நின்றது. அலங்கரிக்கப்பட்டு தேரில் பூமாதேவி, ஸ்ரீதேவி சமேத ஸ்ரீமதனகோபாலசாமி அமர்ந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
- மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று (5-ந் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் கால யாக சாலை பூஜை கடந்த 2-ந் தேதி முதல் தொடங்கியது. 20- ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.3 ே காடி செலவில் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதில் கோயில் ராஜநிலை கதவுகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் தங்க முலாம் பூசப்பட்டுளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 3 யாக சாலைகள் மொத்தம் 61 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடத்துவதுற்று கடந்த மாதம் 27-ந் தேதி கோவிலில் யானை முகத்தான் வழிபாடு நடத்தி, இற அனுமதி பெற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி யானை முகத்தான் வழிபாடு, செல்வ வழிபாடு, நவகோள்கள் வழிபாடு, பசு வழிபாடு நடத்தி இறை அனுமதியும், மறையோர் அனுமதியும் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து பூமி வழிபாடும், லட்சுமி வேள்வியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாகசாலை பூஜை கடந்த 2-ந் தேதி மாலை தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 மற்றும் 3 -ம் கால யாக சாலை ாபூஜைகளும், நேற்று (4-ந் தேதி) 4 மற்றும் 5-ம் கால யாக சா லை பூகைளும் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்குடமுழக்கு விழாவை முன்னிட்டு இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் விமானம், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றியும், மதுரகாளியம்மன், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- 24 மணி நேரமும் மது விற்பனை
- சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பேரூராட்சியாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பாலக்கரை பகுதியில் 2 அரசு மதுபான கடைகள் இருந்தன. அப்போது, கோவில் மற்றும் பள்ளிக்கூடம் அருகில் இருப்பதை காரணம் காட்டி அங்குள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் அரும்பாவூரில் இருந்த 2 மதுபான கடைகளையும் மூடிவிட்டது. பின்னர் ஊருக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மதுபான கடைகளை திறக்காமல் இருந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் அரும்பாவூரில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சட்ட விரோதமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட சந்து கடைகளை திறந்து, 24 மணி நேரமும் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் குடும்ப பெண்கள் பலரும் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அரும்பாவூர் பாலக்கரையில் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் சந்து கடைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரும்பாவூர்- பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர்
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
பெரம்பலூர்:
தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 வகுப்புக்கு இன்றுடன் (புதன்கிழமை) தேர்வு முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு நாளை (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 143 பள்ளிகளை சேர்ந்த 4,288 மாணவர்களும், 3,905 மாணவிகளும் என மொத்தம் 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர். பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீஸ் பாதுகாப்பு என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
- தனியாக வசித்து வந்தார்
- மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் பழைய காலனியை சேர்ந்த முத்துசாமியின் மனைவி நல்லசெல்லம் (வயது 60). தனியாக வசித்து வந்த நல்ல செல்லம் கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.இந்த நிலையில் நல்ல செல்லம் மனநிலை பாதிக்கப்பட்டது போல் யாருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். வீட்டில் இருந்த நல்ல செல்லம் திடீரென்று மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். அப்போது தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நல்ல செல்லத்தின் உடல் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நல்ல செல்லம் உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர்.
- முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
- பள்ளி வகுப்பறையை பிளஸ்-2 மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
பெரம்பலூர்
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் தேர்வு முடிந்த பின்னர், தங்களது வகுப்பறையில் அமரும் இருக்கைகள் உள்ளிட்டவற்றை உடைத்து சேட்டையில் ஈடுபட்டு செல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன.அவ்வாறு இல்லாமல் பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணித பிரிவு வகுப்பு மாணவர்கள் 28 பேர் நேற்று முன்தினம் தங்களுக்கு தேர்வு முடிந்தாலும், நேற்று தாங்கள் பயின்ற பள்ளிக்கு வருகை தந்து தங்களது வகுப்பறையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் அவர்கள் கரும்பலகைக்கு வண்ணம் பூசி, வகுப்பறை சுவருக்கு வர்ணம் தீட்டினர். மேலும் அவர்கள் தாங்கள் பயின்றதன் நினைவாக வகுப்பறையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவப்படத்தை மாட்டி விட்டு சென்றனர். அந்த மாணவர்களின் செயலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனும், பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரமும் பாராட்டினர். மேலும் இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது."






