என் மலர்
பெரம்பலூர்
- பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி பயில நேரடி சேர்க்கை முகாம் நடைபெற்றது
- முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்து
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் துணை தேர்வு எழுதாத மாணவர்கள் உயர் கல்வி, ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பில் சேர்தலுக்கான சேர்க்கை முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள் அல்லது தலைமையாசிரியர்களால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் முகாமிற்கு வரவழைக்கப்பட்டு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி சேர்க்கை செய்யப்பட்டது. நேற்று நடந்த முகாமில் வாலிகண்டபுரம், கீழப்புலியூர், எளம்பலூர், சிறுவாச்சூர், பூலாம்பட்டி, பாடாலூர், ஈச்சம்பட்டி, கூத்தூர் ஆகிய பள்ளியில் பயின்ற 11 மாணவர்கள் ஐ.டி.ஐ.யில் பிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற படிப்புகளில் நேரடி சேர்க்கை செய்யப்பட்டது. முகாமில் அந்த மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுரைகள் வழங்கி சேர்க்கை சான்றிதழ் வழங்கினர். இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முகாமில் அனைத்து பள்ளிகளில் இருந்தும் துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோருடன் வந்து உயர் கல்வி பயில நேரடி சேர்க்கை பெறலாம். இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு படிப்புகள் சார்ந்த வழிகாட்டலை வழங்கினர்.
- பெரம்பலூரில் கஞ்சா விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
பெரம்பலூர்,
ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சூரக்குழி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 19), ராஜகுரு (19), சந்திரன் (24), ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 கிராம் எடை கொண்ட 8 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய ஆடித்திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மூக்குடி கிராம மக்களால் கண்டெடு க்கப்பட்டு, அறந்தாங்கியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளி யம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்து சமய அறநிலைக்கு சொந்தமான ஆலயத்தில் 29 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 18ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் மண்டக ப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தே ரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தினை ஊர் முக்கியஸ்தர்கள், இந்து சமய அறநிலை யத்துறையினர், கிராம மக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் தொட்டு இழுத்தனர். திருத்தேரில் அமர்ந்து அருள் பாலித்து வந்த ஸ்ரீ வீரமாகாளியம்மனை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற திருத்தே ரோட்டத்தில் முதல் கட்டமாக வாஉசி திடலிலிருந்து பெரியகடை வீதி வழியாக காளியம்மன் கோவில் அருகே திருத்தேர் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை காளியம்மன் கோவில் அருகே இருந்து தொடங்கி பெரியப்ப ள்ளிவாசல் வழியாக தேரடியை அடையும்.
- பெரம்பலூர் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றது
- ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் பொன்விழா ஆண்டை யொட்டி மாவட்ட அளவிலான அறிவுத் திறன் போட்டிகள் நடந்தது.நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் வேல் இளங்கோ தலைமை வகித்தார், பொரு ளாளர் புலவர் செம்பியன், இணை செயலாளர் பாவலர் சிற்றரசு ஆகியோர் முன்னி லை வகித்தனர். செயலாளர் முகுந்தன் வரவேற்றார். மாவட்டத்தின் அனைத்து பகுதியிலான 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையி லான மாணவ, மாணவிகள் அறிவுத்திறன் போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் நடுவர்க ளாக பதியம் சாரங்கபாணி, அகழ் வினோதினி , கவிஞர் தேனரசன், கவியோவியன் ஆகியோர் வெற்றியா ளர்களை தேர்வு செய்தனர். பின்னர் வெற்றிப்பெ ற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட ப்பட்டது. முடிவில் துணை செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.
- பெரம்பலூரில் மின் நுகர்வோருக்கு பெயர் மாற்றும் முகாம்
- ஆணைகளை எம்.எல்.ஏ பிரபாகரன் வழங்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மின் வாரிய சிறப்பு பெயர் மாற்றம் முகாமில் 60 பேருக்கு பெயர் மாற்றம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்தார்.தமிழக அரசு சார்பில் மின் நுகர்வோர்கள் எளிமை யாக மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்காக மின்வாரியம் மூலம் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது.இதன்படி பெரம்பலூர் நகர் பகுதியில் நடந்த முகாமில் உடனடி பெயர் மாற்றம் செய்து கொண்ட மின் நுகர்வோர் பயனா ளிகளுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பிரபாகரன் கலந்துகண்டு பயனாளிகளுக்கு பெயர் மாற்றத்தி ற்கான ஆணையினை வழங்கினார்.இதில் மின்வாரிய மேற்பா ர்வை பொறியாளர் அம்பிகா கூறியதாவது-அரியலூர் மற்றும் பெர ம்பலூர் மின் கோட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பேர் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ள நிலையில், தற்பொழுது தமிழக அரசின் சார்பிலும் தமிழக மின்வாரியத்தின் மூலம் பெயர் மாற்றத்தை எளிமை ப்படுத்தும் வகையில் இந்த ஒரு மாத சிறப்பு முகம் ஏற்பாடு செய்ய ப்பட்டு ள்ளது நடைபெற்று வருகிறது.இந்த முகம் மூலம் குறைந்தது 60 ஆயிரம் பேருக்கு மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயி க்கப்பட்டு ள்ளது. எனவே பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோ ர்கள் தேவையான ஆவணங்களை முகா ம்களில் அலுவல ர்களிடம் கொடுத்து உடனடி யாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பி னை பயன்படுத்தி கொ ள்ளலாம் என தெரிவி த்தார்.நிகழ்ச்சியின் போது செயற்பொறியாளர்கள் சேகர், அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ் செல்வன், செல்வராஜ், காயத்திரி, பாண்டியன், வெங்கடேசன், உதவி மின் பொறியாளர்கள் சரவணன், இனிதா, அரவிந்த், அகமது மற்றும் மின்வாரிய ஊழியர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது
- 25 மின் அலுவலக மையங்களில் நடைபெறுகிறது
பெரம்பலூர்,
தமிழக அரசு சார்பில் மின் நுகர்வோர்கள் எளிமையாக மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மின் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் தொடங்கியது. பெரம்பலூர்-அரியலூர் கோட்டங்களில் உள்ள 25 மின் அலுவலக மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பெரம்பலூர் நகர் பகுதியில் நடந்த முகாமில் உடனடி பெயர் மாற்றம் செய்து கொண்ட மின் நுகர்வோர்களுக்கு பெயர் மாற்றம் செய்ததற்கான ஆணையை பிரபாகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.இதைத்தொடர்ந்து மேற்பார்வை பொறியாளர் அம்பிகா கூறுகையில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மின் கோட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பேர் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது தமிழக அரசின் சார்பிலும் மின்வாரியத்தின் மூலம் பெயர் மாற்றத்தை எளிமைப்படுத்தும் வகையில் இந்த ஒரு மாத சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் 60 ஆயிரம் பேருக்கு மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோர்கள் தேவையான ஆவணங்களை முகாம்களில் அலுவலர்களிடம் கொடுத்து உடனடியாக பெயர் மாற்றம் செய்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது கோட்ட செயற்பொறியாளர்கள் (பொது) சேகர், (பெரம்பலூர்) அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் (டவுன்) முத்தமிழ் செல்வன் (டவுன்), (கிராமியம்) செல்வராஜ் மற்றும் துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாம்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அரசு வேலை நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
- பெரம்பலூரில் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
- மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன் குறித்து கலந்துரையாடப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்கும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாடு குறித்த 3 நாள் பயிற்சி முகாம், பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஸ்ரீரங்கன் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய அடைவுத்திறனில் மாணவர்களின் அடைவுத்திறன் குறைவாக உள்ளதால், மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் கற்றல் விளைவுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கருத்தாளர்களாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் முழுமையான திறன் வெளிப்படும் வகையில் வினா அமைப்பு குறித்து மாற்றம் ஏற்படுத்தும் முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன் குறித்து கலந்துரையாடப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுனர்கள் செய்துள்ளனர்.
- வேன் உரிமையாளருக்கு ரூ.1¾ லட்சம் நிவாரணம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
- காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு
பெரம்பலூர் ,
லெப்பைக்குடிகாடு ஜமாலிநகர், மேற்கு தனிசாலை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்(வயது 46). மெக்கானிக்கான இவர் திருச்சி வரகனேரியில் சென்னை-திருச்சி புறவழிச்சாலையில் உள்ள இலகுரக வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 30.3.2017 அன்று ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 224 செலுத்தி ஒரு வேனை வாங்கினார். இதற்காக திருச்சி தில்லைநகர் சாலை ரோடு பகுதியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்சு நிறுவனத்தில் ரூ.11 ஆயிரத்து 376-க்கு சந்தா செலுத்தி காப்பீடு பெற்றிருந்தார்.அந்த வேன் கடந்த 16.5.2017 அன்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷாஜகான் 6.11.2017 அன்று தனது வாகனம் பழுது பார்க்கும் பட்டறை அருகே, அந்த வேனை நிறுத்தினார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அந்த வேனை காணவில்லை. யாரோ அந்த வேனை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஷாஜகான், மங்களமேடு போலீசில் புகார் செய்தார்.இது குறித்து போலீசார் 10.11.2017 அன்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் திருட்டு போன வேனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி மங்களமேடு போலீசார், அந்த வேனை காப்பீடு செய்திருந்த நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஷாஜகான், காப்பீட்டு நிறுவனத்தை அணுகி வேன் காணாமல் போனதற்கான வழக்குப்பதிவு அறிக்கை, போலீசார் அளித்த தடையின்மை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, காப்பீட்டு தொகையை வழங்கிட கேட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கு காப்பீட்டு தொகை வழங்காமல் காப்பீட்டு நிறுவனம் அலைக்கழித்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷாஜகான், காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர் மீது வக்கீல் இல.மானேக்சா மூலம், காப்பீட்டு நிறுவனத்தின் திருச்சி மேலாளர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினர். இதில் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாடு காரணமாகவும், நியூ இந்தியா அஷ்யூரன்சு காப்பீட்டு நிறுவனத்தின் திருச்சி மேலாளர் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண தொகையை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருந்தனர்.
- பெரம்பலூரில் மின் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தையும், அதே நாளில் பழங்குடியினர் இன பெண்கள் பாலியல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், அவற்றை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- துங்கபுரம் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
- ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை துங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை செல்வமணி, ஒன்றிய குழு உறுப்பினர் கருணாநிதி,தலைமை ஆசிரியர் செல்வகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்பிகா, தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினார்கள் உடன்ஆசிரியர்கள் மற்றும்மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் 145 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப் பட்டது.
- பெரம்பலூரில் பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- அம்பேத்கர் படத்துடன் கோஷங்களை எழுப்பினர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்களும், அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்களும் மற்றும் பிற வக்கீல்களும் நேற்று காலை பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல்கள், தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் திருவள்ளுவர், காந்தி உருவப்படங்களை மட்டும் வைக்க வேண்டும், மற்ற படங்களை வைக்கக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் உருவப்படத்தை நீதிமன்றத்தில் இருந்து எடுக்கக்கூடாது, அதனையும் வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- பெரம்பலூரில் விண்ணப்பங்கள் பதிவிற்கான முதற்கட்ட சிறப்பு முகாம் பல இடங்களில் நடைபெற்றது
- கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 129 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்பட்டது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவு செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம்கள் அந்தந்த ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளின் அருகே உள்ள பள்ளிகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்டவைகளில் நேற்று முதல் தொடங்கியது.குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். குரும்பலூரில் அரசு தொடக்கப்பள்ளி, சமுதாய கூடத்தில் நடந்த சிறப்பு முகாமினை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முதற்கட்ட சிறப்பு முகாம்கள் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. பெரம்பலுார் மாவட்டத்தில் மீதமுள்ள பகுதிகளில் 2-ம் கட்டமாக சிறப்பு முகாம்கள் வருகிற 5-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் நாளான நேற்று 14,580 விண்ணப்பதாரர்களில் 11,476 பேரின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.






