என் மலர்
பெரம்பலூர்
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
அண்ணா பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசை கண்டித்தும், அதற்கான சட்ட மசோதாவை எதிர்த்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் அரியலூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் சங்கர், நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காழ்ப்புணர்ச்சியுடன் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் மீண்டும் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இதேபோல் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலை அருகே கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் தா.பழூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன் உள்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 29 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், தங்கபிச்சமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொறுப்பாளர்கள் ஜெகன்ராஜ், மனோகரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மறியலால் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமானூரில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், வடிவழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 45 பேரை திருமானூர் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நகர நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்கம், தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் குன்னம் குணசீலன் தலைமையில் குன்னம் பஸ் நிலையம் அருகே உள்ள அரியலூர்- பெரம்பலூர் சாலையில் அமர்த்து அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அந்தூர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 50 பேரை குன்னம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமையில் துறையூர்-பெரம்பலூர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க.வினரை பாடாலூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
பெரம்பலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி(வயது 62). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி நைனாம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சின்னசாமி வயலுக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சின்னசாமியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு அருகே வாலிபரை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 28). இவர் அத்தியூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதே கிராமத்தை சேர்ந்த சங்கர்(வயது 22) உள்பட 3 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லி உள்ளனர். ஆனால் தமிழரசன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் உள்பட 3 பேரும், வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று புதுப்பேட்டை கிராமம் அருகே தமிழரசனை வழிமறித்து கைகளாலும், கட்டையாலும் தாக்கி உள்ளனர். இதில் தமிழரசனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தமிழரசன் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர், பாடாலூர், குன்னம் போன்ற பகுதிகளில் வாகனசோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது போக்கு வரத்து விதிமுறைகளை மீறி சாலைவரி செலுத்தாமை, அதிகபாராம் ஏற்றி செல்லுதல் போன்றவை காரணமாக ஒரு ஜேசிபி மற்றும் 6 கனரக வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
சாலைவரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ.4லட்சமும், அதிக பாரம் ஏற்றிசென்ற 4 கனரக வாகனங்களுக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு அரசிற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வாகனங்களை தொடர்ந்து சாலையில் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1,043 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,020 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 9 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 12 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 68 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 164 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,043 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,020 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
செட்டிகுளத்தில் சின்ன வெங்காய மூட்டைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை, வயலில் பட்டறை அமைத்து சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த சரவணன், தனது தோட்டத்தில் பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அவரது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பட்டறையில் இருந்து சின்ன வெங்காயங்களை 2 மூட்டைகளில் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது அப்பகுதி மக்கள் அவரை பிடித்து, பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம், அந்த வாலிபரை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த ராமு(வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை, வயலில் பட்டறை அமைத்து சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த சரவணன், தனது தோட்டத்தில் பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அவரது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பட்டறையில் இருந்து சின்ன வெங்காயங்களை 2 மூட்டைகளில் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது அப்பகுதி மக்கள் அவரை பிடித்து, பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம், அந்த வாலிபரை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த ராமு(வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாத 8 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிக பாரம் ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஆண்டிற்கு மேலாகவும், பல மாதங்களாக வரி செலுத்தாமலும் கனரக வாகனங்கள் தொடர்ந்து சாலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் வாகன ேசாதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில் தற்போது பெரம்பலூர், குன்னம், பாடாலூர் ஆகிய இடங்களில் நடந்த வாகன ேசாதனையில் சாலை வரி செலுத்தாத பொக்லைன் எந்திரம் மற்றும் 8 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4 லட்சம் சாலை வரி விதிக்கப்பட்டது.
மேலும் சாலை விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. வாகனத்தின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்கு உரிய சாலை வரியை உடனடியாக செலுத்துமாறு வட்டார போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குன்னம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நன்னை கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் ரவிச்சந்திரன்(வயது 21). கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதனை கண்ட உறவினர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மங்களமேடு அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், பெருமாள்பாளையம், சிறுகநத்தம் காலனியை சேர்ந்தவர் அமிர்தராஜன்(வயது 32). பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் பகுதிக்கு வந்த இவர் நேற்று இரவு ஒதியம் பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வல்லிபுரத்தை சேர்ந்த மாரி(55), குன்னம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மங்களமேடு அருகே பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் மணிமேகலை(வயது 42). திருமணமாகாத இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை சரி இல்லாமல் இருந்ததாகவும், வெளியே செல்லும் அவர் இரவில் வீடு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் கீழப்புலியூர் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பரமசிவம் தனது மகளை ஊர் முழுவதும் தேடியும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு மற்றும் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். உண்டியலில் பணம் மட்டும் திருட்டு போயிருந்தது. சில்லறை காசுகள் அப்படியே கிடந்தன. உண்டியலில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருக்கலாம் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரோனா தொற்று ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் கவுதம், வளர்ப்பதற்காக ஆட்டுக்குட்டி வாங்கி தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தெற்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயி. இவரது மகன் கவுதம்(வயது 11). இவர் சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கவுதமின் தாய் அந்த கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தொற்று ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் வீட்டில் இருந்து வந்த கவுதம், வளர்ப்பதற்காக ஆட்டுக்குட்டி வாங்கி தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஆட்டுக்குட்டி வாங்கி தரவில்லை.
இதையடுத்து ஆட்டுக்குட்டி வாங்கித்தருமாறு கேட்டு கவுதம் பிடிவாதமாக இருந்ததாகவும், அவரை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயாரின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் அங்கு வந்து கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தெற்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயி. இவரது மகன் கவுதம்(வயது 11). இவர் சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கவுதமின் தாய் அந்த கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தொற்று ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் வீட்டில் இருந்து வந்த கவுதம், வளர்ப்பதற்காக ஆட்டுக்குட்டி வாங்கி தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஆட்டுக்குட்டி வாங்கி தரவில்லை.
இதையடுத்து ஆட்டுக்குட்டி வாங்கித்தருமாறு கேட்டு கவுதம் பிடிவாதமாக இருந்ததாகவும், அவரை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயாரின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் அங்கு வந்து கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






