என் மலர்
பெரம்பலூர்
- காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா பரப்பி உள்ளார்.
- மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க சில உணவு பொருட்களின் இருப்பு இல்லை என்றும், அந்த உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் உபயமாக (ஸ்பான்சர்) பெற்று உணவு தயாரிக்குமாறும், வேறு வழியில்லை என்றும், கலெக்டரே இந்த உத்தரவை போட்டிருப்பதாகவும், உணவு தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் வாட்ஸ் அப் குழுவில் குரல் பதிவு செய்து அனுப்பிய ஆடியோ வைரலானது. ஆனால் இது தவறான தகவல் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் மறுப்பு தெரிவித்தார்.
இந்தநிலையில், காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்) மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- பெரம்பலூர் அருகே எளம்பலூர் கோயிலில் சிறப்பு பூஜை
- மெய்யன்பர்கள் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னைஈஸ்வரர் ஆலயத்திலும், ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் அதிஷ்டான சமாதி மணிமண்டபத்தில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிங்கப்பூர்,
ஆத்ம ஞான அன்பு இல்லத்தை சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி ஆலய அமைப்பு மெய்யன்பர்கள் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி, சிங்கப்பூர் பாரி சுவாமிகள், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலய குருசுவாமி ராகவேந்திர, தலைவர் பாரதி மற்றும் மெய்யன்பர்கள் உடனிருந்தனர்.
- பெரம்பலூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது
- கலெக்டர் கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையை சேர்ந்தவர் பிச்சை மகன் செல்வராஜ் (எ) அப்துல் ரகுமான்(39). சினிமா டைரக்டரான இவர் கடநத் ஜூன் மாதம் 5ம் ததி மதுபாரில் மது அருந்திக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து கொலை க்குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம், நெத்திமேடு காமராஜர் நகரை சேர்ந்த சேட்டு மகன் தட்சணாமூர்த்தி (30) யை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க எஸ்பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையை ஏற்று கலெக்டர் கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று தட்சணாமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- புதை படிவங்களை பாதுகாக்க பெரம்பலூரில் புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அமைக்கப்படுமா?
- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு அடியில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவ எச்சங்கள் முன்பு ஏற்பட்ட புவியியல் மாற்றத்தை குறிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் மனிதர்களுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் இருப்பையும் உறுதி செய்துள்ளனர். 1940 ல் புவியியலாளர் எம்.எஸ். கிருஷ்ணன் இங்கு 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தின் படிமத்தை கண்டுபிடித்தார்.அந்த இடம் சாத்தனூர் ஆகும்.
மேலும் தொன்மையான வரலாற்றை கண்டுபிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வறண்ட நிலங்களில் மறைந்து கிடக்கும் செல்வத்தை கொண்டு வர ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆகவே பெரம்பலூரில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வாசன் கூறும்போது,
இங்கு கிடைத்த புதை படிவங்கள் இரு மாவட்டங்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
புதை படிவங்கள் நிறைந்த மாவட்டங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை வெளியே கொண்டு வருவதற்கு இங்கு ஒரு பிரத்யேக புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும் பல இடங்களில் புகை படிமங்கள் காணப்பட்டாலும் அவை முறையாக பாதுகாக்கப்
படவில்லை.
இங்கு அலுவலகம் தொடங்கப்பட்டால் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் புவியியல் ஆய்வு மையத்துக்குமான இடைவெளி குறையும் என்றார்.விக்ரம் என்பவர் கூறும் போது,
வரலாற்று சிறப்புமிக்க கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க காரை கிராமத்தில் புவிசார் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்து அதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே புவியியல் ஆய்வு மையமும் அமைந்தால் நன்றாக இருக்கும். புதை படிவங்கள் ஓடைகளிலும் பிற இடங்களிலும் கிடப்பதை எளிதாக காணலாம் என்றார்.
மாவட்ட கலெக்டர் தரப்பில் கேட்டபோது, இங்கு புவியியல் ஆய்வு மைய கிளை அலுவலகம் இருந்தால் உதவியாக இருக்கும் இந்த கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றார்.
- வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
- கூடுதல் பணியிடங்களை வழங்கக்கோரி அடையாள போராட்டம்
பெரம்பலூர்,
ஊழியர் விரோத நடவடிக்கைகளை... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுாிந்தனர். அந்த கோரிக்கை அட்டையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக கூடுதல் பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீது உடன் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், என்று இடம் பெற்றிருந்தது.
இன்றும் கோரிக்கை அட்டை அணியவுள்ளனர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் 60 பெண் அலுவலா்கள் உள்பட 140 வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அவர்கள் 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியவுள்ளனர்.
- பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்
- 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிந்துமதி(வயது 29). இவரிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமசாமி, அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோரை மங்களமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிதுரை. இவரது மகன் மதுபாலன் (வயது 27). இவர் 5 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போக்சோ வழக்கில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மதுபாலனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று மதுபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் குண்டர் சட்டத்தில் மதுபாலனை கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.
- ஒகளுர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் விழிப்புணர்வு முகாம்
- இரண்டு தினங்க ளுக்கு மேல் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற அறிவுரை
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளுர் கிரா மத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் இடையே லப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.வேப்பூர் வட்டார மருத்து வ அலுவலர் மருத்துவர் சேசு தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் தாசன் சுகாதார ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர்ஒகளுர் கிராமத்தில் வீதி வீதியாக சென்று பாத்தி ரங்கள். தண்ணீர் தொட்டி கள், டயர், உரல் ஆகியவற்றி ல் தேங்கி உள்ள தண்ணீரில் டெங்கு காய்ச்சல் வர கார ணமாக உள்ள லார்வாக்கள் மற்றும் ஏடிஎஸ் கொசுக்க ளை மருந்துகள் ஊற்றி அழி த்தனர்.மேலும் பொது மக்களி டையே தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்யவும், டெங்கு கொசு க்கள் புழுக்கள் வளராமல் இருக்க சுற்றுப்புற பகுதி களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது குறித்தும் விரிவாக எடுத்து கூறினார்கள்.மேலும் இரண்டு தினங்க ளுக்கு மேல் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற கேட்டுக்கொ ண்டனர்.இதேபோல் அத்தியூர் ,கழனிவாசல் ,திருமாந்துறை ,உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பொது மக்களி டையே டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள்.
- கோனேரிபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்
- உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்து கிடந்த நபர் டீசர்ட்டும், கைலியும் அணிந்திருந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவா் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துறைமங்கலம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவன்
- வழக்கு பதிந்து போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனி வடக்கு தெருவில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இதனால் அந்த கோவில் நேற்று மதியமும் திறந்திருந்தது. அப்போது மதியம் 2 மணி முதல் 3 மணி வரை கோவிலில் ஆட்கள் யாரும் இல்லாத போது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கோவிலுக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்து காாட்சிகளை பார்வையிட்டனர். அதில் கோவிலுக்குள் 15 வயதுடைய ஒரு சிறுவன் உள்ளே நுழைந்து உண்டிலைய உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றிருந்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து விசாரணை நடத்தி அந்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூர் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்
- இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சின்னமுத்து, ரவி, இளங்கோவன் ஆகியோர் பெரம்பலூர் வெங்கடேசபுரம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தரமற்றமுறையில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ சமைக்கப்பட்ட உணவு, அரை கிலோ சிக்கன் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ச்சியாக பெரம்பலுரில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அனைத்து பிரியாணி கடைகளிலும், அசைவ உணவகங்களிலும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.
- பெரம்பலூரில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
- குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் ரேசன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இலவச தொலைபேசி எண் 1800 599 5950 எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான பஸ்ஸ்டாப், ரேசன்கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் முக்கிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையில்படும் படி இலவச எண் கொண்ட போஸ்டர், பேனர் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.






