என் மலர்
பெரம்பலூர்
- 70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
- அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவை கூட்டத்தில் வேண்டுகோள்
பெரம்பலூர்,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவை பெரம்பலூரில் நடந்தது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் சங்கத்தின் மாநில செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 21 மாத ஓய்வூதிய தொகையினை வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நீட்டிக்கப்பட்ட ஓய்வூதிய வயதினை மீண்டும் 58 வயதாக நிர்ணயம் செய்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அரசு துறைகளில் தற்காலிக பணி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கென்று அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியினை விரைவில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், பெரம்பலூர் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான போலீசார் தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கினால் விபத்துகளை தவிர்த்து விடலாம், என்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் சுப்பையன் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
- தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் சேவைப்பணி ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மைப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தூய்மை காவலர்கள், ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் நேரு யுவகேந்திராவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். மேலும், அந்தந்த அரசு அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியை கலெக்டர் வாசித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறுகையில், உறுதிமொழி எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நமது சுற்றுப்புற பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை. கிராமப்புறங்களில் நீர் நிலைகள், பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரித்தெடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராமர், மகளிர் திட்ட இயக்குனர் அருணாச்சலம், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா, தூய்மை இந்தியா இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
- பொதுமக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 24 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
- இருவரிடமிருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்யப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் மனைவி கலைச்செல்வி(வயது 48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபட்டில் சென்றபோது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கலைச்செல்வி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசில் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேசன்(22), அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(21) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அரியலூர் மாவட்டத்தில் நடந்த குற்ற வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கை.களத்தூர் போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரிடமிருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு கொளக்காநத்தத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
- ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது
குன்னம்,
குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பில் மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க .சார்பில் கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் தியேட்டரில் நடைபெற்றது.பொதுக்கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமை வகித்தார் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, குன்னம் பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தன், கொளக்காநத்தம் கிளை செயலாளர் துரைராஜ், வக்கீல் பெரியசாமி, ஒன்றிய ஐடி விங் செயலாளர் கதிர்வேல், கொளக்காநத்தம் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான என்.ஆர்.சிவபதி, முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான அருணாசலம், முன்னாள் எம்பி சந்திரகாசி, மாவட்ட பொருளாளர் பூவை செழியன், முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், தலைமை கழக பேச்சாளர் நேமம் அன்பு முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வேப்பந்தட்டை சிவப்பிரகாசம் ரவிச்சந்திரன், பெரம்பலூர் செல்வகுமார் , எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜாராம், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், ஆலத்தூர் ஒன்றிய துணை சேர்மன் சுசீலா முருகேசன், முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி , மகளிர் அணி ராஜேஸ்வரி, வக்கீல்கள் வெள்ளைச்சாமி பால்ராஜ், புதுக்குறிச்சி தங்கவேல், இளைஞர் அணி நாகராஜன், இன்ஜினியர் பிரபாகரன், காரை ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன், குறும்பாபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கர்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.
- பெரம்பலூரில் புதை படிவங்களை பாதுகாக்க புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை
- கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு அடியில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவ எச்சங்கள் முன்பு ஏற்பட்ட புவியியல் மாற்றத்தை குறிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் மனிதர்களுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் இருப்பையும் உறுதி செய்துள்ளனர். 1940 -ல் புவியியலாளர் எம்.எஸ். கிருஷ்ணன் இங்கு 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தின் படிமத்தை கண்டுபிடித்தார். அந்த இடம் சாத்தனூர் ஆகும்.
மேலும் தொன்மையான வரலாற்றை கண்டுபிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வறண்ட நிலங்களில் மறைந்து கிடக்கும் செல்வத்தை கொண்டு வர ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே பெரம்பலூரில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வாசன் கூறும்போது,
இங்கு கிடைத்த புதை படிவங்கள் இரு மாவட்டங்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. புதை படிவங்கள் நிறைந்த மாவட்டங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை வெளியே கொண்டு வருவதற்கு இங்கு ஒரு பிரத்யேக புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும் பல இடங்களில் புகை படிமங்கள் காணப்பட்டாலும் அவை முறையாக பாதுகாக்கப் படவில்லை. இங்கு அலுவலகம் தொடங்கப்பட்டால் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் புவியியல் ஆய்வு மையத்துக்குமான இடைவெளி குறையும் என்றார். விக்ரம் என்பவர் கூறும் போது,
வரலாற்று சிறப்புமிக்க கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க காரை கிராமத்தில் புவிசார் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்து அதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே புவியியல் ஆய்வு மையமும் அமைந்தால் நன்றாக இருக்கும். புதை படிவங்கள் ஓடைகளிலும் பிற இடங்களிலும் கிடப்பதை எளிதாக காணலாம் என்றார். மாவட்ட கலெக்டர் தரப்பில் கேட்டபோது, இங்கு புவியியல் ஆய்வு மைய கிளை அலுவலகம் இருந்தால் உதவியாக இருக்கும் இந்த கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றார்.
- பொதுப்பாதையை தனிநபர் அடைப்பதாக கூறி அகரம்சிகூர் அருகே குடியிருப்புவாசிகள் சாலை மறியல்
- சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் காலனி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் இளையராஜா(வயது 30). இவர் தனதுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டின் பக்கத்தில் உள்ள காலி இடத்தின் வழியாக இவரது வீட்டின் பின் பகுதியில் சுமார் 8 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டிற்கு சென்றுவர பொதுபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இளையராஜா வசிக்கும் வீடு அவருக்கு போதிய அளவில் இல்லை என்பதால் வீட்டை விரிவு படுத்துவதற்காக பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.வீட்டை விரிவுபடுத்தினால் 8 குடும்பத்தினர் வசித்து வரும் வீடுகளுக்கு சென்ற வர பாதை வசதி இருக்காது. இதன் காரணமாக அவர்கள் வடக்கலூர்-வேப்பூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா பரப்பி உள்ளார்.
- மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க சில உணவு பொருட்களின் இருப்பு இல்லை என்றும், அந்த உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் உபயமாக (ஸ்பான்சர்) பெற்று உணவு தயாரிக்குமாறும், வேறு வழியில்லை என்றும், கலெக்டரே இந்த உத்தரவை போட்டிருப்பதாகவும், உணவு தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் வாட்ஸ் அப் குழுவில் குரல் பதிவு செய்து அனுப்பிய ஆடியோ வைரலானது. ஆனால் இது தவறான தகவல் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் மறுப்பு தெரிவித்தார்.
இந்தநிலையில், காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்) மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- பெரம்பலூர் அருகே எளம்பலூர் கோயிலில் சிறப்பு பூஜை
- மெய்யன்பர்கள் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னைஈஸ்வரர் ஆலயத்திலும், ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் அதிஷ்டான சமாதி மணிமண்டபத்தில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிங்கப்பூர்,
ஆத்ம ஞான அன்பு இல்லத்தை சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி ஆலய அமைப்பு மெய்யன்பர்கள் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி, சிங்கப்பூர் பாரி சுவாமிகள், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலய குருசுவாமி ராகவேந்திர, தலைவர் பாரதி மற்றும் மெய்யன்பர்கள் உடனிருந்தனர்.
- பெரம்பலூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது
- கலெக்டர் கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையை சேர்ந்தவர் பிச்சை மகன் செல்வராஜ் (எ) அப்துல் ரகுமான்(39). சினிமா டைரக்டரான இவர் கடநத் ஜூன் மாதம் 5ம் ததி மதுபாரில் மது அருந்திக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து கொலை க்குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம், நெத்திமேடு காமராஜர் நகரை சேர்ந்த சேட்டு மகன் தட்சணாமூர்த்தி (30) யை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க எஸ்பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையை ஏற்று கலெக்டர் கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று தட்சணாமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- புதை படிவங்களை பாதுகாக்க பெரம்பலூரில் புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அமைக்கப்படுமா?
- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு அடியில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவ எச்சங்கள் முன்பு ஏற்பட்ட புவியியல் மாற்றத்தை குறிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் மனிதர்களுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் இருப்பையும் உறுதி செய்துள்ளனர். 1940 ல் புவியியலாளர் எம்.எஸ். கிருஷ்ணன் இங்கு 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தின் படிமத்தை கண்டுபிடித்தார்.அந்த இடம் சாத்தனூர் ஆகும்.
மேலும் தொன்மையான வரலாற்றை கண்டுபிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வறண்ட நிலங்களில் மறைந்து கிடக்கும் செல்வத்தை கொண்டு வர ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆகவே பெரம்பலூரில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வாசன் கூறும்போது,
இங்கு கிடைத்த புதை படிவங்கள் இரு மாவட்டங்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
புதை படிவங்கள் நிறைந்த மாவட்டங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை வெளியே கொண்டு வருவதற்கு இங்கு ஒரு பிரத்யேக புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும் பல இடங்களில் புகை படிமங்கள் காணப்பட்டாலும் அவை முறையாக பாதுகாக்கப்
படவில்லை.
இங்கு அலுவலகம் தொடங்கப்பட்டால் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் புவியியல் ஆய்வு மையத்துக்குமான இடைவெளி குறையும் என்றார்.விக்ரம் என்பவர் கூறும் போது,
வரலாற்று சிறப்புமிக்க கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க காரை கிராமத்தில் புவிசார் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்து அதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே புவியியல் ஆய்வு மையமும் அமைந்தால் நன்றாக இருக்கும். புதை படிவங்கள் ஓடைகளிலும் பிற இடங்களிலும் கிடப்பதை எளிதாக காணலாம் என்றார்.
மாவட்ட கலெக்டர் தரப்பில் கேட்டபோது, இங்கு புவியியல் ஆய்வு மைய கிளை அலுவலகம் இருந்தால் உதவியாக இருக்கும் இந்த கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றார்.






