search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படைவீரர்கள் மாநில ஆலோசனை கூட்டம்
    X

    முன்னாள் படைவீரர்கள் மாநில ஆலோசனை கூட்டம்

    • பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்கள் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், 8 மண்டல தலைவர்கள், 38 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படை வீரர்கள் மற்றும் வீரமங்கையர் அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கேசவராஜன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் பொய்யாமொழி, ஆலயம் திலக், மாநில பொருளாளர் நவநீதகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் வில்வலிங்கம், மாநில மகளிர் அணி தலைவி சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் படைவீரர்கள் நலன் குறித்தும், அரசின் திட்டப்பலன்கள் பெறுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முன்னாள் முப்படை சங்கங்களை ஒருங்கிணைப்பது, அமைப்புக்கு தேவையான உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் சிஎஸ்டி கேண்டீன், இசிஹெச்எஸ் மருத்துவமனை, உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் அலுவலகம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், 8 மண்டல தலைவர்கள், 38 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சுப்புராஜ் வரவேற்றார், முடிவில் துணை பொதுசெயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×