என் மலர்
பெரம்பலூர்
- வாகன விபத்தில் பள்ளி காவலாளி பலியானார்.
- மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதியது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 44). மாற்றுத்திறனாளியான இவர் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது உறவினரான சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (30) என்பவருடைய மோட்டார் சைக்கிளில் குன்னம் சென்று விட்டு வேப்பூர் திரும்பி கொண்டு இருந்தார். இதேபோல் பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதம் (29) மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் வேப்பூர் ராஜீவ் காந்தி நகர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த சுந்தர்ராஜன் கீழே தவறி விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாம்பு கடித்து தொழிலாளி பலியானார்.
- ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் அஜித்குமார் (வயது 26). இவர் லெப்பைகுடிகாட்டில் ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அஜித்குமார் இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனை வீட்டில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அஜித்குமார் வீட்டில் உள்ளவர்களிடம் தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே நாளில் 11,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
- பெரம்பலூரில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது
பெரம்பலூர்:
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 33-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 11,066 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- இலவச பயிற்சி பெற நேர்முகத் தேர்வு நடைபெறுகிது
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மெழுகுவர்த்தி தயாரித்தல் குறித்த தொழிற்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்பின் போது காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் வங்கிக்கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்க 19 முதல 45 வயதுக்குட்பட்ட எழுதப்படிக்க தெரிந்த சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புறத்தினருக்கு முன்னுரிம அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் பயிற்சி மையத்தில் இன்று நடைபெறும். நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். என மைய இயக்குநர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
- ரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் தினமும் மண்டலபூஜை உபயதாரர்கள் சார்பில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடி மாத மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திரௌபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ரந்தினி டத்தோ. எஸ்.பிரகதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 108 பெண்கள் குத்து விளக்குடன் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த திருவிளக்கு பூஜையில் பூலாம்பாடியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராகுல்(வயது 25).
- மேட்டுச்சேரி அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராகுல்(வயது 25). இவர் சம்பவத்தன்று அரியலூருக்கு சென்றுவிட்டு, பின்னர் வி.களத்தூர் வழியாக அரும்பாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மேட்டுச்சேரி அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ராகுலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்குறிச்சி துணை மின் நிaலையத்தில் நாளை 8-ந்தேதி (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
- ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை 8-ந்தேதி (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு,
அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்சார கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வையும், அரிசி, பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின்சார கட்டண உயர்வு, அரிசி மற்றும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அன்புதுரை, மண்டல தலைவர் அன்பழகன்,மாவட்ட செயலாளர் ரெங்காஸ், பொருளாளர் பரமசிவம், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ரகுபதி மின் கட்டணம் உயர்வு மற்றும் அரிசி மற்றும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பால் சாமானிய மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலை உயர்வை குறைக்கவும், வரி விதிப்பை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வையும், அரிசி, பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஒன்றிய தலைவர்கள் அழகுவேல், ரகுபதி, காமராஜ், செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பாரம்பரிய உணவு ஆரோக்கியம், சுகாதாரம் ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டுள்ளது
- பாரம்பரிய உணவுபொருட்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பாரம்பரிய உணவு திருவிழா (பயணிப்பீர் பாரம்பரியத்தை நோக்கி) என்ற தலைப்பில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
பாரம்பரிய உணவு ஆரோக்கியம், சுகாதாரம் ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பால்வாடி மையங்களுக்கு தரச்சான்று கொடுக்கப்பட்டுள்ளது. தகுந்த உணவு, சுகாதாரமான உணவு அடிப்படையில் 5 மையங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பால்வாடி மையங்களும் இந்த தரச்சான்றிதழ் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாரம்பரிய உணவுபொருட்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது, எளிமையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு அனைத்து சத்துக்களும் உள்ள உணவினை சுகாதாரமாகவும், பாதுகாப்பானதாகவும் நாமே தயாரித்துக் கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
- விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்வளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியின் 9-ம் ஆண்டு பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
ரோவர் கல்வி குழுமங்களின் மேலாண் தலைவர் செவாலியர் வரதராஜன், தூய யோவான் சங்க அறக்கட்டளை அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன், கல்வி குழுமங்களின் துணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்வளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இனிதே நடைபெற்றது.
மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சிறப்பு அழைப்பாளர் மற்றும் மேலாண் தலைவரால் வழங்கப்பட்டது. மேலும் மேலாண் தலைவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது சென்னையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை குறித்தும் , நமது நாட்டில் நடத்துவது பெருமைக்குரிய ஒன்று என்றும், அதில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெற்று வருகிறது என்பதை குறித்தும் பேசி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பள்ளி முதல்வர் ஜீன் ஜாக்குலின் வழிகாட்டுதலுடன் துணை முதல்வர் பழனிச்சாமி அவர்கள் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு விழா அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நிறைவடைந்தது
- வரலட்சுமி விரத பூஜையையொட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
- ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஜெய்ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது. இதில் வரலட்சுமி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு அர்ச்சனை, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. சுமங்கலி பெண்கள் தமது கைகளில் மஞ்சள் சரடு கட்டி வரலட்சுமி விரதபூஜையை நடத்தினர். அப்போது உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும் வேண்டி லட்சுமி தோத்திரங்ளையும், லலிதா சகஸ்ர நாமத்தையும் பாராயணம் செய்தனர்.
- செல்போன் கடை ஊழியர்கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
- நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கோபாலின் மகன் வினோத்(வயது 28). இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், தனது நண்பர் கார்த்திக்குடன்(25) நிர்மலா நகரில் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், வினோத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேர் நேற்று மாலை பெரம்பலூர் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






