என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி காவலாளி பலி"
- வாகன விபத்தில் பள்ளி காவலாளி பலியானார்.
- மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதியது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 44). மாற்றுத்திறனாளியான இவர் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது உறவினரான சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (30) என்பவருடைய மோட்டார் சைக்கிளில் குன்னம் சென்று விட்டு வேப்பூர் திரும்பி கொண்டு இருந்தார். இதேபோல் பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதம் (29) மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் வேப்பூர் ராஜீவ் காந்தி நகர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த சுந்தர்ராஜன் கீழே தவறி விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






