என் மலர்
நீங்கள் தேடியது "WORKER DIES FOR BITE TEE SNAKE"
- பாம்பு கடித்து தொழிலாளி பலியானார்.
- ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் அஜித்குமார் (வயது 26). இவர் லெப்பைகுடிகாட்டில் ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அஜித்குமார் இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனை வீட்டில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அஜித்குமார் வீட்டில் உள்ளவர்களிடம் தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






