என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சார கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்
- மின்சார கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வையும், அரிசி, பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின்சார கட்டண உயர்வு, அரிசி மற்றும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அன்புதுரை, மண்டல தலைவர் அன்பழகன்,மாவட்ட செயலாளர் ரெங்காஸ், பொருளாளர் பரமசிவம், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ரகுபதி மின் கட்டணம் உயர்வு மற்றும் அரிசி மற்றும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பால் சாமானிய மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலை உயர்வை குறைக்கவும், வரி விதிப்பை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வையும், அரிசி, பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஒன்றிய தலைவர்கள் அழகுவேல், ரகுபதி, காமராஜ், செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






