என் மலர்
பெரம்பலூர்
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் வரும் 2ம்தேதி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது.
- கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும்
பெரம்பலூர் :
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் வரும் 2ம்தேதி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மக்கள் பிரநிதிதிகள் கலந்துகொண்டு கிராம மக்கள் என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.
அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 11ம்தேதி நடைபெற உள்ளது.
- ஓய்வூதியதாரர்கள் தங்களது கோரிக்கைகள் ஏதும் இருப்பின் இரண்டு பிரதிகளில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் 28ம்தேதிகுள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் ஓய்வூதிய இயக்குநர் தலைமையில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 11ம்தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று கரூவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் 28ம்தேதிகுள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் தோமினிக் ஒட்டத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் ( வயது 26).
- நேற்று இரவு நீலகண்டன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் தோமினிக் ஒட்டத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் ( வயது 26). இவரது சகோதரருக்கு பெரம்பலூர் அம்மாபாளையம் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தினை நீலகண்டன் பராமரித்து வந்தார். மேலும் இரவு நேரங்களில் தோட்டத்தின் பாதுகாப்புக்காக செல்வார்.
வழக்கம்போல் நேற்று இரவு நீலகண்டன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்றார். பெரம்பலூர் குரும்பலூர் கலை அறிவியல் கல்லூரி அருகாமையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அகரம்சீகூர் அடுத்துள்ள மங்களமேடு துணைமின் நிலையத்தில் நாளை 26ம் தேதி திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
- ஓலைபாடி . எழுமூர் , வாலிகண்டபுரம் , மேட்டுபாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது
பெரம்பலூர் :
அகரம்சீகூர் அடுத்துள்ள மங்களமேடு துணைமின் நிலையத்தில் நாளை 26ம் தேதி திங்கள் கிழமை காலை 09.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பராமரிப்பு பணி முடியும் வரை இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான
ரஞ்சன்குடி, பெருமத்தூர் , மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர் , அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர் , திருவளாந்துரை ,பிம்பலூர்,
மறவநத்தம் ,தைகால், நன்னை, அந்தூர், லப்பைகுடிகாடு , திருமாந்துறை , அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை , கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர் , நன்னை, ஓலைபாடி . எழுமூர் , வாலிகண்டபுரம் , மேட்டுபாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி இயக்குனர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
- செல்லம் (வயது 60). வீட்டின் தனி அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
- நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருபவர் ராமலிங்கம். இவரது வீடு பரவாய் கிராமத்தில் அமைந்துள்ளது. ராமலிங்கத்தின் தாயார் செல்லம் (வயது 60). இந்த நிலையில் நேற்று செல்லம் வீட்டின் தனி அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராமலிங்கம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த செல்லம் என்பவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை மர்ம நபர்கள் நள்ளிரவில் பறித்துச் சென்றுள்ளார்.
இதில் தூக்கம் கலைந்து அதிர்ச்சி அடைந்த செல்லம் கூச்சலிட்டதால் அவரது மகன் ராமலிங்கம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டினர் திருடனை பிடிக்க விரட்டிச் சென்றனர். ஆனால் அந்த மர்ம நபர் பறித்த நகையோடு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
இதுகுறித்து ராமலிங்கம் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி மற்றும் குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருடர்களை விரைவில் பிடிப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு போனது
- நர்சிங் ஹோம் முன்பு நிறுத்தியிருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40). டாக்டரான இவர் தனது நர்சிங் ஹோம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் அவர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது தொடர்பாக விஜய் ஆனந்த் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
- நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
- 2-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதை. இவரது மகள் பார்வதி (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 2-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் பார்வதியை அவரது அப்பா மருதை நேற்று மாலை விடுதியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் மருதை வயலுக்கு சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பார்வதி வீட்டில் மின்விசிறியில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்?, விடுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? அல்லது குடும்ப பிரச்சினையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை கைது செய்யப்பட்டனர்.
- அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில், பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில், வனவர்கள் குமார், பிரதீப்குமார், வனக்காப்பாளர் ராஜூ, வனக்காவலர் அறிவுச்செல்வன் ஆகியோர் களரம்பட்டி கிராமத்தில் தாமரைக்குளம் என்ற வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம்படும்படியாக ஒரு நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் அருகே செஞ்சேரியை சேர்ந்த தங்கராசு மகன் கலைச்செல்வன்(வயது 32), லாடபுரத்தை சேர்ந்த ராஜா மகன் ரமேஷ்(30) என்பதும், அவர்கள் 2 பேரும் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியையும் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வன உயிரின பாதுகாப்புச் சட்டம், படைக்கலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கலைச்செல்வன், ரமேசை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
- பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலுர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், தொண்டப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலையூரில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சி யினை 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது."
- பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
- துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாமா(வயது 50). இவர் நேற்று அழகாபுரி கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து அழகாபுரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த மர்ம நபர், பாமாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பாமா வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம்.
பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம், அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கட்டிட தொழிலாளர்களுக்கு நல வாரியம் வழங்கி வரும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை, ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய அரசு உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்த கட்டிட தொழிலாளர்களுக்கு தாமதமின்றி அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
- கூடுதல் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போதுமான வெளிச்சம் இல்லை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் இரவு நேரத்தில் செல்வதற்கு போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய போதுமான மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






