என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PENSIONERS GRIEVANCE REDRESSAL MEETING"

    • பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 11ம்தேதி நடைபெற உள்ளது.
    • ஓய்வூதியதாரர்கள் தங்களது கோரிக்கைகள் ஏதும் இருப்பின் இரண்டு பிரதிகளில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் 28ம்தேதிகுள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் ஓய்வூதிய இயக்குநர் தலைமையில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 11ம்தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று கரூவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் 28ம்தேதிகுள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×