என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பயிர் காப்பீடு தொகையை பெற்று தரக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
    • கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பசுமை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பூவலிங்கத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கடந்த ஆண்டில் பயிர் காப்பீட்டிற்கு தொகை கட்டியும், இழப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை. அந்த பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்று தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது."

    • தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தோல் நோயால் அவதிபட்டு வந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டி இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் செல்வி தனது கடைசி மகளான காவ்யாவுடன் (வயது 21) வசித்து வந்தார். காவ்யா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. ஊட்டச்சத்து-உணவியல் படிப்பை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். காவ்யாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக தோல் நோய் ஏற்பட்டு, அதற்கு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், தனியார் சித்த மருத்துவத்திலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தோல் நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்த காவ்யா கல்லூரிக்கு செல்லாமல் விடுப்பில் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    நேற்று காலை 10 மணியளவில் செல்வி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூருக்கு வந்து விட்டார். இதனால் காவ்யா வீட்டில் தனியாக இருந்தார். மளிகை பொருட்களை வாங்கி கொண்டு மதியம் வீட்டிற்கு சென்று செல்வி பார்த்தபோது, அறையில் காவ்யா துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    "

    • தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    • 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    பேச வேண்டிய அவசியமில்லை

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேர் எதிர்த்து, மத்தியஅரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது எதிர்பார்த்த ஒன்றுதான். இது அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. அந்த 6 பேர் சார்பிலும் வககீல்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி சட்டப்படி எதர்கொள்ளப்படும். இதனால் 6 பேரின் விடுதலை ரத்து செய்யப்படாது என நம்புகிறோம்.

    த மிழக அரசின் மழைக்கால நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசலாம். இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.

    மத்திய அரசு பிடிவாதம்

    திருமாந்துறை, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளின் ஊழியர்களின் போராட்டம் குறித்து, ஏற்கனவே சம்பந்தப்பட்ட மத்திய இைண மந்திரியிடம் மனு கொடுத்திருக்கிறோம். கூட்டத் தொடரின்போது சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து பேச உள்ளோம்.

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், வழக்கில் இருந்து வெளியே வர முடியாதபடி வழக்கை விரைந்து நடத்தி தண்டணை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்.

    மத்திய அரசு நீட் தேர்வு விசயத்தில் பிடிவாதமாக உள்ளது, மாநில அரசு ஒன்றுக்கு இருமுறை சட்ட மசோதா அனுப்பியும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு அடிப்படை வசதிக்கு தேவையான நிதி பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி போதவில்லை இருந்தாலும் தமிழக அரசு மூலம் வலியுறுத்தி அடிப்படை வசதி செய்து தருவேன்.

    • பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி 7.11.2008-க்கு முன்உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், காலியாக உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்."

    • சாலையில் சென்றவர்களை கொட்டிய தேனீக்களால் பரபரப்பு
    • கூட்டை அழிப்பதற்கு பொதுமக்கள் கோரிக்கை

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் பால் பண்ணை அருகில் அமைந்துள்ள ஒரு புளிய மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இந்த நிலையில் அந்தப் பாதை வழியாக சென்று கொண்டிருந்த ஜலாவுதின், மாதசாகிப், இளவரசு, கந்தசாமி, செல்லக்கண்ணு கணவர் பெயர் அம்மாசி, பிரபாகரன் மற்றும் சிலரை தேனீகள் சுற்றி வலளத்து கொட்டின. இதனால் உடல்வலி, மயக்கும் ஏற்பட்டதால் அவர்களை அங்குள்ள மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் தேனீ கூட்டை அழிப்பதற்கு தீயணைப்பு நிலையம் அலுவலரிடம் வயலூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தினவிழா மற்றும் போட்டிகளில் வெற்றிப்பெற்றோர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து முன்னாள் பிரதமர் நேரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் காரணம் குழந்தைகளை கண்டால் நம் மனதில் உள்ள துன்பங்கள் மறைந்து போகின்றன. சாதிப்பதற்கான காலங்கள் குறைவாக இருந்த காலத்திலேயே நாட்டில் வாழ்ந்த நம் முன்னோர்கள் குறிப்பாக ஜவஹர்லால் நேரு, காந்தி, நேதாஜி, பட்டேல் போன்றோர் சாதனைகள் பல கண்டு சரித்திரத்தில் நிலைத்து நிற்கின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளும், அதற்கான வழி காட்டிகளும் எண்ணிலடங்கா உள்ளன. அதனை பயன்படுத்தி மாணவர்கள் அனைவரும் தேவையற்றவற்றை விடுத்து சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என தெரிவித்தார்.

    விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், செல்போனின் தீமையினை விளக்கும் விழிப்புணர்வு நாடகமும் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • ரோவர் கல்வி குழுமத்தில் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது
    • பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் பயிற்சிக்கு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தந்தை ரோவர் கல்விக்குழுமம் சார்பில் ரோவர் அகாடமி தொடக்க விழா நடந்தது.

    பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள ரோவர் அகாடமி தொடக்க விழாவிற்கு ரோவர் கல்விநிறுவன துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மகாலெட்சுமி, அகாடமி இயக்குநனர் ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

    ரோவர் கல்விநிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்து சேர்க்கையை தொடங்கிவைத்து பேசுகையில், இன்றைய சூழலில் உயர்கல்வி பயில்வதும், வேலைவாய்ப்புபெறுவதும் பெரும் சவாலாகவும், போட்டியாகவும் உள்ளது. தந்தை ரோவர் கல்விக்குழுமத்தின் சார்பாக ரோவர் அக்காடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் முதல்கட்டமாக நீட், ஜேஇஇ தேர்விற்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு ஏழை,எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் பள்ளி முதல்வர் சந்திரசேகர், தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், மேலாளர் ஜெயசீலன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்தீஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆய்வு மேற்கொண்டார்
    • போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் எஸ்.பி. அலுவலக வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். அங்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நிர்வாகம் தொடர்பான பணிகள், பராமரிக்கப்படும் ஆவணங்கள், அமைச்சு பணியாளர்கள் விபரம், வருகைப் பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அலுவலகத்திற்கு தேவையான அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து அமைச்சு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்

    கால பைரவாஷ்டமியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் உள்ள மூலவர் பைரவருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு இரவு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு மாலையில் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

    • பெண் விவசாயி வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
    • ஸ்கூட்டரில் வைத்த சாவியை எடுத்து கைவரிசை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகர் வடக்கு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அருக்காணி (வயது 36). இவர் அருகே உள்ள ஒருவருக்கு சொந்தமான வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று அருக்காணி தனது வீட்டை பூட்டி விட்டு, அதன் சாவியை வீட்டிற்கு முன்புறம் நிறுத்தி இருந்த, அவரது ஸ்கூட்டரில் வைத்து விட்டு, வயலுக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.50 மணிக்கு வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மர்மநபர்கள் நோட்டமிட்டு ஸ்கூட்டரில் இருந்த வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருக்காணி இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் ரோந்து சென்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காமராஜர் வளைவு அருகே ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்த ஜெய்சங்கரை (வயது 52) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜெய்சங்கர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

    • மாட்டு வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
    • சர்க்கரை நோயால் சிறுநீரக பாதிப்பு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 70). இவருக்கு சவுந்தரம் என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவியுடன் வசித்து வந்த ராமலிங்கம், வெளிநாடு சென்று விட்டு கடந்த 2 ஆண்டுகளாக சொந்த ஊரில் மாட்டு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சர்க்கரை நோயால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த ராமலிங்கம் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்று அங்கே இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    ×