என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    • ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஆய்க்குடி தெற்குதெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பொன்முடி (வயது 53). இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் பொன்முடி அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் பொன்முடி கடந்த ஒரு வாரமாக மாத்திரை சாப்பிடாமல் இருந்துள்ளார். இதை அறிந்த ராஜேந்திரன் பொன்முடியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பொன்முடி வயலுக்கு வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து ெபான்முடிைய அக்கம் பக்கத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பொன்முடி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • தீபாவளி பண்டிகை காலத்தில், போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டதென பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டுக்கின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை துவக்கி வைத்ததை தொடர்ந்து, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில், போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டதென பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டுக்கின்றனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இறுதியில், தீபாவளி பண்டிகைக்கு என நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட குறைவாக வசூல் செய்யப்படும் என உறுதியளித்தார்கள். அதன்படி தீபாவளி பண்டிகையின்போது புகார்கள் வராத அளவிற்கு தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. தீபாவளி பண்டிகையின்போது அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்கி, பொதுமக்களின் பாராட்டை பெற்றது. இப்பொழுது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில் 4 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.10,000 வரை திரும்ப பெறப்பட்டு, மக்களிடத்தில் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தின்போதும், பொங்கல் பண்டிகையின்போதும் இவ்வாறு நிகழா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.




    • ெதருவிளக்குகளை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள தெரு விளக்குகளில் ஒரு சில விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண்கள் இருட்டான பகுதி வழியாக செல்வதற்கு மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • கைகளத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மின்சார வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கைகளத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமபரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான கைகளத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


    • ஆதியோகி சிவன் சிலை ரத ஊர்வலம் நடந்தது.
    • அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் சார்பில் பூதகண வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர்

    கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிவன் சிலை முன்பு வருகிற பிப்ரவரி மாதம் 18-ந் தேதியன்று மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி உற்சவர் சிலை ரத ஊர்வலமாக தமிழ்நாடு முழுவதும் வலம் வருகிறது. இந்த ரதம் நேற்று முன்தினம் பெரம்பலூருக்கு வந்தது. ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் ஆதியோகி சிவன் ரதத்திற்கு குரு பூஜை நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் இந்த ரத ஊர்வலம் பெரம்பலூரில் காந்திசிலை வழியாக சென்று அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலை அடைந்தது. கோவில் முன்பு பக்தர்கள் சார்பில் பூதகண வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதியோகி சிலையை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ஆதியோகி சிலை ரதம், சங்குப்பேட்டை, ரோவர் நூற்றாண்டு வளைவு, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சென்றது. அங்கு ஆதியோகி சிலையை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் ரத ஊர்வலம் தொழுதூர் நோக்கி சென்றது. இந்த ரதம் மீண்டும் நேற்று இரவு பெரம்பலூர் வந்தடைந்தது. இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் ரத ஊர்வலம் சிறுவாச்சூர், ஆலத்தூர் கேட், கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கு சென்றது.

    • நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பரிந்துரை செய்தார்
    • சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு சிறுமி காணாமல் போனதாக அவளது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், அந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெரம்பலூர் சாமியப்பா நகரை சேர்ந்த நந்தகுமார்(வயது 45) மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்திரவின்பேரில் பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அழகம்மாள், போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோர், நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தவழக்கில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.


    • பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது
    • இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை இதமான தட்பவெப்பநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் திரண்டு 1.45 மணி அளவில் பலத்த மழை கொட்டியது. பின்னர் சிறிது நேரம் இடைவெளிவிட்டு 3.30 மணியளவில் மீண்டும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் தேங்கியது. பின்னர் விட்டுவிட்டு மழை பெய்தது. பெரம்பலூர் பகுதியில் ஏற்கனவே ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், நேற்று பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமப்புறங்களில் நெல், மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் கதிர்முற்றியுள்ளன. அவை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யப்பட உள்ள நிலையில், இந்த மழையால் அந்த பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்


    • திறனறி தேர்வுக்கு 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிகல்வி துறை தெரிவித்துள்ளது.
    • தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் 25ந்தேதி தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜனவரி) 20ந்தேதிக்குள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு கட்டண தொகை ரூ.50ஐ தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அடுத்த மாதம் 24ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், பள்ளிகள் திறந்தவுடன் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காளான் குடில் அமைக்க ஒரு லட்சம் மானியம் வழங்கபடுகிறது
    • பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காளான் குடில் அமைக்க ஒரு லட்சம் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்திட 20 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கீழமாத்தூர், அல்லிநகரம், இரூர், காரை, நக்கசேலம், நாரணமங்கலம், எளம்பலூர், எசனை, வடக்குமாதவி, மலையாளப்பட்டி, அன்னமங்கலம், வி.களத்தூர், பிரம்மதேசம், சிறுமாத்தூர், அகரம் சிக்கூர், எழுமூர், கீழப்புலியூர், கிழுமத்தூர், ஓலைப்பாடி, பரவாய் ஆகிய 20 கிராமங்களில் காளான் குடில் அமைக்க பொருள் இலக்காக 2 எண்கள் மற்றும் நிதி இலக்காக ரூ.2 லட்சமும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 600 சதுர அடி அளவுள்ள காளான் வளர்ப்பு கூடாரம் அமைக்க அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


    • வி.சி.க. கொடி கம்பத்தை சேதம் செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கட்சியின் சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டதாக, அக்கட்சியின் சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த 30 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதில் 10 பேரை கைது செய்தனர்.


    • பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது
    • பார்சல் நிறுவனத்தினர் எந்த வித பதிலும் கூறாமல் மரியாதை குறைவாக பேசியுள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே நகரை சேர்ந்தவர் நாகராஜன் மகன் மோகன்குமார் (32). இவர் மெசினரி எக்யூப்மெண்ட் என்ற பெயரில் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். தொழில் ரீதியாக ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டர் கம்ப்ரசருக்கு பயன்படுத்தும் 13 டிரில்லிங் ராடுவை பார்சல் செய்து பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் உள்ள கேபிஎன் விரைவு பார்சல் சர்வீஸ் நிறுவனம் மூலம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, மூலனூரை சேர்ந்த சூரி என்ற வாடிக்கையாளருக்கு கடந்த 2021, ஜூன் மாதம் 28ம்தேதி அனுப்பியுள்ளார். ஆனால் பார்சல் உரிய வாடிக்கையாளருக்கு சென்றயடை வில்லை.இதனால் மோகன் குமார் பார்சல் நிறுவனத்தை அனுகி நான் அனுப்பிய பார்சல் எனது வாடிக்கையாளருக்கு சென்றடையவில்லை. ஆகையால் நான் அனுப்பிய பார்சலை திரும்பி அளிக்கவேண்டும். இல்லையேல் ட்ரில்லிங் ராடுவின் மதிப்பான ரூ.30 ஆயிரம் பணத்தை திருப்ப தரவேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பார்சல் நிறுவனத்தினர் எந்த வித பதிலும் கூறாமல் அலைக்கழித்ததோடு, மரியாதை குறைவாக பேசியுள்ளனர்.இதனால் மனஉளைச்சல் அடைந்த மோகன்குமார் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் கேபிஎன் விரைவு பார்சல் நிறுவனத்தினர் சேவை குறைபாடு புரிந்தால் பாதிக்கப்பட்ட மோகன்குமாருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும், மோகன்குமார் அனுப்பிய பார்சலை அவரிடமே ஒப்படைக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


    • புறவழிச்சாலையை மாற்றியமைக்க கோரிக்கை வைத்தனர்
    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கீழஉசேன் நகரம் கிராம மக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், எங்கள் ஊரில் புதிதாக அமைக்க உள்ள அரியலூர் புறவழிச்சாலை கீழஉசேன்நகரம் கிராம பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் இடையூராக உள்ளது.மேலும் தொழில் பாதிப்பு ஏற்பட்டு இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் மறு ஆய்வு செய்து மாற்றுப்பாதையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்திய தொழிலாளர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ 5 ஆயிரம் மற்றும் வேட்டி,துண்டு, புடவை ஆகியவை வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.




    ×