என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
    • கேக் வெட்டி பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள்.

    பெரம்பலூர்

    புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளில் சாக்லெட் கேக், வெண்ணிலா கேக், ஐஸ்கிரீம் கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


    • வேப்பந்தட்டை தாலுகா பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
    • வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்

    சம்பங்கி பூ கிழங்கு வழியாக பயிர் செய்து சுமார் 5 ஆண்டுகள் வரை பயிரை மாற்றாமல் பயிர் செய்யப்படுகிறது. அதாவது சம்பங்கி பூ இரவு நேரத்தில் மட்டுமே செடியில் இருந்து பறிக்கக்கூடிய பூவாக உள்ளது. பொழுது விடிந்த பிறகு பறித்தால் பூ மலர்ந்து விடும். பிறகு அதனை சந்தையில் விற்பது கடினம். மேலும் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் விவசாயிகள் பலர் பூக்களை பயிர் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறோம். அதிகமாக பூ விளையும் சமயங்களில் குறைந்த விலைக்கு மட்டுமே வாங்குகின்றனர். மேலும் பூக்கள் வாங்காமல் சில சமயங்களில் திருப்பி அனுப்புகிறார்கள். எனவே வேப்பந்தட்டை தாலுக்கா பகுதியில் வாசனை திரவியங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட சமூக நலம் மற்றும் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக 2 நாள் விழிப்புணர்வு பிரசார பயண வாகனத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் நேற்று பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்யப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.


    • போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்
    • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடந்த அரசு விழாவில் மாநில அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி, அதனை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 532 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 6 ஆயிரத்து 546 உறுப்பினர்களுக்கு ரூ.28 கோடியே 76 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.


    • பெரம்பலூர் எம்.எல்.ஏ. பாராட்டினார்
    • தேசிய சிலம்பம் போட்டியில் மாணவர் தங்கபதக்கம் வென்றார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூரை சேர்ந்தவர் சுதாகர் மகன் விக்னேஷ். இவர் சிலம்பம் போட்டியில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 26, 27ம்தேதிகளில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 14-வயதுக்குட்பட்டோர் பிரிவில் விக்னேஷ் கலந்து கொண்டு ஒற்றைக்குச்சி போட்டியில் தங்க பதக்கமும், இரட்டைக்குச்சி போட்டியில் வெண்கலம் பதக்கமும் வென்றுள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்ற விக்னேசை எம்.எல்.ஏ பிரபாகரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா, பெரம்பலூர் வியாபாரிகள் சங்க தலைவர் செல்லப்பிள்ளை ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • ரூ. 33.87 லட்சத்தில் புதிய கட்டிங்கள் திறப்பு
    • பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அயினாபுரத்தில் ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதியதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்க கட்டிடம், ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடம் என மொத்தம் ரூ.33.87 லட்சம் மதிப்பீட்டிலான 3 புதிய கட்டிடங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், ஏழை, எளிய மக்கள் நலனில் அக்கறை கொண்டதன் காரணமாக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக முதியோர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1 கோடியே 1 வது மருந்து பெட்டகத்தினை பொதுமக்களுக்கு வழங்கினார். இவ்வாறு ஒவ்வொரு சிறப்பான திட்டமும் அறிவித்து செயல்படுத்தி வருவதனால் இந்தியாவில் நம்பர் ஒன் முதலமைச்சராக செயல்பட்டு பிற மாநில முதலமைச்சர்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, பாலம்பாடி, ஜெமின் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மாக்காய்குளம், அருணகிரிமங்கலம், திம்மூர், மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் இந்த மனுக்களுக்கு மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இந்நிகழ்வில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அயினாபுரம் ஊராட்சி தலைவர் பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றபட்டது
    • திருக்கோயிலுக்கு சொந்தமான 1.60 செண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மேற்கு புதுக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 1.60 செண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் உத்திரவின்பேரில் தாசில்தார் பிரகாசம் தலைமையில் கோவில் ஆய்வாளர் தமிழரசி, வக்கீல் ஆனந்தராஜூ மற்றும் வி.ஏ.ஓ., கோவில் பணியாளர்கள் முன்னிலையில் சர்வேயர் கொண்டு கோயில் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதினம் செய்யப்பட்டது. அப்போது புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி நிறுவனத்தில் புத்தாண்டு கேக் திருவிழா தொடக்கப்பட்டது
    • சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி சார்பில் ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு கேக் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதன்படி மூன்று நாள் நடைபெறும் 2023 புத்தாண்டு கேக் திருவிழா மற்றும் கண்காட்சி பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று துவங்கியது.விழாவிற்கு அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் தலைமை வகித்து கேக் கண்காட்சியை திறந்து வைத்தார். அஸ்வின்ஸ் இயக்குநர்கள் செல்வக்குமாரி, அஸ்வின், சிபி, நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊர்க்காவல்படை மண்டல தளபதி அரவிந்தன், இந்தியன் ரெட்கிராஸ் கவுரவ செயலாளர் ஜெயராமன், ரோட்டரி கவர்னர் கார்த்திக், ஆதவ் பப்ளிக் ஸ்கூல் தாளாளர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி துணை தலைவர் அரணாரை மோகன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ், தம்பு காபி பார் உரிமையாளர் பாலாஜி, மரகதம் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் சரவணன், மினி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தாமரைகண்ணன், வக்கீல் பாபு, செந்தூர் மெடிக்கல் சுகுமார், பகவதி கணேசன், பொறியாளர்கள் சிவராஜ், மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி கேக்திருவிழாவின் ஒரு பகுதியாக சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (30ந்தேதி) மற்றும் நாளை (31ம்தேதி)் நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நாளை மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை சின்னத்திரை புகழ் மெஜிசியன் மோகனின் மேஜிக் ஷோவும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் மேலாளர்கள் சுரேஸ், சூரி என்கிற வெங்கடேசன், அசோக்குமார், பி.ஆர்.ஓ சரவணன் ஆகியோர் செய்துள்ளனர்.


    • விதிகளை மீறி செயல்பட்ட 21 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
    • வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொட்டலப்பொருட்களில் உரிய விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட விதகளின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகள், எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் செய்யும் கிடங்குகள், பேக்கரி, பால் மற்றும் பால் பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட், லைட்டர் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தலைமையில் எடையளவு ஆய்வாளர்கள் திவாகரன், சாந்தி, தேவேந்திரன், சம்பத் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வானது 59 நிறுவனங்களில் நடைபெற்றது. இதில் 21 நிறுவனங்கள் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் சட்டமுறை எடையளவுகள் விதிகளுக்கு முரண்பாடாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த 21 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மேற்படி நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி கூறியதாவது:- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் உரிய உரிமம் பெறாமல் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்பவர்கள் மீதும், மின்னணு தராசுகள் உட்பட அனைத்து விதமான எடை அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துபவர்கள் மீதும், அதிகபட்ச சில்லறை விற்பனைக்கு கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீதும், எடைக்குறைவாக விற்பனை செய்பவர்கள் மீதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொட்டலப்பொருட்களில் உரிய விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட விதகளின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனை நிறுவன உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.


    • 6,546 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.28.76 கோடி கடனுதவி வழங்கப்பட்டது
    • மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கி, சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 532 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 ஆயிரத்து 546 மகளிர்களுக்கு ரூ.28.76 கோடி கடனுதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது,மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கி, சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 121 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளில் 3 ஆயிரத்து 906 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 13 பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் 654 மகளிர் சுய உதவிக்குழுக்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 5 ஆயிரத்து 908 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.264.29 கோடி வங்கி நேரடி கடனுதவி வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 3 ஆயிரத்து 373 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.140.77 கோடி வங்கி நேரடிக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 532 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 ஆயிரத்து 546 மகளிர்களுக்கு ரூ.28.76 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஒ. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மகளிர் திட்ட இயக்குநர் கருப்பசாமி, நகராட்சி தலைவர் அம்பிகா, துணை தலைவர் ஹரிபாஸ்கர், ஒன்றியகுழு தலைவர் மீனாம்பாள், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.





    • சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூர் மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, கவர்பனை வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் செந்திலை(வயது 35) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.


    • வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்தனர்
    • போலீசார் நகைகளை வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி தனபாக்கியம் (வயது75). இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தனபாக்கியத்தின் அக்கா மகன் அண்ணாதுரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மர்ம ஆசாமிகள் தனபாக்கியம் வீட்டிற்கு வந்து தனபாக்கியத்தை மிரட்டி நகைகளை கேட்டுள்ளனர்.இந்நிலையில் தனபாக்கியம் உயிருக்கு பயந்து தான் அணிந்திருந்த நகைகளை அந்த மர்ம ஆசாமிகளிடம் கொடுத்து விட்டார். பின்னர் இதுகுறித்து தனபாக்கியம் மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நகைகளை வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.


    ×