search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவு
    X

    சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவு

    • பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது
    • பார்சல் நிறுவனத்தினர் எந்த வித பதிலும் கூறாமல் மரியாதை குறைவாக பேசியுள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே நகரை சேர்ந்தவர் நாகராஜன் மகன் மோகன்குமார் (32). இவர் மெசினரி எக்யூப்மெண்ட் என்ற பெயரில் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். தொழில் ரீதியாக ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டர் கம்ப்ரசருக்கு பயன்படுத்தும் 13 டிரில்லிங் ராடுவை பார்சல் செய்து பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் உள்ள கேபிஎன் விரைவு பார்சல் சர்வீஸ் நிறுவனம் மூலம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, மூலனூரை சேர்ந்த சூரி என்ற வாடிக்கையாளருக்கு கடந்த 2021, ஜூன் மாதம் 28ம்தேதி அனுப்பியுள்ளார். ஆனால் பார்சல் உரிய வாடிக்கையாளருக்கு சென்றயடை வில்லை.இதனால் மோகன் குமார் பார்சல் நிறுவனத்தை அனுகி நான் அனுப்பிய பார்சல் எனது வாடிக்கையாளருக்கு சென்றடையவில்லை. ஆகையால் நான் அனுப்பிய பார்சலை திரும்பி அளிக்கவேண்டும். இல்லையேல் ட்ரில்லிங் ராடுவின் மதிப்பான ரூ.30 ஆயிரம் பணத்தை திருப்ப தரவேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பார்சல் நிறுவனத்தினர் எந்த வித பதிலும் கூறாமல் அலைக்கழித்ததோடு, மரியாதை குறைவாக பேசியுள்ளனர்.இதனால் மனஉளைச்சல் அடைந்த மோகன்குமார் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் கேபிஎன் விரைவு பார்சல் நிறுவனத்தினர் சேவை குறைபாடு புரிந்தால் பாதிக்கப்பட்ட மோகன்குமாருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும், மோகன்குமார் அனுப்பிய பார்சலை அவரிடமே ஒப்படைக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


    Next Story
    ×