என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நலைப் பள்ளியில் 21-ஆம் ஆண்டு விழா நடந்தது. நடந்த விழாவிற்கு கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கல்விநிறுவன செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் சண்முக சுந்தரம், முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் கலைசெல்வன், டாக்டர் கோசிபா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலுார்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம், காரை, சில்லக்குடி, மேத்தால் உள்ளிட்ட கிராமங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரூ.38 லட்சம் செலவில் கொளக்காநத்தம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடப்பணிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். பின்னர், சில்லக்குடி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயி தேவேந்திரன் தக்காளி பயிரிட்டுள்ளதையும் சில்லக்குடியில், தரிசு நிலத்தை அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செப்பனிட்டு விளை நிலமாக மாற்றும் பணியினையும் பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-23ம் நிதிஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 30 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.22.26 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் பல்வேறு பணிகளின் முக்கியமானது தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றும் பணியாகும். அதனடிப்படையில், பெரம்பலுார் மாவட்டத்தில் இதுவரை 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பாபு, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் யுவராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெரம்பலுார்:
பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழுநீக்க நாள் முன்னிட்டு மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது, சுத்தமற்ற குடிநீரை குடித்தல் மற்றும் சுகாதாரமில்லாத இடங்களுக்கு செருப்பு அணியாமல் சென்று வரும் போதும் உடலுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள குடற்புழு நீக்க மாத்திரை அரசால் வழங்கப்படுகின்றது.குடற்புழு நீக்க மாத்திரையினை வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 1,71,590 குழந்தைகள் மற்றும் 45,034 பெண்கள் பயனடைய உள்ளனர். மேலும் உங்கள் ஊரில் அல்லது உங்கள் தெருவில் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்தோ, வன்கொடுமை நிகழ்வது குறித்தோ உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் நீங்கள் பயமின்றி அதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். இதுகுறித்த தகவலை யாரிடம் தெரிவிப்பது, தகவல் சொல்பவரைப்பற்றி வெளியில் தெரிந்துவிடுமோ என்ற சந்தேகங்கள் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு தகவல் தெரிந்தால் பயமின்றி மாவட்ட கலெக்டரான என்னிடமே அலைபேசிவாயிலாக தெரிவிக்கலாம். எனது அலைபேசி எண் 94441 75000 ஆகும்.அனைவரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மாணவ, மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ள வசதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள்ள அறிவிப்பு பலகைகளில் கலெக்டரின் செல் போன் எண்ணை எழுதி வைக்க வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியின் போது, மருத்துவப் பணி துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தினை, மாநில செயலாளர் கருணாகரன் கையெழுத்துயிட்டு துவக்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரியா, மாவட்ட துணைத் தலைவர் ராமு, மாவட்ட செயற்குழு துரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் சடையப்பன், அருண், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிகண்டன், காசிராஜன், ரவிச்சந்திரன், கார்த்திக் ராஜா, சிஐடியூமாவட்ட செயலாளர்அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமானவர்கள்கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். தமிழக அரசின் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை புதுக்கோட்டை, பெரம்ப லூர் மாவட்டத்தில் காவல்து றையினர் முழு வீச்சில் கட்டுப்படுத்திட வலியுறுத்தியும், போதைக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து, முதல்வருக்கு அனுப்ப உள்ளதாக அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை. இவர் சென்னையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்து விட் டார்.இவரது மனைவி தமி–ழரசி (வயது 56). கணவர் இறந்து விட்ட நிலையில் தமிழரசி தனது மகன் விஜயகுமாருடன் நெடுவா–சல் கிராமத்தில் வசித்து வந்தார். காலனி தெருவில் தமிழரசிக்கு இரண்டு வீடு–கள் உள்ளன. அதில் தமிழரசி பகலில் பழைய வீட்டில் தங்கி அங்கு சமைத்து சாப்பிட்டு வந்தார். பின்னர் இரவில் அதே பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய வீட் டில் தங்கிக் கொள்வார்.மகன் விஜயகுமாருக்கு திருமணமாகி அவர் குடும்பத் துடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார். நேற்றும் தமிழரசி வழக்கம்போல் பகலில் பழைய வீட்டில் தங்கி விட்டு, இரவில் வீட்டின் பூட்டை பூட்டிவிட்டு புதிய வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றார்.இந்நிலையில் நள்ளிர–வில் மர்ம நபர்கள் தமிழ–ரசியின் பழைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் இருந்த பீரோ–வையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள் ளையடித்து சென்ற–னர்.இன்று அதிகாலை தூங்கி எழுந்த தமிழரசி சுமார் 5 மணி அளவில் வழக்கம்போல் பழைய வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவும் திறந்து கிடந்ததோடு, அதில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந் தது.இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீ–சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணவர்கள், மோப்பநாய் கொண்டு தடய அறிவியல் பரிசோதனை செய்யப்பட்டது.தமிழரசி இரவில் புதிய வீட்டுக்கு சென்று தங்கி வந்ததை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த நபர் கள்தான் இந்த துணி–கர கொள்ளையை அரங் கேற்றி உள்ளனர். தெரிந்த நபர்கள் யாராவது இதில் ஈடுபட்டி–ருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீ–சார் விசாரணைணை முடுக்கி விட்டுள்ளனர்.
அகரம்சீகூர்,
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி வளாகத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ, கால்நடை துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் லெப்பைக்குடிக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், தாங்கள் வளர்க்கும் நாய், பூனைகளை கொண்டு வந்து கால்நடை மருத்துவர்களிடம் பரிசோதனை செய்தனர். செல்லப்பிராணிகளுக்கு நோய் தாக்கம், பராமரிப்பு குறித்தும் பிராணிகள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. இம்முகாமில் மண்டல இணை இயக்குனர்சுரேஷ் கிறிஸ்டோபர், கால்நடை உதவி இயக்குனர் குணசேகரன், லெப்பைக் குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, கால்நடை உதவி மருத்துவர்கள் இ.ராமகிருஷ்ணன், திருநாவுக்கரசு , கால்நடை ஆய்வாளர் பிரேமா,மற்றும் உதவியாளர்கள் சின்னதுரை, ராஜசேகரன், கால்நடை மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பென்னங்கோணம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 2 மகன்களுடன் ஒரு பெண் வந்தார். அவர் திடீரென தனது மகன்களுடன் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்து, அவர்களை மீட்டனர். மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், குன்னம் அருகே பென்னகோணம் காலனி தெருவை சேர்ந்த மகேசின் மனைவி இளவரசி(வயது 37) என்பது தெரியவந்தது. இவரது மகன்கள் மகிழன்(14), எழிலன்(12).மேலும் மகேசுக்கும், இளவரசிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மகேஷ் தன் குடும்பத்தை சரியாக கவனித்து கொள்ளாமல், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடந்த 6-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி, இளவரசி தனது இடுப்பில் அரை லிட்டர் பாட்டிலில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மற்றொரு பெண், பள்ளி சீருடை அணிந்த தனது மகளுடன் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் மண்எண்ணெய் கேனை பறித்து, அவர்களை தடுத்து மீட்டு, விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், குன்னம் அருகே ேக.புதூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி கலா(32), அவரது மகள் தரணி(13) என்பது தெரியவந்தது. ராஜமாணிக்கம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது தம்பி தர்மராஜூக்கும்(28) சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கலாவின் திருமணத்தின்போது போட்ட 20 பவுன் நகை, ரூ.5 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறி அவரிடம் தகராறு செய்து வருவதாகவும், இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று அவர் தனது மகளுடன் வந்து தீக்குளிக்க முயன்றதும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மண் சாலையில் நேற்று அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற இளைஞர்கள், அதனை பிடித்து வைத்து கொண்டு, பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்த நட்சத்திர ஆமையை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.
பெரம்பலூர்
வடக்கு மாதவி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 45). இவருக்கு ஜெயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குணசேகரனும், ஜெயாவும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் கடந்த 10-ந்தேதி தங்கள் வீட்டில் உள்ள பீரோவில் 1 பவுன் மோதிரம், ரூ.30 ஆயிரம், ஒரு ஜோடி கொழுசு ஆகியவற்றை வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். முன்னதாக அவர்களது பிள்ளைகளும் கல்லூரி மற்றும் பள்ளிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை அவர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த நகை, பணம், கொழுசு ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குணசேகரன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துவக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேசன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேசன் கடைகளுக்கு அனுப்புவது வழக்கம்,filஇந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டாமாந்துறை மற்றும் வி.களத்தூர் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டிஎஸ்பி சுதர்சனம் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறைப்படி நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா, ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா, நெல் தரமாக இருக்கிறதா என நெல்மூட்டைகளையும், ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தரமாகவும், முறையாகவும், முறைகேடு இல்லாமல் நெல்களை கொள்முதல் செய்யவேண்டும் என தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 416 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பல்கீஸ் தலைமை வகித்து தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல், குடும்ப நல கோர்ட் நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி மூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் கோர்ட் நீதிபதி ராஜமகேஸ்வர், குற்றவியல் கோர்ட் நீதிபதிகள் சுப்புலட்சுமி, சங்கீதாசேகர், கவிதா மற்றும் ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி கண்ணையன் ஆகியோர் கொண்ட 6 அமர்வுகளாக வழக்குகள் விசாரணை நடந்தது.இதில் வங்கி வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 416 வழக்குகள் 4 கோடியே 55 லட்சத்து 93 ஆயிரத்து 354 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மேலும் மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்ப்டடவரின் குடும்பத்தாருக்கு மக்கள் நீதி மன்றத்தில் தீர்வு காணப்பட்டு ரூ. ஒரு கோடியே 40 லட்சத்திற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதில் வக்கீல்கள்,காவல் துறையினர், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
தமிழ் வழியில் படித்தோ ருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென தமிழ்வழிக் கல்வி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.பெரம்பலூர் பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் தமிழறிஞர்கள் இளங்குமரனார், பாவாணர் ஆகியோரின் பிறந்த நாள், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, இயக்கச் செயலாளர் தேனரசன் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநர் தம்புசாமி, தமிழ் வழிக்கல்வி இயக்க மாநிலத் தலைவர் சின்னப்பதமிழர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மாவட்டம் தோறும் தமிழ் மருத்துவக் கல்வி கல்லூரி நிறுவ வேண்டும். மத்திய, மாநில அரசுப் பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழ் வழியில் படித்தோருக்கு வேலை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மழலைக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆய்வுக் கல்வி வரை தமிழ்வழியில் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு சாதி மறுப்பாளர் எனச் சான்று வழங்கி உடனே அரசுப்பணி வழங்கவும், அவர்களுடைய குழந்தைகளுக்குச் சாதிய ற்றவர் என்று சான்று வழங்க வேண்டும்போட்டி தேர்வுகள் அனைத்தையும் தமிழ் மொழியில்நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.இக்கூட்டத்தில், நிர்வாகிகள் செம்பியன், முகுந்தன், செங்கோலன், அண்ணாதுரை, பேராசி ரியர் செல்வக்குமார், தங்க ராசு, காப்பியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






