என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விளை நிலங்களாக மாற்றப்பட்ட 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள்-ஆய்வில் கலெக்டர் தகவல்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் விளை நிலங்களாக மாற்றப்பட்ட 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள்-ஆய்வில் கலெக்டர் தகவல்

    ரூ.38 லட்சம் செலவில் கொளக்காநத்தம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பெரம்பலுார்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம், காரை, சில்லக்குடி, மேத்தால் உள்ளிட்ட கிராமங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரூ.38 லட்சம் செலவில் கொளக்காநத்தம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடப்பணிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். பின்னர், சில்லக்குடி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயி தேவேந்திரன் தக்காளி பயிரிட்டுள்ளதையும் சில்லக்குடியில், தரிசு நிலத்தை அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செப்பனிட்டு விளை நிலமாக மாற்றும் பணியினையும் பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-23ம் நிதிஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 30 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.22.26 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் பல்வேறு பணிகளின் முக்கியமானது தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றும் பணியாகும். அதனடிப்படையில், பெரம்பலுார் மாவட்டத்தில் இதுவரை 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பாபு, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் யுவராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×