என் மலர்
பெரம்பலூர்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
- பஸ் ஸ்டாப் திறந்து வைத்தபின்னர் அளித்த பேட்டியில் மருத்துவ கல்லூரி கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பேருந்து நிறுத்த புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் ஆகியவற்றையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார்.விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொ ய்யாமொழி,மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் ,சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி, கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத்தில் இருந்து அணிகள் கலந்து கொண்டன
- சிவகங்கை அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல் மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மைதானத்தில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கோ-கோ கழகம் இணைந்து , சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாநில அளவிலான மகளிருக்கான கோகோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பெண்களுக்கான நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஈரோடு, சென்னை, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 150 வீராங்கனைகள் பங்கேற்றனர்.மாநில அளவிலான மகளிருக்கான கோ-கோ போட்டியை சென்னை இந்திய விளையாட்டு ஆணைய மைய பொறுப்பாளர் டி.பி. மதியழகன் துவக்கி வைத்தார்.இறுதிப் போட்டியில் சிவகங்கை அணியினரும், ஈரோடு அணியினரும் மோதிக்கொண்டனர். இப்போட்டியில், சிவகங்கை அணியினர் முதலிடமும், ஈரோடு அணியினர் 2 ஆம் இடமும், திருப்பூர், கோவை ஆகிய அணியினர் 3 ஆவது இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் , ஆல் மைட்டி வித்யாலயா பள்ளி தாளாளர் ராம்குமார் ஆகியோர் சான்றிதழும், பரிசுக் கோப்பையும் வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில கோ- கோ கழகச் செயலாளர் நெல்சன் சாமுவேல், இணைச் செயலாளர்கள் அசோக், கருப்பையா, ராஜி, நடுவர் மன்றக் குழு நாகராஜ், ஏஞ்சல்ஸ், நாராயணன் உள்பட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்றது
- மாவட்ட எஸ்.பி. கலந்து கொண்டு பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மகளிர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் நிர்வனர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள தலைவர் சாந்தா கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். செயலாளர் மித்ரா வாழ்த்துரை வழங்கினார்.பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷியாமாளாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறை சார்ந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா உதவி பேராசிரியர் வினோதினி, செவிலியர் அகஸ்யா, ஆசிரியர் புஸ்பாமேரி, அழகுகலை நிபுணர்.சுந்தரி மாமல்லன் சத்துணவு அமைப்பாளர் கொளஞ்சி வாசு, தூய்மை பணியாளர் சின்னபொண்ணு, ஆன்மிக சொற்பொழிவாளர் குங்குமபிரியா, மங்களபிரியா கண்தான தொழில் நுட்பவல்லுநர் சாருபாலா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.இந்த வருடத்திற்கான மகளிர் தின கருப்பொருளானா நவநாகரிக தொழில் நுட்பத்தில் பாலின சமபங்கு தழுவல் என்பதினை மக்களுக்கு பறை சாற்றும் விதமாக குறியீட்டை கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி, மற்றும் கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி மாணவிகள் அமைத்து காண்பித்தனர். விழாவில் ரேவதி வரவேற்றார் டாக்டர் புவனேஸ்வரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அமராவதி செய்திருந்தார்.
- கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர் அலுவலர்களின் மெத்தனப் போக்கினை கண்டிப்பது, பதவி உயர்வு வழங்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க கிளை தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண்டரை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஊகோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் விஏஓவினர் பலர் கலந்து கொண்டனர்.
- 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
- சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் பணிபுரிய வக்கீல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லீகல் எய்ட்டு டிபன்ஸ் கவுன்சில் சிஸ்டம் என்ற பிரிவிற்கு தகுதி வாய்ந்த வக்கீல்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம். இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தெரிவித்துள்ளார்.
- 17 வழக்குகள் சமரச தீர்வு
- பெரம்பலூரில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு ஒருங்கிணைந்த கோர்ட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமமான பல்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
இதில் மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல், குற்றவியல் கோர்ட் நீதிபதி சங்கீதா ஆகியோர் கொண்ட அமர்வு அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். இதில் ரூ.35 லட்சத்து 56 ஆயிரத் மதிப்பிலான 17 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதையடுத்து மோட்டர் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு சமரச தீர்வுக்கான சான்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்கள், போலீசார், கோர்ட் பணியாளர்கள் மற்றும் வழக்கு தாரர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமை வகித்தார். முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பூத் கமிட்டி படிவங்களை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.கூட்டத்தில் வரும் எம்பி தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், ராணி, லெட்சுமி, ராஜேஸ்வரி உட்பட பலர் பேசினர். வரும் எம்பி தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது, அதிமுக பொதுசெயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவளிப்பது, வரும் எம்பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து சென்று வெற்றிபெற பாடுபடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, நகர செயலாளர் ராஜபூபதி, பேரூர் செயலாளர் செந்தில்குமார், கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிது
- மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பெரம்பலூர் நான்கு சாலை பகுதியில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அம்பிகா தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று மின் இணைப்பு, மின் வினியோகம், மின் கட்டணம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் முறையிட்டு தீர்வு காணலாம்.
- வன உயிரின சட்டம் குறித்து நடைபெற்றது
- வன ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மற்றும் அரியலூர் வனக் கோட்டங்களை சேர்ந்த அனைத்து நிலை களப் பணியாளர்களுக்கு, வன உயிரின சட்டம் மற்றும் வனச சட்டம் ஆகியவை தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட வன அலுவலர் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வன சரக அலுவலர்கள், 1972 வன சட்டம், 1882 வனச் சட்டம், பட்டியலிடப்படாத மர வகைகள், காப்புக்காடு தொடர்பான வழக்குகள், பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் நடைபெறும் வனக் குற்றங்கள், நீதி மன்ற நடைமுறைகள் ஆகியன குறித்து பயிற்சி அளித்தனர்.
- சாலையை கடக்க முயன்ற போது விபத்து
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் குரும்பலூரை அடுத்து ஈச்சம்பட்டி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்
- மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து மூட்டைகள் சிதறின
- அதிர்ஷ்டவசமாக டிரைவர உயிர் தப்பினார்
பாடாலூர்,
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, மால்வாய் கிராமத்தில் இருந்து மக்காச்சோள மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் மாவட்டத்திற்கு நேற்று காலை புறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம்-துறையூர் சாலையில் குரூர் பகுதியில் நேற்று மதியம் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மக்காச்சோள மூட்டைகள் சிதறி விழுந்து சேதமடைந்தன. லாரியின் டிரைவர் உள்ளிட்டோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் விபத்துக்குள்ளான லாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. மக்காச்சோள மூட்டைகள் மாற்று லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- ரூ.35.56 லட்சம் நஷ்டஈடு பெற்ற தரப்பட்டது
பெரம்பலூர்
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமையிலும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) அண்ணாமலை முன்னிலையிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி முத்துகுமரவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கீதா சேகர் ஆகியோர்களை கொண்டு ஒரே அமர்வாக அமைக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 81 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 17 வழக்குகளுக்கு ரூ.35 லட்சத்து 56 ஆயிரத்து 500-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதிபதி பல்கீஸ் உத்தரவு சான்றினை வழங்கினார். இதில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் மணிவண்ணன் மற்றும் திருநாவுக்கரசு, அருணன் உள்ளிட்ட வக்கீல்கள், போலீசார், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.






