என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன ஊழியர்களுக்கு பயிற்சி
    X

    வன ஊழியர்களுக்கு பயிற்சி

    • வன உயிரின சட்டம் குறித்து நடைபெற்றது
    • வன ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் வனக் கோட்டங்களை சேர்ந்த அனைத்து நிலை களப் பணியாளர்களுக்கு, வன உயிரின சட்டம் மற்றும் வனச சட்டம் ஆகியவை தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட வன அலுவலர் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வன சரக அலுவலர்கள், 1972 வன சட்டம், 1882 வனச் சட்டம், பட்டியலிடப்படாத மர வகைகள், காப்புக்காடு தொடர்பான வழக்குகள், பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் நடைபெறும் வனக் குற்றங்கள், நீதி மன்ற நடைமுறைகள் ஆகியன குறித்து பயிற்சி அளித்தனர்.

    Next Story
    ×