என் மலர்
உள்ளூர் செய்திகள்

உலக மகளிர் தின விழா
- பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்றது
- மாவட்ட எஸ்.பி. கலந்து கொண்டு பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மகளிர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் நிர்வனர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள தலைவர் சாந்தா கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். செயலாளர் மித்ரா வாழ்த்துரை வழங்கினார்.பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷியாமாளாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறை சார்ந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா உதவி பேராசிரியர் வினோதினி, செவிலியர் அகஸ்யா, ஆசிரியர் புஸ்பாமேரி, அழகுகலை நிபுணர்.சுந்தரி மாமல்லன் சத்துணவு அமைப்பாளர் கொளஞ்சி வாசு, தூய்மை பணியாளர் சின்னபொண்ணு, ஆன்மிக சொற்பொழிவாளர் குங்குமபிரியா, மங்களபிரியா கண்தான தொழில் நுட்பவல்லுநர் சாருபாலா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.இந்த வருடத்திற்கான மகளிர் தின கருப்பொருளானா நவநாகரிக தொழில் நுட்பத்தில் பாலின சமபங்கு தழுவல் என்பதினை மக்களுக்கு பறை சாற்றும் விதமாக குறியீட்டை கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி, மற்றும் கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி மாணவிகள் அமைத்து காண்பித்தனர். விழாவில் ரேவதி வரவேற்றார் டாக்டர் புவனேஸ்வரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அமராவதி செய்திருந்தார்.






