என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான மகளிர் கோ-கோ போட்டி
- மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத்தில் இருந்து அணிகள் கலந்து கொண்டன
- சிவகங்கை அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல் மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மைதானத்தில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கோ-கோ கழகம் இணைந்து , சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாநில அளவிலான மகளிருக்கான கோகோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பெண்களுக்கான நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஈரோடு, சென்னை, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 150 வீராங்கனைகள் பங்கேற்றனர்.மாநில அளவிலான மகளிருக்கான கோ-கோ போட்டியை சென்னை இந்திய விளையாட்டு ஆணைய மைய பொறுப்பாளர் டி.பி. மதியழகன் துவக்கி வைத்தார்.இறுதிப் போட்டியில் சிவகங்கை அணியினரும், ஈரோடு அணியினரும் மோதிக்கொண்டனர். இப்போட்டியில், சிவகங்கை அணியினர் முதலிடமும், ஈரோடு அணியினர் 2 ஆம் இடமும், திருப்பூர், கோவை ஆகிய அணியினர் 3 ஆவது இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் , ஆல் மைட்டி வித்யாலயா பள்ளி தாளாளர் ராம்குமார் ஆகியோர் சான்றிதழும், பரிசுக் கோப்பையும் வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில கோ- கோ கழகச் செயலாளர் நெல்சன் சாமுவேல், இணைச் செயலாளர்கள் அசோக், கருப்பையா, ராஜி, நடுவர் மன்றக் குழு நாகராஜ், ஏஞ்சல்ஸ், நாராயணன் உள்பட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.






