என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமை வகித்தார். முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பூத் கமிட்டி படிவங்களை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.கூட்டத்தில் வரும் எம்பி தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், ராணி, லெட்சுமி, ராஜேஸ்வரி உட்பட பலர் பேசினர். வரும் எம்பி தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது, அதிமுக பொதுசெயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவளிப்பது, வரும் எம்பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து சென்று வெற்றிபெற பாடுபடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, நகர செயலாளர் ராஜபூபதி, பேரூர் செயலாளர் செந்தில்குமார், கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






