என் மலர்
நீலகிரி
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுவதில் ரூ.25 லட்சம் முறைகேடு ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டி:
ஊரக பகுதிகளில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு மூலம் ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற ஊரக பகுதிகளில் தனி நபர் கழிப்பறைகள் அமைக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இங்குள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடநாடு, எப்பநாடு, தும்மனட்டி, நஞ்சநாடு, தொட்டபெட்டா உள்பட 13 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்தப்பகுதிகளில் கழிப்பறை இல்லாத வீடே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்ட மானியம் வழங்கப்பட்டது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய நாகராஜ் (வயது 50), நஞ்சநாடு, கூக்கல், எப்பநாடு உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் தனி நபர் கழிப்பறை கட்டப்பட்டதாக கணக்கு காண்பித்து ரூ.25 லட்சத்துக்கும் மேல் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கழிப்பறை கட்ட மக்களுக்கு மானியம் வழங்கியது போல் கணக்கு காட்டி, அந்த பணத்தை மற்றொருவர் வங்கி கணக்கில் செலுத்தி இருப்பதும் தெரியவந்து உள்ளது.
முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நாகராஜ், தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரிவில் உதவி கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி கூறும்போது, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்த நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
ஊட்டி:
இ-பாஸ் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நீலகிரியில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டம் காரணமாக கொரோனா பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு ஊட்டியில் இருந்து மஞ்சூர், கோவை, மாயார், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக பஸ்களில் இருந்த பயணிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பயணிகளின் பெயர், செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் நீலகிரியில் 28 தொழில் திட்டங்களுக்கு ரூ.85 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்), பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி.) ஆகிய திட்டங்கள் நீலகிரி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2020-2021-ம் நிதியாண்டில் சுயதொழில் தொடங்க நீலகிரிக்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 28 தொழில் திட்டங்களுக்கு மானியம் ரூ.85 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் தொழில் முனைவோர் விரைவில் தொழில் தொடங்கும் பொருட்டு மாவட்ட தேர்வுக்குழு மூலம் நடக்கும் நேர்முகத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் திட்டங்களுக்கான தொழில் முனைவோர் பெற வேண்டிய பயிற்சியில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை மாநில அரசு விலக்கு அளித்து அரசாணை பிறப்பித்தது. பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் பெற வேண்டிய பயிற்சியை இணையவழி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/ne-eds என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.
மேலும் 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உற்பத்தி பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது சேவை பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலோ 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உற்பத்தி பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலோ அல்லது சேவை பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலோ கல்வித் தகுதி அவசியம் இல்லை. சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் தகுதியானவர்கள்.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.25 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும் தொடங்க www.kv-i-c-o-n-l-i-ne.gov.in/pm-e-g-p-e-p-o-rt-al என்ற இணையதள முகவரி யில் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நகர்ப்புற பொது பிரிவினருக்கு 15 சதவீதம், நகர்ப்புற சிறப்பு பிரிவினருக்கு 25 சதவீதம், கிராமப்புற பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம், கிராமப்புற சிறப்புப் பிரிவினருக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9345619672 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆகவே தகுதியும், ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
குன்னூரில் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னூர்:
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இந்த காட்டில் காட்டெருமை, காட்டுயானை போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இது மட்டுமின்றி பலாப்பழ சீசன் மற்றும் பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் போது நீலகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள சமவெளிப்பகுதியிலிருந்து யானைகள் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் போன்ற பகுதிக்கு வருவது உண்டு.
இந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக பசுந்தீவனம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இதில் ஒற்றை யானை ஒன்று கே.என்.ஆர். பகுதியில் சுற்றி திரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இது குறித்து குன்னூர் வனச்சரகர் சசிக்குமார் கூறுகையில், கே.என்.ஆர்.நகரில் சுற்றித்திரியும் ஒற்றை யானை பர்லியார் காட்டில் உள்ளதாகும். அது பசுந்தீவனம் மற்றும் தண்ணீருக்காக சாலையை கடந்து வருகிறது.இந்த யானை யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. இருப்பினும் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 7 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஊட்டி:
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடந்து வருகிறது. வருகிற 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மேற்கொள்ள கடந்த 21-ந் தேதி, நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தது. ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 683 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியலை காண்பித்து பெயர் உள்ளதா என்று சரிபார்க்கவும் மற்றும் திருத்தம் செய்ய படிவங்களை வழங்கினர். 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க அதிகம் பேர் விண்ணப்பித்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 21-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் 3 ஆயிரத்து 431 பேர், நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 684 பேர் என மொத்தம் 9 ஆயிரத்து 115 பேர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 403 பேர், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 499 பேர், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 298 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊட்டியில் 312 பேர், குன்னூரில் 65 பேர், கூடலூரில் 93 பேர் என மொத்தம் 470 பேர் விண்ணப்பித்து உள்ளனர். திருத்தம் செய்ய ஊட்டியில் 306 பேர், குன்னூரில் 319 பேர், கூடலூரில் 281 பேர் என மொத்தம் 906 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 130 பேர், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 152 பேர், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 257 பேர் என மொத்தம் 539 பேர் விண்ணப்பித்தனர். நீலகிரியில் 21-ந் தேதியை விட 22-ந் தேதி நடந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தவர்கள் அதிகம். வருகிற டிசம்பர் மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம். பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை வயது சான்றாக இணைக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு நகலை முகவரி சான்றுக்காக இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தில் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி பசுமையை பாதுகாக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி:
மலைபிரதேசமான நீலகிரி மாவட்டம் சுற்றுலாத்தலமாக உள்ளதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் இங்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
நீலகிரி பசுமை நிறைந்த மாவட்டம் என்பதாலும், இயற்கை சூழல் நிறைந்த பகுதி என்பதாலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் கல்லார் மற்றும் கக்கநல்லா சோதனைச் சாவடிகள் வழியாக நுழையும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட அனைத்து வாகனங்களுக்கும் ரூ.30 பசுமை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.
கொரோனா காரணமாக தற்போது பசுமை வரி வசூலிக்கப்படுவது இல்லை. இதற்கிடையே, பசுமை வரி உயர்த்தப்பட்டு உள்ளதுடன், வருகிற 1-ந் தேதி முதல் முதன்முறையாக இருசக்கர வாகனங்களுக்கும் பசுமைவரி வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் சாலையோரங்களில் குப்பைகள் அதிகமாக காணப்படுவதால் தினமும் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பசுமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பஸ், லாரி, நான்கு சக்கர வாகனங்களுக்கு பசுமை வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
வனத்துறை மற்றும் உள்ளாட்சி துறையில் பசுமையை பாதுகாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாமல் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கி பசுமையான மாவட்டமாக நீலகிரியை மாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குன்னூரில் உள்ள ரேலியா அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குன்னூர்:
குன்னூர் அருகே பந்துமி என்ற வனப்பகுதியில் ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் உயரம் 43.7 அடி ஆகும். இந்த அணையில் இருந்து குன்னூர் நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணை நிரம்பியது. எனவே அணையின் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.
இந்த தண்ணீர் குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி பகுதியில் உள்ள ஜெகதளா பேரூராட்சியில் இருக்கும் தடுப்பணைக்கு செல்கிறது. அந்த தடுப்பணையும் நிரம்பியதால் அந்த தண்ணீர் ஆற்றில் கலந்து வீணாக செல்கிறது. பருவமழை பெய்யும்போது இந்த அணை உடனடியாக நிரம்புவதுடன், உபரிநீர் ஆற்றில் வீணாக செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உபரிநீர் ஆற்றில் கலந்து வீணாகுவதை தடுக்க தடுப்பணை அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, குன்னூரில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் மழைக்காலத்தில் ரேலியா அணை நிரம்பிவிடுவதால் உபரிநீர் வீணாக ஆற்றில் செல்வதை தடுக்க தகுந்த இடத்தில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து குன்னூருக்கு குடிநீர் எடுத்தால் தட்டுப்பாடு நீங்கும். அதை அதிகாரிகள் செய்ய முன்வர வேண்டும் என்றனர்.
வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி பசுமையை பாதுகாக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி:
மலைபிரதேசமான நீலகிரி மாவட்டம் சுற்றுலாத்தலமாக உள்ளதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் இங்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
நீலகிரி பசுமை நிறைந்த மாவட்டம் என்பதாலும், இயற்கை சூழல் நிறைந்த பகுதி என்பதாலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் கல்லார் மற்றும் கக்கநல்லா சோதனைச் சாவடிகள் வழியாக நுழையும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட அனைத்து வாகனங்களுக்கும் ரூ.30 பசுமை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.
கொரோனா காரணமாக தற்போது பசுமை வரி வசூலிக்கப்படுவது இல்லை. இதற்கிடையே, பசுமை வரி உயர்த்தப்பட்டு உள்ளதுடன், வருகிற 1-ந் தேதி முதல் முதன்முறையாக இருசக்கர வாகனங்களுக்கும் பசுமைவரி வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் சாலையோரங்களில் குப்பைகள் அதிகமாக காணப்படுவதால் தினமும் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பசுமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பஸ், லாரி, நான்கு சக்கர வாகனங்களுக்கு பசுமை வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
வனத்துறை மற்றும் உள்ளாட்சி துறையில் பசுமையை பாதுகாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாமல் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கி பசுமையான மாவட்டமாக நீலகிரியை மாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை விட பூரண குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பரவலை தடுக்க தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகளில் பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் குறிப்பிட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் மீட்கப்பட்ட 2 குட்டிகளை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளதாக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் (வெளிமண்டலம்) சிங்காரா வனச்சரகம் ஆச்சக்கரை பகுதியில் கடந்த 19-ம் தேதி பெண் புலி இறந்து கிடந்தது. மேலும் அதன் உடல் அருகே பிறந்து 3 வாரங்கள் மட்டுமே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் தனது தாயை இழந்த சோகத்தில் அந்தப்பகுதியில் தவித்து கொண்டிருந்தது.
இதை பார்த்த வனத்துறையினர் அந்த 2 புலிக்குட்டிகளை மீட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பராமரித்தனர்.
பின்னர் அந்த புலிக்குட்டிகளை பராமரிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர் ஸ்ரீதர் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கு வந்து மீட்கப்பட்ட புலிக்குட்டிகளை பரிசோதித்தார்.
அப்போது 2 குட்டிகளும் நல்ல நிலையில் ஆரோக்கியமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குட்டிகளுக்கு தேவையான பால் உள்ளிட்ட உணவுகளை கால்நடை மருத்துவ குழுவினர் வழங்கினர். இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
வனப்பகுதியில் மீட்கப்பட்ட 2 புலிக்குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர் பராமரிப்பு, அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் அந்த புலிக்குட்டிகளை பராமரித்து வளர்க்க அனைத்து வசதிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருப்பதால், அங்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. அங்கு 4 மாதங்கள் தொடர் பராமரிப்புக்கு பிறகு புலிக்குட்டிகளை மீண்டும் முதுமலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் அப்போதைய நிலையின்படி முடிவு எடுக்கப்படும். 2 புலிக்குட்டிகளையும் வண்டலூர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கோத்தகிரி அருகே டேங்கர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோத்தகிரி:
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள இடுஹட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு டீசல் ஏறிக்கொண்டு, டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராமசெல்வம் (வயது 39) ஓட்டி வந்தார்.
இந்த லாரி கோத்தகிரி கட்டபெட்டு பகுதியை அடுத்த பில்லிக்கம்பை பகுதியில் உள்ள குறுகிய வளைவில் திரும்பும் போது, பிரேக் பிடிக்காததால் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அத்துடன் லாரியில் இருந்து டீசல் கொட்டாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி சந்திரகுமார் தலைமையில் கோத்தகிரி, ஊட்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பிரேமானந்தன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு படையினர் அங்கு வந்து கிரேன் மூலம் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில், தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
உதகை:
நீலகிரி மாவட்டம் உதகை கூட்செட் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த விடுதிக்குள் நுழைந்த போலீசார், சோதனை நடத்தினர். இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நபர்கள், அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கபட்டது.
பின்னர், தங்கும் விடுதி உரிமையாளர் உட்பட 32 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 1,50,000 ரூபாய் மற்றும் சூதாட்டத்திறக்கு பயன்படுத்தபட்ட பொருட்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர். உதகையில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவாக உள்ளதால், பல விடுதிகள் சூதாட்ட விடுதிகளாக மாறியுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.