search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    நீலகிரியில் சிறப்பு முகாம்- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7200 பேர் விண்ணப்பம்

    நீலகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 7 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடந்து வருகிறது. வருகிற 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மேற்கொள்ள கடந்த 21-ந் தேதி, நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தது. ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 683 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியலை காண்பித்து பெயர் உள்ளதா என்று சரிபார்க்கவும் மற்றும் திருத்தம் செய்ய படிவங்களை வழங்கினர். 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க அதிகம் பேர் விண்ணப்பித்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 21-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் 3 ஆயிரத்து 431 பேர், நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 684 பேர் என மொத்தம் 9 ஆயிரத்து 115 பேர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 403 பேர், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 499 பேர், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 298 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊட்டியில் 312 பேர், குன்னூரில் 65 பேர், கூடலூரில் 93 பேர் என மொத்தம் 470 பேர் விண்ணப்பித்து உள்ளனர். திருத்தம் செய்ய ஊட்டியில் 306 பேர், குன்னூரில் 319 பேர், கூடலூரில் 281 பேர் என மொத்தம் 906 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 130 பேர், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 152 பேர், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 257 பேர் என மொத்தம் 539 பேர் விண்ணப்பித்தனர். நீலகிரியில் 21-ந் தேதியை விட 22-ந் தேதி நடந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தவர்கள் அதிகம். வருகிற டிசம்பர் மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம். பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை வயது சான்றாக இணைக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு நகலை முகவரி சான்றுக்காக இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தில் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×