என் மலர்
நீலகிரி
முழு ஊரடங்குக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ரூ.3 லட்சம் மலர் செடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர், அலங்கார செடிகள் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு அலங்கார செடிகள் ஒன்று ரூ.10, அழகாக தொங்க விடும் செடியுடன் கூடிய பூந்தொட்டி ரூ.110, மூலிகை செடிகள் ஒன்று ரூ.10, கேக்டஸ் மற்றும் சக்குலன்ட் வகை அழகு செடிகள் ஒன்று ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பால்சம், பிகோனியா, ஜெரேனியம், கார்னேசன், கோலிஸ், டன்சிங் டால் உள்பட 50 ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் விற்பனைக்கு உள்ளது.
இதனை வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்று வீடுகளில் வளர்க்கின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், பூங்காவில் மலர், அலங்கார செடிகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் செடிகள் தேக்கம் அடைந்தன. இருப்பினும் பணியாளர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
4 மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் 23-ந் தேதி சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் விற்பனை நிலையத்தில் மலர், அலங்கார செடிகளை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான ரகங்களை வாங்கி செல்கின்றனர். இதனால் முழு ஊரடங்குக்கு பின்னர் மலர் செடிகள் விற்பனை மீண்டும் நடந்து வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறும்போது,
முழு ஊரடங்கால் மலர் செடிகள் விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது தினமும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மலர், அலங்கார செடிகள் விற்பனையாகி வருகிறது. முழு ஊரடங்குக்கு பிறகு ரூ.3 லட்சம் மதிப்பில் மலர் செடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை வளாகத்திலும் செடிகள் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்குவதில்லை. இதனால் 99 சதவீத அறைகள் காலியாக உள்ளது.
கூடலூர்:
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்துவிட்டதால் தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பொதுமக்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும் என கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதே நடைமுறை கர்நாடக மாநிலத்திலும் உள்ளது.
நீலகிரி மாவட்டம் கேரளா-கர்நாடகா எல்லைகளில் உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இச்சான்றிதழ் இல்லாதவர்களை கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் போலீசார் சுகாதாரத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வரவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன மற்றும் யானை சவாரி தொடங்கியது. பின்னர் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானை சவாரி மட்டும் ரத்து செய்யப்பட்டது.ஆரம்பத்தில் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் நீலகிரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் தொடருவதால் மாநிலங்களுக்கு இடையே மக்கள் சென்று வருவது பெருமளவு குறைந்தே காணப்படுகிறது.
இதுகுறித்து முதுமலை வனத்துறையினர் கூறியதாவது:-
ஊரடங்குக்கு முன்பாக ஒரு வாரத்தில் 5,000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது கொரோனா பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து பெரும்பான்மையாக சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருவதில்லை.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதுமலை திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் மட்டுமே வந்து சென்றுள்ளனர். மேலும் விடுமுறை தினத்திலும் சுற்றுலா பயணிகள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. இதேபோல் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்குவதில்லை. இதனால் 99 சதவீத அறைகள் காலியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக அரசு அதிக தடுப்பூசிகளை நீலகிரி மாவட்டத்துக்கு வழங்கியதால் இலக்கை எட்ட முடிந்ததாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7 லட்சத்து 24 ஆயிரத்து 748 பேர் ஆகும். இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 60 பேர் உள்ளனர். இதில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 3 மாத காலத்துக்குள் உள்ள 6 ஆயிரத்து 277 பேரை தவிர்த்து மீதமுள்ள 5 லட்சத்து 14 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை 100 சதவீதம் போட்டுக்கொண்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த சாதனை குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது.
சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதால் தான் இந்த இலக்கை அடைய முடிந்தது. நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை அடைய சிறப்பாகப் பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி.
அதேபோல, இன்னும் மூன்று மாத காலத்துக்குள் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த 2-ம் தவணை தடுப்பூசியையும் முழுமையாக செலுத்திக்கொண்டால் நீலகிரி மாவட்டம் தமிழகத்திலேயே முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியை 100 சதவீதம் செலுத்திக்கொண்ட முதல் மாவட்டமாக மாறும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் தமிழக அரசு அதிக தடுப்பூசிகளை நீலகிரி மாவட்டத்துக்கு வழங்கியதால் இந்த இலக்கை எட்ட முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக, கேரள மாநிலங்களில் கூடுதல் முதன்மை செயலாளர்களின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
கூடலூர்:
சென்னையில் இன்று நடைபெற உள்ள தமிழக, கேரள முதன்மை செயலர்கள் கூட்டத்தில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய மூவர் குழு மற்றும் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்குழுவினர் அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அளித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு 3 முறை மட்டுமே அணையின் நீர் மட்டம் 142 அடி வரை தேக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கும்போது அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு விடுகிறது.
பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பொதுப் பணித்துறையினர் உள்ளனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து விவசாய பிரதிநிதிகள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஐவர் குழு ஆய்வுக்கு வரும்போது கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக, கேரள மாநிலங்களில் கூடுதல் முதன்மை செயலாளர்களின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சத்சேனா மற்றும் கேரள நீர் வளத்துறை செயலாளர் டி.கே.ஜோஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 152 அடி தண்ணீர் தேக்குதல், பேபி அணையை பலப்படுத்துதல், இதற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட அனுமதி பெறுதல், பெரியாறு அணைக்கு தமிழக அதிகாரிகள் செல்வதற்காக வாங்கிய தமிழ் அன்னை படகுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆழியாறு, பரம்பிக்குளம் அணை பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்:
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழையால் கடும் குளிர் நிலவுகிறது. இதேபோல் தேவாலா பகுதியில் ரஜினிகாந்த் என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் மண்சரிவு அபாயம் உள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகையால் மேட்டுபாளையம்- ஊட்டிசாலை, மேட்டுபாளையம்- கோத்தகிரி சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
ஊட்டி:
இயற்கை காட்சிகளும், எண்ணற்ற சுற்றுலா தலங்களும் நிறைந்த பகுதியாக உள்ளது நீலகிரி மாவட்டம். மாவட்டத்தின் இயற்கை அழகை ரசிக்கவும், சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கவும் நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கொரோனாவால் மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அதனை நம்பி தொழில் செய்து வந்த வியாபாரிகளும், விடுதிகளும் மீண்டும் புத்துயிர் பெற்றன.
தற்போது விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை காரணமாக நீலகிரிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர்.
நேற்று முன்தினம் காலையில் இருந்து ஏராளமான வாகனங்கள் ஊட்டி நகருக்குள்ளும், புறநகர் பகுதிகளான கோத்தகிரி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து வர தொடங்கின.
நேற்று காலையும் தொடர்ந்து கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று சுற்றி பார்த்து, அங்கு மலர்செடிகளை கண்டு ரசித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

விடுமுறை நாளான கடந்த 2 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர். தொடர்ந்து அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையால் வியாபாரிகள், ஓட்டல்கள், சாலையோர வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலூர் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
கூடலூர்:
கூடலூர் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 565 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக கூடலூரை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார்(வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
மலைரெயிலுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் குன்னூர் வந்தது. அதனை ரெயில்வே ஊழியர்கள் வரவேற்றனர்.
குன்னூர்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஆரம்ப காலத்தில் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டது. இந்த என்ஜின் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டு, கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு நீலகிரியில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலமும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமும் மலைரெயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு முதன்முறையாக நிலக்கரி நீராவி என்ஜின் தயாரிக்க தென்னக ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி ரூ.8 கோடியே 7 லட்சம் செலவில் புதிய நிலக்கரி நீராவி என்ஜின் தயாரிக்கும் பணி, திருச்சியில் உள்ள பொன்மலை ரெயில்வே பணிமனையில் நடைபெற்றது.
இதையடுத்து பணி முடிந்து பொன்மலையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு என்ஜின் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹில்குரோவ் வரை சோதனை ஓட்டம் நடந்தது.
இது வெற்றியடைந்ததை தொடர்ந்து குன்னூருக்கு நிலக்கரி நீராவி என்ஜின் கொண்டு வரப்பட்டது. அதனை ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் வரவேற்றனர். மேலும் டிரைவருக்கு மலர் கொடுக்கப்பட்டது. அந்த நிலக்கரி நீராவி என்ஜினில் உள்ள சிறு பழுதுகள் நீக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பரவல் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கடந்த 3-ந் தேதி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 6-ந் தேதி யானை சவாரி தொடங்கியது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் யானை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி என எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. மாவட்டத்தின் இயற்கை அழகை ரசிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் நாள்தோறும் நீலகிரிக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
தற்போது விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக கார், வேன், மோட்டார் சைக்கிள், பஸ்கள் மூலம் நீலகிரிக்கு வந்தனர்.
அவர்கள் மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, பர்லியார் தோட்டக்கலை பண்ணை, ரோஜா பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் போன்றவற்றை குடும்பத்துடன் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மலர் மாடங்களிலும் மலர் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் ஊட்டி படகு இல்லம் மற்றும் பைக்கார படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் படகில் சென்று ஏரியின் அழகையும், இயற்கை காட்சியையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா வந்தவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தியதாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததாலும் ஊட்டி சேரிங்கிராஸ், தொட்டபெட்டா செல்லும் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.
நேற்று ஒரே நாளில் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவிற்கு 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இதுதவிர ரோஜா பூங்காவுக்கு 1,604 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 350 பேரும், மரவியல் பூங்காவுக்கு 83 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 1,379 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 350 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 142 பேரும் வந்திருந்தனர்.
ஊட்டி படகு இல்லத்துக்கு 3,200 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 2,000 பேரும் வருகை தந்திருந்தனர்.

ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் இருந்தே கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு கூடலூர், பந்தலூர், பொன்னானி, தேவாலா, உப்பட்டி, கரியசோலை, நெலாக்கோட்டை பிதர் காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பெய்த மழை இரவு வரை நீடித்தது. இந்த மழையால் கூடலூர் பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் பகுதி, ஊட்டி- கூடலூர் சாலை, கூடலூர் நகர பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழையால் தேவாலா நீர்மட்டம் பகுதியில் திடீரென பாறைகள் உருண்டு வந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பாறைகளை அப்புறப்படுத்தி அருகே இருந்த பள்ளத்தில் போட்டனர்.
கூடலூர் நாடுகாணி பகுதியில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.
மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
தேவாலா அருகே உள்ள வாலமூழா பகுதியில் ஆறு உள்ளது. தொடர்மழையால் இந்த ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்கள் கவனமுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேபோல் பந்தலூர் பஜாரில் மழை காரணமாக அங்குள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடியது. இதில் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரத்து 400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் உள்பட 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் தவிர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த சோதனை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தாசில்தார்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் சோதனை செய்தனர். அப்போது முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரத்து 400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.26 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. வருகிற காலங்களில் தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.