என் மலர்

  செய்திகள்

  மழை
  X
  மழை

  கூடலூர், பந்தலூரில் பலத்த மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
  கூடலூர்:

  கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

  தொடர் மழையால் கடும் குளிர் நிலவுகிறது. இதேபோல் தேவாலா பகுதியில் ரஜினிகாந்த் என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் மண்சரிவு அபாயம் உள்ளது.
  Next Story
  ×