என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஒவ்வொரு கடையின் உரிமையாளர்களும் கடை வாடகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும்
    • இந்த 9 கடைகள் மட்டும் சுமார் 1 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் நகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் ஒவ்வொரு கடையின் உரிமையாளர்களும் கடை வாடகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பலரும் வாடகை செலுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

    அதிகளவு வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ள நகராட்சி வருவாய் துறையினர், கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை வைத்துள்ள 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த 9 கடைகள் மட்டும் சுமார் 1 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதில் 1 கடை மட்டும் சுமார் 40 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது.

    இது குறித்து கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், மார்கெட் வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தினால் நகராட்சியின் நிதி நிலை சீராகி விடும். நிதி நிலை இல்லாததால் எந்த மக்கள் நல பணியும் செய்ய முடியவில்லை. எத்தனை நாளுக்கு சாலையோர மர ங்களை அகற்றியும் தூய்மை பணிகளை மேற்கொ ண்டும் மக்களை ஏமாற்ற முடியும். குன்னூர் மார்கெட்டில் உள ்வாடகையை ஒழித் து நிலுவை தொகை களை அதிரடியாக வசுல் செய்தால் மட்டுமே குன்னூர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

    • மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
    • பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    ஊட்டி:

    ஊட்டியைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் தனியாா் நா்சரி உரிமையாளராக உள்ளாா்.

    இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சேகா் அந்த மாணவியை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அப்போது மாணவியை அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

    அங்கு பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் இதுகுறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    போலீசாா் விசாரணையில், சேகா் அந்த மாணவியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஊட்டி அனைத்து மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சேகா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா். பின்னா் ஊட்டி மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் அவரை ஊட்டி கிளை சிறையில் அடை க்கப்பட்டார்.

    • விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.
    • அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம்.

    அரவேணு

    கோத்தகிரி உள்ள கோவில்களில் நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

    • கண்காணிப்பை தீவிரப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மாவட்டத்தின் நுழைவு வாயிலிலேயே வாகனங்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்து வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சார்பில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இருந்தாலும் பல இடங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாடிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். நீலகிரிக்கு வந்தவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் காணப்பட்டது.

    சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி தட்டு, டம்ளர் என தடைசெய்ய ப்பட்ட பொருட்களை பயன்படுத்திவிட்டு அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே மாவட்டத்தின் நுழைவு வாயிலிலேயே வாகனங்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    அப்போது பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனவிலங்குகளை வேட்டையாட வைத்த சுருக்கு கம்பியில் சிறுத்தை சிக்கியது தெரியவந்தது.
    • சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுத்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பகுதியில் உள்ள தோட்டத்தில் கடந்த 1-ந் தேதி சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    இதனை கவனித்த பொதுமக்கள் இதுபற்றி சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் வனசரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனர். அப்போது சிறுத்தை ஆக்ரோஷத்துடன் உறுமியது. இதையடுத்து சிறுத்தையை மீட்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர் சச்சின் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    அப்போது வனவிலங்குகளை வேட்டையாட வைத்த சுருக்கு கம்பியில் சிறுத்தை சிக்கியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார், எருமாடு கால்நடை டாக்டர் சரண்யா ஆகியோர் மயக்க ஊசி போட்டு 3 வயதுடைய பெண் சிறுத்தையை மீட்டு முதுமலை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தோட்ட உரிமையாளர் அனீஸ்ராஜன் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுத்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

    இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக திட்டதுணை இயக்குநர் வித்யா மேற்பார்வையில் கால்நடைகள் டாக்டர்கள் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் சிறுத்தையின் உடல் அந்தப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தல பகுதிகளில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.
    • கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ஊட்டி:

    காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக மலை மாவட்டமான நீலகிரிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்தனர்.

    இதனால் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டியது. அவர்கள் சுற்றுலா தலங்களை தங்கள் குடும்பத்தினருடன், பார்த்து ரசித்து, அங்கு நிலவிய இதமான காலநிலையை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல் செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தல பகுதிகளில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.

    கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்குள் என 170 வழித்தடங்களில் 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஊட்டி கிளையில் இருந்து மட்டும் 170 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கூட்டம் காரணமாக ஊட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    கூடுதல் பஸ்கள் இயக்காததால் அவர்கள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். மேலும் ஒரு சில பஸ்கள் வந்த போது வேகமாக முண்டியடித்து ஓடி சென்று பஸ்சில் ஏறி இடம் பிடித்தனர். குறிப்பாக, கோவைக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தொடர் விடுமுறை, பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் இதே நிலை நிலவுவதாகவும், அது மாதிரியான சமயங்களில் கூடுதல் பஸ் இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே சமயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்கள் வரிசையாக செல்வதற்கு மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டும், என்றனர்.

    இதேபோல் மாவட்டத்தில் நேற்று கூடலூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் அலைமோதினர்.

    • 2,000 மலா்தொட்டிகளால் மலா்க்காட்சி திடலில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
    • பல்வேறு வகையான 4 லட்சம் மலா்ச்செடிகள் மலா் பாத்திகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    2-ம் பருவ சீசனை முன்னிட்டு, ஊட்டியில் அரசினா் தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், மலா் காட்சி மாடத்தில் மலா்த்தொட்டிகளை அடுக்கும் பணிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் அமைச்சா் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு 2-ம் பருவத்தினை முன்னிட்டு, பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான 4 லட்சம் மலா்ச்செடிகள் கொண்டு மலா் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூக்கள் மலா்ந்து காட்சி அளிக்கிறது.

    கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப், புனே போன்ற வெளி மாநிலங்களிலிருந்து விதைகள் பெறப்பட்டு டேலியா, சால்வியா, இன்கோ மெரிகோல்டு, பிரெஞ்ச் மெரிகோல்டு, பிகோனியா, டெய்சி, கேலண்டூலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டா், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், டியூப்ரஸ் பிகோனியா, ஜெரேனியம் உள்ளிட்ட ரகங்களில் 10,000 மலா்த்தொட்டிகள் மலா்காட்சி திடலில் அடுக்கி வைத்து காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளது.

    இயற்கை வேளாண்மை

    நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்றுவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை வேளாண்மையை நோக்கி என்ற வாசகம் 2,000 மலா்தொட்டிகளால் மலா்க்காட்சி திடலில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படு த்தப்பட்டுள்ளது.

    நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பெரணி இல்லம் அமைந்துள்ள புல்வெளி மைதானத்தில் மஞ்சப்பையை பயன்படுத்தும் நோக்கமாக 5,000 மலா்தொட்டிகள் சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப்படு த்தப்பட்டுள்ளது. இந்த மலா்காட்சி திடல் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு மாதத்துக்கு காட்சிப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

    இதில், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதவி இயக்குநா் பாலசுந்தரம், மேலாளா்கள் இலக்கியா, கவின்யா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர்.

    • போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • மது விலக்கு சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி அருகே இடுஹட்டி ஊனமுற்றோர் காலனி பகுதியில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி கிராம பகுதியில் திடீர் மது விலக்கு சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் வைத்து ஒருவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஓம்.நகர் கிராமத்தை சேர்ந்த கமலநாதன் (57) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • பழுதடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கோத்தகிரி,

    கடந்த ஆண்டு நெல்லையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து, அதனை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, கோத்தகிரியில் 65 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பள்ளி விடுமுறை நாட்களில், மற்றொரு பழைய கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பள்ளி வளாகத்தில் இருந்த மற்றொரு பழைய கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்டிடத்தை தொழிலாளர்கள் இடித்து அகற்றி வருகின்றனர்.

    • கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர்.

    இந்த நிலையில் கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
    • சுற்றுலா பயணிகள் சிலர் இயற்கை அழகை ரசித்தவாறு புகைப்படங்களை எடுத்து கொண்டு இருந்தன

    கோத்தகிரி,

    ஆயுத பூஜை விடுமுறையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    நேற்றும் சுற்றுலாதல ங்களில் மக்கள் குவிந்து இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். ஊட்டியில் அனைத்து பகுதிகளையும் பார்த்து விட்டு, சுற்றுலா பயணிகள் கோத்தகிரிக்கு காரில் வந்தனர்.முள்ளூர் பகுதியில் இருந்த தேயிலை தோட்டத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் இயற்கை அழகை ரசித்தவாறு புகைப்படங்களை எடுத்து கொண்டு இருந்தனர்.

    அப்போது தேயிலை தோட்டத்தின் மறைவில் இருந்த 5 காட்டு யானைகள் திடீரென சுற்றுலா பயணிகளை நோக்கி ஓடி வந்தது. இதனை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் யானை விடாமல் அவர்களை துரத்தி வந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் காரில் ஏறி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து சிறிது ேநரம் கழித்து காட்டு யானைகள் காட்டுக்குள் சென்று மறைந்தது.

    கடந்த சில வாரங்களா கவே இதுபோன்ற நிகழ்வுகள் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து வருவ தால் சுற்றுலா பயணிகள் கவனத்துடனும் பாதுக்காப்பு டனும் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மர்ம போன் வந்தது.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ்நிலையம் அருகே ரெயில் நிலையம் உள்ளது. தற்போது 2-வது சீசன் தொடங்கிய உள்ள நிலையில் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்தநிலையில் ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் ஊட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்படும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஊட்டி ரெயில் நிலையத்தில் உள்ளூர் போலீசாரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர். ஆனால் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து பேசினார் என சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த நபர் ஆந்திர மாநிலத்தில் இருந்து பேசியது தெரிய வந்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக வெடிகுண்டு மிரட்டல் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×