search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A bear strolling"

    • கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அண்மை காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அண்மை காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே சுற்றி திரிந்து வருகின்றன.

    அவ்வாறு உலா வரும் கரடிகள் குடியிருப்புகள் மற்றும் கடைகளை உடைத்து சேதம் செய்வது மட்டுமல்லாமல் பொது மக்களை தாக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலடா பகுதியில் நேற்று மாலை கரடி ஒன்று சுற்றி திரிந்தது.அந்த கரடி சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கழிவு பொருட்களை சாப்பிட்டது.

    இதனை அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் பார்த்து, கரடியை விரட்ட முயற்சித்தனர். ஆனால் கரடி செல்லாமல் அங்கேயே நின்று உணவு கழிவு பொருளை தின்றது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அரவேனு, கேசலடா குடியிருப்பு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

    கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேசலாடா செல்லும் சாலையில் பகல் நேரத்தில் 4 கரடிகள் உலா வந்தது.
    • கரடிகளின் நடமாட்டதைக் கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், குட்டிகளுடன் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா செல்லும் சாலையில் பகல் நேரத்தில் 4 கரடிகள் உலா வந்தது. சாலையில் உலா வந்த கரடிகளை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு, அதை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    சற்று நேரம் அந்த பகுதியில் உலா வந்த கரடிகள் பின்னர் அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், கிராம மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளின் நடமாட்டதைக் கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர்.

    இந்த நிலையில் கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×