என் மலர்
நீலகிரி
- ஆ.ராசா எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கவுரி உள்பட பழங்குடியின சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வன உரிமை பாதுகாப்புச் சட்டம் குறித்து ஆ.ராசா எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, நகரமன்ற தலைவர்கள் வாணீஸ்வரி, சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் வள்ளி, கவுரி உள்பட பழங்குடியின சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- செயல் வீரர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
குன்னூர் நகர தி.மு.க சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வி.பி. தெரு கலைஞர் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி மற்றும் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் நகர கழக செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, குன்னூர் நகரமன்ற தலைவர் ஷீலாகேத்தரின், செல்வம், காளிதாஸ் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா, குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், சாந்தா, முருகேஷ், ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் பழனிசாமி, மணிகண்டன், சார்லி, காட்டேரி செல்வராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர் உசேன், கலீம், முரசொலி வெங்கடேஷ், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், ஜெகநாதன், கோபி, ராபர்ட், குமரேசன், நாகராஜ், சுசீலா, வசந்தி, பாக்யவதி, சித்ரா, செல்வி, காவேரி, செல்வி, ஜெகதளா பேரூராட்சி செயலாளர் சஞ்சீவ்குமார், கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்ட்டின், குன்னூர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன், உளிக்கள் பேரூராட்சி தலைவர் ராதா, கிளை செயலாளர்கள் ரஹீம் சண்முகம், ஜாகீர், சிக்கந்தர், சண்முகம், தொரை, சுந்தர், மூர்த்தி, கர்ணன், அப்துல் காதர் மற்றும் கழக நிர்வாகிகள் பிருந்தா, லியாகத் அலி, கோபு, அபி, ரவி, மூர்த்தி, வினோத், கிப்சன், ரிஸ்வான், உட்பட கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். குன்னூர் நகர துணைச் செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.
- ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
- போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஊட்டி,
மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகளிா் தின கொண்டாட்டம் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் நடந்தது. இதில் பெண்கள் சக்தி மற்றும் பாலின சமத்துவம் என்ற பெயரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியை மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
- காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக் கிராமப் பகுதிகளுக்கு வருகை தருகின்றன.
- பச்சை தேயிலை பறிக்கும் பணியை தொழிலாளா்கள் பாதியில் நிறுத்திவிட்டு திரும்பினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் காபி பழம் விளைச்சல் தொடங்கியுள்ள நிலையில், பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக் கிராமப் பகுதிகளுக்கு வருகை தருகின்றன. அவ்வாறு வரும் யானைகளில் சில யானைகள் அவ்வப்போது வழி தவறி வேறு கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, குஞ்சப்பனை முள்ளூா் கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்தது. இதன் காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணியை தொழிலாளா்கள் பாதியில் நிறுத்திவிட்டு திரும்பினா். தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- கழிவு நீர் கால்வாய், படிக்கட்டு ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து இருந்தது.
- ரூ.50 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் பழுதடைந்து உள்ள படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் 25-வது வார்டு ராஜாஜி நகரில் அய்யப்பன் கோவில் எதிர்புறம் ஜாக் பள்ளிவாசல் செல்லும் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய், படிக்கட்டு ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து இருந்தது.
அங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் பழுதடைந்து உள்ள படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.
எஸ்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் 33 லட்சம் ரூபாயும், கலைஞர் மேம்பாடு நிதியில் சுமார் 16.80 லட்சம் ரூபாயுடன் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்திரின், நகர மன்ற ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன், மற்றும் ஒப்பந்தர் ஜெயராம், தி.மு.க நிர்வாகிகள் அபி பேன்சி, ரஷீத் பாய், சாதிக் ஜிம், சாதிக், இஸ்மாயில் பாய், தர்மா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனை நிறைவேற்றி தருவதாக தேர்தலின் போது தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் உசேன் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனை தற்போது நிறைவேற்றி கொடுத்துள்ளார். அவரை பொதுமக்கள் பாராட்டினார்.
- பழங்குடியின மக்களுக்கான குறைதீா் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- சிறப்பு அழைப்பாளராக ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஊட்டி,
நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கான குறைதீா் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மசினகுடியில் நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 141 பயனாளிகளுக்கு ரூ.6.98 கோடி மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை, 9 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரம் மதிப்பில் தேன்பெட்டிகள், 44 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டது.
இதேபோல் 27 பயனாளிகளுக்கு வன உரிமை அமைப்புச் சட்டம் 2006-ன் கீழ் தனி நபா் உரிமை வழங்குதல் ஆணை, ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ. 4.80 லட்சம் மதிப்பில் ஆணை களும் வழங்கப்பட்டது.
வருவாய்த் துறை சாா்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.1.13 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, மாவட்ட வழங்கல் துறை சாா்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1.26 லட்சம் மதிப்பில் முதியோா் உதவித்தொகை, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.11.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம் சாா்பில் 10 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க கடனுதவி என மொத்தம் 323 பயனாளிகளுக்கு ரூ.8.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் ஊரக வளா்ச்சி முகமை திட்டத்தின் திட்ட அலுவலா் உமா மகேஸ்வரி, ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, பழங்குடி மக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
- கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார்.
- கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கமலம் சின்னசாமி. இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இவர் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை ஆற்றியதற்காக அவ்வையார் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதினை, கமலம் சின்னசாமிக்கு வழங்கினார்.
கமலம் சின்னசாமியின் சொந்த ஊர் ஊட்டி ஆகும். இவரது பெற்றோர் ராமசாமி-மாரியம்மாள். இவர் எம்.காம். எப்.ஐ.ஏ. சி.ஏ படித்தவர். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. இதுதவிர தமிழ் புலவர், மதுரை தமிழ் சங்க புலவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இவரது கணவர் சின்னசாமி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார்.
கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். மேலும் 7 ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.
இவர் ஆசிரியர் பணி மட்டுமின்றி எழுத்தாளராகவும், கவிதையாளராகவும் அறியப்படுகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார்.
இதுதவிர சிறந்த ஓவியம் தீட்டுபவர், வண்ணக் கோலங்கள், உல்லன் வேலைப்பாடுகள், பனியன், மப்ளர், ஸ்கார், குரோஷா, பூ வேலைகள், ஆன்மிக பாடல்கள் இசைப்பதில் ஆர்வம், தையல் கலையிலும் ஆர்வமுடையவராகவும் உள்ளார்.
இவர் இணையில்லா எமது தமிழ், தாயும் தனயனும், என் தெய்வம் ஸ்ரீ சத்ய ஸாயி, எனக்கு பிடித்த சமுதாயம், கொங்கு நாட்டு தங்கம் எமது சமுதாயம், இவளா என் மனைவி, நலந்தரும் நாட்டு வைத்தியம் பாகம்-1, கருமியின் காசு, சங்ககால பெண்மணிகள், இன்றைய மாணவ, மாணவிகள், மணமக்கள், வங்கம் கண்ட தங்கம், ஊட்டி அவ்வையின் ஆத்திசூடி, சிறுவர் பாடல்கள் உள்பட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.
சிறந்த பணி, நூல்களுக்காக எண்ணற்ற விருதுகளும் வாங்கியுள்ளார். சாரண சாரணியர் அரசு விருது, கவியருவி, சைவச் சித்தாந்த செம்மல், மலைச்சாரல், மகுடம், காரைக்கால் அம்மையார் விருது, கராத்தே விருது, கூடலூர் தமிழ்சங்க விருது, 2 முறை உலக சாதனையாளர் விருது, சேவா ரத்னா விருது, சிங்கப்பெண் விருது, பாரதி விருது, பாரதிதாசன் விருது, ஈரோடு தமிழ்சங்கம் விருது, நெய்வேலி தமிழ்சங்க விருது, காங்கயம் அளித்த அவ்வை விருது, ஊட்டி மலைச்சாரல் அளித்த ஊட்டி அவ்வை விருதுகள் என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அவ்வையார் விருது வாங்கிய கமலம் சின்னசாமிக்கு அவரது உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- 100-க்கும் ேமற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஊர் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள்.
அரவேணு,
கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் இருந்து ஜெடையலிங்கா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஊர் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி கடந்த நவம்பர் மாதத்தில் ஜக்கனாரை ஊர் பிரமுகர்கள் ஜெடையலிங்க சுவாமி கோவிலுக்கு சென்று, அங்குள்ள வளாகத்தில் வளர்ந்திருந்த நகா மரத்தை வெட்டி, பூக்குண்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அதே பகுதியில் காய வைத்துவிட்டு வந்தனர். இந்த மரத்தின் விறகை மட்டுமே குண்டம் திருவிழாவிற்கு பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.
இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே குண்டத்தில் இறங்குவதற்காக கோவில் பூசாரி உள்பட பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடும் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து விழாவை நடத்த சுவாமியிடம் அனுமதி பெற்று ஜக்கனாரை கிராமத்தில் உள்ள தெவ்வமனை ஹிரியோடையா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 8 ஊர்களுக்கு சுவாமி ஊர்வலமாக உலா சென்றார்.
அங்கு வீடு, வீடாக பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் நேற்று அதிகாலை ஜெடையலிங்கா சுவாமி கோவில் மற்றும் அதன் அருகே உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு விரதம் இருந்த பக்தர்கள் சென்று சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் நகா மரத்தின் விறகுகளை வைத்தனர். இதைத்தொடர்ந்து குரும்பர் இன மக்கள் ஜெடையலிங்கா சுவாமி கோவிலுக்கு வந்து, குண்டம் இறங்க உள்ள இடத்தில் கற்களை உரசி விறகுகளில் தீ மூட்டினர். அதாவது குண்டத்திற்கு தீ மூட்டுவதற்கு தீப்பெட்டியை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் குரும்பர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தயாராக இருந்தனர். அப்போது காலநிலை சற்று மாறி சில நிமிடங்கள் மட்டும் பலத்த காற்று வீசினால் மட்டுமே சுவாமி குண்டம் இறங்க அனுமதி அளித்ததாக ஐதீகம். அதன்படி பலத்த காற்று வீசியது. தொடர்ந்து முதலில் பூசாரியும், அவரை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
- இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.
- இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கிருஷ்ணா புதூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது45) கூலி தொழிலாளி. இவரது உறவினர்கள் வெள்ளியங்கிரி(42), பழனிச்சாமி(43).சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் நேற்று மாலை கோத்தகிரியை அடுத்த கட்டபெட்டு பகுதியில் வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் கிருஷ்ணா புதூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.
இருசக்கர வாகனத்தை நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஒரசோலை பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் 3 பேரும் வந்த போது எதிரே வந்த லாரி எதிர் பாரத விதமாக அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். நாகராஜுடன் வாகனத்தில் பயணம் செய்த வெள்ளியங்கிரி மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர்களை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருவது குறிப்பிடதக்கது.
- வடமாநில தொழிலாளா்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை, வாரத்துக்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- ஊட்டியின் காலநிலையை கருத்தில் கொண்டு தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டா் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளில் பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த 185 போ் உள்பட 950 வடமாநில தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனா்.
அவ்வாறு பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளா்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை, வாரத்துக்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டியின் காலநிலையை கருத்தில் கொண்டு தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டா் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக இங்கு பணிபுரிவதாலும், பாதுகாப்பு உணா்வுடன் இருப்பதாலும் தான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அவா்களது 1,250 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நீலகிரி எம்.பி. ஆ.ராசா, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் இளஞ்செழியன், மாவட்ட ஆட்சியா் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகரி உள்பட பலா் உடனிருந்தனா்.
- தோட்ட–ங்களில் ஏராளமான காபி பழங்கள் விளைந்துள்ளன.
- ஒற்றைக் காட்டு யானை சாலையை விட்டு கடந்து அருகே இருந்த வனத்திற்குள் சென்றது.
அரவேணு,
கோத்தகிரி சுற்று வட்டார பகுதியிகளா ன மாமரம், குஞ்சப்பனை, முள்ளூர் போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்ட–ங்களில் ஏராளமான காபி பழங்கள் விளைந்துள்ளன.
இவற்றை உண்பதற்காக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்வது வழக்கம், இந்நிலையில் நேற்றிரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் முல்லூர் பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சாலையில் சுற்றி திரிந்தது.
இன்று அதிகாலை வரை அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.நீண்ட நேரம் சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் பல மணி நேரங்களுக்கு பிறகு ஒற்றைக் காட்டு யானை சாலையை விட்டு கடந்து அருகே இருந்த வனத்திற்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து வாகனங்களை இயக்கி சென்றனர்.
அடிக்கடி இந்த சாலையில் யானை நடமாட்டம் இருப்பதால், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, காட்டு யானையை சாலைக்கு வராத வண்ணம், வனத்திற்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார்.
- தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.
ஊட்டி,
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். அப்போது அவர் முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தநிலையில் அவர் மீண்டும் 5 நாள் பயணமாக நாளை (7-ந் தேதி) ஊட்டி வருகிறார். இதற்காக சென்னையில் விமானம் மூலம் கோவை வருகிறார்.
இங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.
கவர்னர் ரவி வருகிற 12-ந் தேதி வரை இங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பிறகே அவர் சென்னை திரும்ப உள்ளார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஊட்டியில் தங்கியிருக்கும் அவர் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரள பகுதியான வயநாடு மாவட்டத்துக்கும் அவர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள்ளது.






