என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்களை மறித்த ஒற்றை காட்டு யானை"

    • தோட்ட–ங்களில் ஏராளமான காபி பழங்கள் விளைந்துள்ளன.
    • ஒற்றைக் காட்டு யானை சாலையை விட்டு கடந்து அருகே இருந்த வனத்திற்குள் சென்றது.

    அரவேணு,

    கோத்தகிரி சுற்று வட்டார பகுதியிகளா ன மாமரம், குஞ்சப்பனை, முள்ளூர் போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்ட–ங்களில் ஏராளமான காபி பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்வது வழக்கம், இந்நிலையில் நேற்றிரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் முல்லூர் பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சாலையில் சுற்றி திரிந்தது.

    இன்று அதிகாலை வரை அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.நீண்ட நேரம் சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் பல மணி நேரங்களுக்கு பிறகு ஒற்றைக் காட்டு யானை சாலையை விட்டு கடந்து அருகே இருந்த வனத்திற்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து வாகனங்களை இயக்கி சென்றனர்.

    அடிக்கடி இந்த சாலையில் யானை நடமாட்டம் இருப்பதால், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, காட்டு யானையை சாலைக்கு வராத வண்ணம், வனத்திற்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×