என் மலர்
நீலகிரி
- புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தே தொடங்கியது.
- மாணவிகள், சுற்றுலா பயணிகள் புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும்.
ஊட்டி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் "முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி தொடங்கி வைத்தார்.
இன்று வரை நடைபெற்று வரும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலாவது புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும் இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு அம்சங்களாக மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்ப டுத்தப்பட்டதை உள்ளுர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் இப்புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளின் கோரிக்கை களை ஏற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழா கண்காட்சி அரங்குகள் மட்டும் வருகிற 19-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
- விடுமுறை நாட்களில் 20 ஆயிரம் பேரும் வந்து செல்கிறார்கள்.
- திருவிழா காலங்களில் 50 டன் வரையும் குப்பை சேகரமாகிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வழக்கமான நாட்களில் 10 ஆயிரம் பேரும், வார விடுமுறை நாட்களில் 20 ஆயிரம் பேரும் வந்து செல்கிறார்கள்.
ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 3,436 நிறுவனங்களும் உள்ளன. வழக்கமாக ஊட்டியில் தினமும் 36 டன்னும், திருவிழா காலங்களில் 50 டன் வரையும் குப்பை சேகரமாகிறது.
இதில் 9 டன் நகராட்சி மார்க்கெட்டில் இருந்து வருகிறது. ஊட்டி நகராட்சியில் லாரி மூலமாகவும், வார்டு வாரியாக பணியாளர்கள் வாகனங்களில் சென்றும் குப்பையை சேகரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, மக்கும் குப்பை உரமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருமண மண்டபங்களில் வரவேற்ப விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதால் கூடுதல் செலவாகும் நிலையில், தனியார் காட்டேஜ்களில் திருமண வரவேற்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதனால் குப்பை அதிகளவில் சேர்வதுடன், நகராட்சி பணியாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தனியார் தங்கும் விடுதிகளில் திருமண வரவேற்பு விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியாதவாது:-
2016-ம் ஆண்டு அரசு உத்தரவுப்படி 5000 சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள இடங்கள் அல்லது தினசரி 1000 கிலோவுக்கு மேல் குப்பை உருவாக்கப்படும் இடங்களில் தாங்களாகவே குப்பையை அகற்றி கொள்ள வேண்டும்.
இதற்காக பதிவு செய்து, திருமண மண்டபங்கள் தனியாக வரி செலுத்துகின்றன. ஆனால் காட்டேஜ்களில் இதுபோல் எந்த வரியும் செலுத்தாமல் திருமண வரவேற்பு விழா நடத்துவதால், அங்கு குப்பை அதிகளவில் சேர்கிறது. எனவே காட்டேஜ்களில் திருமண வரவேற்பு விழா நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
- கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாண்டியாறு ஆமைக்குளத்தில் ரதி-மன்மதன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அப்பகுதி மக்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் காமன் பண்டிகையையொட்டி ரதி - மன்மதன் திருமணம் நடைபெற்றது. பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் தொடர்ந்து தேர் ஊர்வலம், மொய் விருந்து உபச்சாரம், மன்மதனுக்கு குறி சொல்லுதல் நிகழ்ச்சி, சிவபெருமான் தியானத்தில் அமர்தல், தட்சன் யாகம், முனீஸ்வரர். அகோர வீர புத்திரன் வருகை, மன்மதன், தட்சனை எரித்தல் உள்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றது. இதை உணர்த்தும் வகையில் பக்தர்கள் ரதி - மன்மதன் மற்றும் சிவபெருமான் உள்பட பல்வேறு வேடங்களில் விடிய விடிய நடித்து காண்பித்தனர். தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார்.
- கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரவேணு,
கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி மற்றும் பொருளாளர் மரியம்மா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமதுசலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார். கூட்டத்தில் கோத்தகிரி கோவில் மேடு பகுதியில் பேரூராட்சியின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கவும், அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை சந்திப்பில் தெருவிளக்கு அமைக்கவும், கோத்தகிரி விநாயகர் கோவில் முதல் டானிங்டன் வரை செல்லும் நீரோடையில் குப்பை கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முகமது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பிரேம்செபாஸ்டியன், லெனின்மார்க்ஸ் ஜார்ஜ் பால், பிரேம் சதீஷ், திரைசா, லலிதா, சங்கீதா யசோதா, விக்டோரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச்செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.
- முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.
- கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பை பற்றி விளக்கினார்.
ஊட்டி,
ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் அனைவரையும் வரவேற்றார். முனைவர்கள் கே.பி. அருண் மற்றும் சத்திய நாராயணா ஆகியோர் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினர். மருந்தியல் துறை தலைவர் டாக்டர் கே.கவுதமராஜன் கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பை பற்றி விளக்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கேரளா மாநிலம் செருத்துத்தியில் அமைந்துள்ள பஞ்சகர்மா தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சுதாகர் கலந்து கொண்டார்.
கவுரவ விருந்தினராக பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.பிருந்தா, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ இயக்குநரும், டாக்டருமான பரந்தாமன், அபெக்ஸ் மருத்துவ நிறுவன உதவி பொது மேலாளர் ராஜ்குமார், மைசூர் எஸ்.எஸ்.மஹாவித்யாபீட மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்.ஆர்.மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மருந்து வேதியியல் துறை தலைவர் டாக்டர் காளிராஜன் நன்றி கூறினார். விழாவில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
- கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது.
- கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது
ஊட்டி,
குன்னூர் 11-வது வார்ட்டில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது. இதனால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது.
இதனால் அந்த பகுதியே சாக்கடை நிரம்பி நடக்க முடியாமலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமும் அடைந்து வருகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது சில பணிகள் நடந்தன. ஆனால் அப்போது கூட மக்களுக்கு தேவையான பிரதான அடிப்படை வசதியான நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
- கீழ்தொட்டபெட்டா ஆகிய அணைகளின் நீா் இருப்பு மிக முக்கியமானது.
ஊட்டி,
சுற்றுலா நகரமான ஊட்டியில் மே மாதத்தில் நடைபெறும் கோடை சீசனுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவர்கள் இங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால் கோடை சீசன் களைகட்டி காணப்படும். அப்படி வருபவர்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும், உள்ளூா் மக்களின் குடிநீா் தேவையை சமாளிக்கவும் பாா்சன்ஸ்வேலி, மாா்லி மந்து, டைகா் ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா ஆகிய அணைகளின் நீா் இருப்பு மிக முக்கியமானது.
இங்குள்ள முக்கிய குடிநீா் ஆதாரங்களான 50 அடி கொள்ளளவு கொண்ட பாா்சன்ஸ் வேலி அணை, 23 அடி கொள்ளளவு கொண்ட மாா்லி மந்து அணை, 39 அடி கொள்ளளவு கொண்ட டைகா்ஹில் அணை, 35 அடி கொள்ளளவு கொண்ட கோரிசோலா அணை, 25 அடி கொள்ளளவு கொண்ட மேல் தொட்டபெட்டா, 14 அடி கொள்ளளவு கொண்ட கீழ் தொட்டபெட்டா அணை ஆகியவற்றில் சராசரியாக 90 சதவீத அளவுக்கு நீா் இருப்பு உள்ளது.
இதனால், வரும் மே மாதம் நடைபெறும் கோடை சீசனில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தண்ணீா் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் ஊட்டி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
- கழிவுநீர் கால்வாய் மற்றும் நடைபாதை இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
- பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, நாராயணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
குன்னூர் நகராட்சி 12-வது வார்டில் ரூ.70 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர், கழிவுநீர் கால்வாய் மற்றும் நடைபாதை இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதனை முன்னாள் நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான ராமசாமி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் மணிகண்டன், குமரேசன், ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், நகர துணை செயலாளர் முருகேசன், கிளை செயலாளர் சிக்கந்தர், சண்முகம், நந்தகுமார் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, நாராயணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பயணிகளுக்கு மத்தியில் இயற்கையை அளிக்கும் சிலரும் இருப்பது தான் வேதனையாக உள்ளது.
கோத்தகிரி,
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் சாலையாக இருந்து வருகிறது கோத்தகிரி மேட்டுப்பாளை யம் சாலை. இந்த சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் இயற்கை அழகை ரசித்தவாறே வாகனங்களை இயக்குவது வழக்கம்.
குறிப்பாக பவானிசாகர் மற்றும் மேட்டுப்பாளையம் காட்சி முனையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்து செல்வதுண்டு.
ஆனால் இயற்கையை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிக ளுக்கு மத்தியில் இயற்கையை அளிக்கும் சிலரும் இருப்பது தான் வேதனையாக உள்ளது.
காரணம் இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் குறிப்பிட்ட சில இடங்களில் தங்களின் வாகனங்களை சாலையோ ரம் நிறுத்தி விட்டு மது அருந்து கின்றனர்.
அவ்வாறு மது அருந்திய பின்னர் பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இவர்கள் மதுபாட்டி ல்களை வீசும் பகுதி யானை வழித்தட மாகவும், மற்ற வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகவு ம் உள்ளது.
இதனால் யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் அந்த பகுதியில் வர முடியாமல் போய்விடுகி ன்றன.
இதே போன்று காட்டின் சாலைகளில் மது பாட்டிகள், பாலிதீன் கவர்களை போட்டு விட்டு செல்வதனால் காலப்போ க்கில் வனங்களில் உள்ள வன விலங்குகள் அழியும் நிலையும் காணப்படும்.
எனவே வன அதிகாரிகள் இது போன்று செயல் படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- விவசாயிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
- 15 பயனாளிகளுக்கு, ஒருவருக்கும் தலா 10 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன.
அரவேணு,
தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர் கிராமத்தில் உள்ள பழங்குடியின விவசாயிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய காதி மற்றும் கிராம தொழில்கள் அமைச்சகத்தின் இயக்குநர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். நீலகிரி பாதுகாப்பு சங்கத்தின் கள இயக்குநர் சிங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். டெல்லியை சேர்ந்த காதி ஆணைய உதவி இயக்குனர் நிதேஷ் குமார், தமிழ்நாடு மாநில இயக்குநர் சுரேஷ், பெங்களூரை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பாண்டே ஆகியோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள 15 பயனாளிகளுக்கு, ஒருவருக்கும் தலா 10 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வீதம் 150 பெட்டிகள், தேன் எடுக்கும் கருவி, பாதுகாப்பு உபகரணங்கள், முகமுடி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் கிராம மக்களுக்கு ஊட்டச் சத்து உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் உள்பட பழங்குடியின மக்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் சென்னை காதி ஆணைய உதவி இயக்குனர் வசிராஜன் நன்றி கூறினார்.
- கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- சார்பு அணியினர், மகளிர் அணியினர், கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வண்ணாரபேட்டை, மேல்கோடமப்பந்து, வண்டிசோலை ஆகிய வார்டு பகுதிகளின் கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஏற்பா ட்டில் பிறந்தநாள் விழா கொண்டா டப்பட்டது. இதில் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் தலைமை தாங்கி கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். ெதாடர்ந்து ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி கே.ஆர்.அர்ச்சு ணன், கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெ யசீலன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டி நகர செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பி னருமான அக்கீம்பாபு மற்றும் ஒன்றியசெ யலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூ ராட்சி செயலாளர்கள் சார்பு அணியினர், மகளிர் அணியினர், கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து நாசமானது.
- வீடுகளிலிருந்த மின் சாதனங்கள், எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை வேகமாக அப்புறப்படுத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் ரட்டன் டாடா ஓய்வு விடுதி அமைந்து உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் சுமார் 50 குடிசை வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் அங்குள்ள குடியிருப்புகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ அங்கிருந்து குடிசை வீடுகளுக்கும் பரவியது. குடிசை வீடுகள் பலகை மற்றும் தகரத்தால் அமைந்திருந்ததாலும், காற்றின் வேகம் சற்று இருந்ததாலும் தீ வேகமாக பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், மின் வாரிய ஊழியர்கள் அந்த பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்தனர். தீ பரவியதை அடுத்து அப்பகுதி மக்கள் குடிசை வீடுகளிலிருந்த மின் சாதனங்கள், எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை வேகமாக அப்புறப்படுத்தினர்.
இந்தநிலையில் ஊட்டி நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் அந்த பகுதிக்குள் வாகனம் செல்ல முடியவில்லை. மேலும் தீயணைப்பு வாகனத்தில் இருந்து அவ்வளவு தூரத்திற்கு டியூப்பை கொண்டு வர முடியவில்லை. தீ ஏற்பட்ட பகுதிக்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால், பொதுமக்களுடன் இணைந்து குடங்கள் மற்றும் வாளிகளில் தண்ணீர் நிரப்பி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். ஒரு வழியாக மாற்று ஏற்பாடு செய்து இறுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து முழுவதுமாக தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை தீயணைப்புத்துறை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குட்டிகளுடன் நாய் கருகி சாவு சம்பவ இடத்தில் ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா தலைமையில் போலீசார் சென்று பார்வையிட்டனர். .இதில் அந்த பகுதியில் வசிக்கும் ரேணுகா, பிரேமா, சாந்தி, லதா மற்றும் அருள்தாஸ் ஆகியோரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. வீட்டிலிருந்த விறகுகளில் தீ பரவியதால் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், '5 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டன. ஒரு வீட்டில் நாய் குட்டி ஈன்று இருந்தது. நாய் மற்றும் குட்டிகள் தீயில் சிக்கி உயிரிழந்து விட்டது. இந்த வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் தினக்கூலிகள். அவர்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது' என்றனர்.






