என் மலர்
நீங்கள் தேடியது "Beekeeping training"
- விவசாயிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
- 15 பயனாளிகளுக்கு, ஒருவருக்கும் தலா 10 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன.
அரவேணு,
தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர் கிராமத்தில் உள்ள பழங்குடியின விவசாயிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய காதி மற்றும் கிராம தொழில்கள் அமைச்சகத்தின் இயக்குநர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். நீலகிரி பாதுகாப்பு சங்கத்தின் கள இயக்குநர் சிங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். டெல்லியை சேர்ந்த காதி ஆணைய உதவி இயக்குனர் நிதேஷ் குமார், தமிழ்நாடு மாநில இயக்குநர் சுரேஷ், பெங்களூரை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பாண்டே ஆகியோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள 15 பயனாளிகளுக்கு, ஒருவருக்கும் தலா 10 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வீதம் 150 பெட்டிகள், தேன் எடுக்கும் கருவி, பாதுகாப்பு உபகரணங்கள், முகமுடி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் கிராம மக்களுக்கு ஊட்டச் சத்து உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் உள்பட பழங்குடியின மக்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் சென்னை காதி ஆணைய உதவி இயக்குனர் வசிராஜன் நன்றி கூறினார்.
- கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு, தேனீகளின் வகைகள், தேனீகளின் குணங்களை அறியும் வகையில் செயல்முறை பயிற்சி நடைபெற்றது.
- மேலும் தேனீக்களால் பூக்களில் ஏற்படக்கூடிய மகரந்த சேர்க்கை, விளைச்சல் அதிகரிக்க தேனீக்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆய்வு செய்து தெரிந்து கொண்டனர்.
பழனி:
பழனி ஆண்டவர் பெண்கள் கலை பண்பாட்டுக் கல்லூரியில் உயிரியல், விலங்கியல், தாரவியல் பாடப் பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு, தேனீகளின் வகைகள், தேனீகளின் குணங்களை அறியும் வகையில் செயல்முறை பயிற்சி நடைபெற்றது.
மேலும் தேனீக்களால் பூக்களில் ஏற்படக்கூடிய மகரந்த சேர்க்கை, விளைச்சல் அதிகரிக்க தேனீக்களின் பங்கு என்ன என்பது குறித்து கொடைக்கானல் சாலையில் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த தேன் பண்ணையில் மாணவிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்து தெரிந்து கொண்டனர்.
தேனி ஆராய்ச்சி மற்றும் இயற்கை ஆர்வலர்களான இசாக் மற்றும் பாத்திமா ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.






