என் மலர்
நீலகிரி
- பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், நடைபெற்று வருகிறது.
- 24,095 பார்வையாளர்கள் புத்தக அரங்கினை பார்வையிட்டனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா-2023 கடந்த 5-ந் தேதி தொடங்கியது. சர்வதேச கணிதவியல் தினத்தையொட்டி சிந்தனை கவிஞர் கவிதாசன் வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பிலும், நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளருமான ஜோ.மல்லூரி தமிழ் எங்கள் ஞானச் செருக்கு என்ற தலைப்பிலும் பேசினர். விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், தமிழ் பற்றாளர்கள் கலந்துகொண்டு பேசினர். முக்கிய நிகழ்ச்சியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். தொடந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தினமும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடந்த புத்தக திருவிழாவில் ரூ.10.70 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 24,095 பார்வையாளர்கள் புத்தக அரங்கினை பார்வையிட்டனர்.
- பொதுமக்கள் ஓடிப் பிடித்து பஸ்சில் செல்லும் நிலைமை நீடிக்கிறது.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் வந்து செல்லுவதற்க்கு அரசு பஸ்களை நம்பியுள்ளனர்.
பகல் நேரங்களில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கினாலும் பெரும்பாலும் மக்கள் பயணம் செய்வதில்லை. இதனால் பஸ்கள்களில் குறைந்த அளவே மக்கள் பயணம் செய்கின்றனர். மாலை வேளைகளில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது கிராமங்களுக்கு செல்ல பஸ் வசதிகள் ஓரளவு இருந்து வருவதால் அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமமில்லாமல் செல்ல முடிகிறது.
குன்னூர் மற்றும் ஊட்டி பகுதிகளுக்கு செல்ல மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் பயணம் செய்ய வருகின்றனர். இதனால் அந்த நேரங்களில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பஸ்கள் செல்வதால் பொதுமக்கள் ஓடிப் பிடித்து பஸ்சில் செல்லும் நிலைமை நீடிக்கிறது.
எனவே சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகளிர் திட்ட குழுவிற்கு சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- முடிவில் மகளிர் திட்ட பாலகொலா வட்டார ஓருங்கிணைப்பானர் நித்யா நன்றி கூறினார்.
ஊட்டி,
நீலகிரியில் மகளிர் திட்டத்தின் பொறு ப்பாளர்களை உறுப்பினர்களாக கொண்டு, பாலகொலா ஊராட்சியின் 2023-2024ம் ஆண்டுக்கான கிராம அளவிலான முன்னேற்றத்திட்டங்கள் குறித்த விரிவான கணெக்கெடுப்பு நடத்திட முடிவுச்செய்ய ப்பட்டுள்ளது.
இதற்காக அடுத்து வரவுள்ள பாலகொலா ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்ப டுத்திட வேண்டி, 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பதற்கான சிறப்பு கிராமசபை கூட்டம் பாலகொலா ஊராட்சியில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பாலகொலா ஊராட்சி தலைவர் கலையரசி முத்து தலைமை தாங்கினார். துணை த்தலைவர் மஞ்சை மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அலுவலர்களாக ஊட்டி ஊராட்சி கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிந்துஜா, வனத்துறை அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் வளர்ச்சி பணிக்கான கணக்கெடுப்பு பணியாளர்களாக மகளிர் திட்டத்தை சேர்ந்த மாரியம்மா தலைமையில், சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, நவமணி, ரன்ஜினி ஆகி யோரைக்கொண்ட மகளிர் திட்ட குழுவிற்கு சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இக் குழுவினர் அனைத்து கிராமங்க ளுக்கும் சென்று அந்தந்த கிராமத்திற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களின் தேவைகள் குறித்து கணக்கெடுத்து, கிராமசபைகளில் ஒப்புதல் பெற்று நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று முடிவு ச்செய்யப்பட்டது. பாலகொலா ஊராட்சி செயலாளர் கார்த்திக், வரவேற்றார். மகளிர் திட்ட பாலகொலா வட்டார ஓருங்கிணைப்பானர் நித்யா நன்றி கூறினார்.
- 7 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு வருகிற ஏப்ரல் 30-ந் தேதி நடைபெற உள்ளது.
- 70-க்கும் மேற்பட்ட கழகத்தினர் தங்கள் விருப்பமனுக்களை வழங்கினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் கண் டோன்மென்ட் நகரியத்தில் உள்ள 7 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு வருகிற ஏப்ரல் 30-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க சார்பில் போட்டியிட விரும்பி 70-க்கும் மேற்பட்ட கழகத்தினர் தங்கள் விருப்பமனுக்களை மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்-இடம் வழங்கினர். குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஜெகதளா பேரூராட்சி செயலாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின் நன்றி கூறினார்.
- நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
- நடைபாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.
ஊட்டி,
கோத்தகிரியில் தமிழக அரசின் சார்பில் தூய்மையான நகரங்களை உருவாக்கும் நோக்கில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள பொது நடைபாதைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பஸ் நிலையத்தில் இருந்து மாதா கோவில் செல்லும் சாலையை வாகன நிறுத்துமிடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது நடைபாதை அமைக்கப்பட்டது. இருப்பினும் சிலர், அந்த நடைபாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்படி நேற்று பேரூராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் நவீன எந்திரத்தின் உதவியுடன் சுமார் 200 மீட்டர் நடைபாதையை கழுவி சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டனர்.
- ரூ.10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது
- புத்தக கண்காட்சியை கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.
தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், சொற் பொழிவுகள், பட்டி மன்றம், சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
10-ம் நாளான நேற்று சிந்தனை கவிஞர் கவிதாசன், வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பிலும், நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளருமான மல்லூரி தமிழ் எங்கள் ஞானச்செருக்கு என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
புத்தக கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பார்வை யிட்டு வருகிறார்கள். மேலும் தங்களுக்கு விருப்பமான புத்த கங்களையும் தேர்வு செய்து வாங்கிச் செல்கிறார்கள்.
கடந்த 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை புத்தக திருவிழாவில் ரூ.10.70 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்றுள்ளன. சுமார் 24 ஆயிரத்து 95 பார்வையாளர்கள் பார்வை யிட்டு உள்ளனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், மாவட்ட கருவூல அலுவலர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் இலக்குகளை நிர்ணயித்து திட்டமிட வேண்டும்.
- மாணவ-மாணவி களுக்கான பட்டமளிப்பு விழா ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் நடந்தது.
ஊட்டி,
ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் வாழ்க்கையில் வெற்றி பெற இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பேசினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மேலாண்மை, வணிகவியல், பொருளா தாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு 4,000 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் படித்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவ-மாணவி களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 2 நாட்களாக ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் உள்ள அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சனில் வரவேற்றார். சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, பாரதியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் (பொ றுப்பு) விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு 1,380 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினர்.அப்போது கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பேசியதாவது:-
கல்லூரி படிப்பு முடித்து செல்லும் மாணவர்கள் தற்போது வாழ்வின் முக்கியமான கால கட்டத்தில் இருப்பீர்கள். எனவே, வாழ்க்கையில் இலக்குகளை நிர்ணயித்து திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் வெற்றி யடைய முடியும். மாணவ-மாணவிகளின் தனி திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் தள்ளி போடாமல் அன்றைய தினமே முடிக்க வேண்டும். தனித்திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மொ டக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி முதல்வர் எபனேசர், பாரதியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிறுதானிய பயன்பாடு அவசியம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கோத்தகிரியில் நடந்தது.
- கேழ்வரகு , வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் அபரிவி தமான சத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அரவேணு,
உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சிறுதானிய பயன்பாடு அவசியம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கலை நிகழ்ச்சிகள் கோத்தகிரியில் உள்ள தனியார் மண்ட பத்தில் நடந்தது.
கருத்தரங்கில் எதிர்கா லத்தில் உணவும், தண்ணீரும் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலும் சிறுதானியங்கள் தான் நம்மை பாதுகாக்கும் உணவாகும் என வலியுறுத்தப்பட்டது.
மனிதருக்கு தேவையான சரிவிகித உணவை புஞ்சை தானியங்களான பயிர்கள் மட்டுமே தர முடியும். இதனை உற்பத்தி செய்ய குறைந்த அளவே தண்ணீர் போதுமானது. மேலும் சிறுதானியங்கள் பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகும்.
கேழ்வரகு , வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் அபரிவி தமான சத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசியமான உணவாகும். உடல் நரம்புகளுக்கு சக்தியை அதிகரித்து இதயம் சம்பந்தமான நோய்கள், வாய்ப் புண், வயிற்றுப்புண், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவைக்கு சிறுதா னியங்கள் நிவாரணியாகவும் விளங்குகிறது.
துரித உணவு மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உலகத்தில் 50 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளாக இருப்பதாகவும், 50 சதவீதம் தாய்மை பேறு அடையக்கூடிய வயதில் உள்ள பெண்களில் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கை கூறுவதாக கருத்தரங்கில் தெரிவிக் கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.
- கவுதம் கோத்தகிரி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
- வீட்டின் சமையல் அறையில் டி.வி. கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதிக்கு உட்பட்ட கார்சிலி பகுதியில் வசித்து வருபவர் ராபர்ட். இவரும் இவரது மனைவியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் கவுதம் கோத்தகிரி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று ராபர்ட் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கவுதம் வீட்டின் சமையல் அறையில் டி.வி. கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
அதிர்ச்சியடைந்த ராபர்ட் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். பின்பு அவர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். கவுதம் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோத்தகிரி கெர்பேட்டா எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மகன் ஸ்ரீனிவாசன் (22). இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இரவு வீட்டில் உள்ள அனைவரிடமும் சகஜமாக பேசிவிட்டு தூங்க சென்றுள்ளார்.
காலை 5 மணிக்கு செல்வராஜ் வேலைக்கு புறப்பட எழுந்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் ஸ்ரீனிவாசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோடை வறட்சியின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
- தேயிலை விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தினமும் மூங்கில் காடுகள் உள்பட பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. வறட்சியான காலநிலையால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
வழக்கமாக கோடை வறட்சியை தணிக்கும் வகையில் அடிக்கடி கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால், இதுவரை மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளும் வறண்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக பச்சை தேயிலை சாகுபடி உள்ளது.
இதில் கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், நாளுக்கு நாள் பச்சை தேயிலை விளைச்சல் அடியோடு குறைந்து வருகிறது. ஏற்கனவே உரிய விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது விளைச்சலும் குறைந்து வருவதால் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்கு கூட வருவாய் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அடிக்கடி மழை பெய்யும். ஆனால், நடப்பு ஆண்டில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. பச்சை தேயிலை விளைச்சல் பாதித்துள்ளதால் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்தும் குறைந்துள்ளது என்றனர்.
- சுரேஷ் என்பவர் பணிமனையில் தீப்பிடித்து எரிந்தது.
- தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் என்பவர் பணிமனையில் தீப்பிடித்து எரிவதை அக்கம் பக்கம் பார்த்து சுற்றி குடியிருப்பு உள்ளதா லும் உடனடியாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோத்தகிரி நிலைய அலுவலர் கருப்பசாமி மற்றும் முதன்மை தீயணைப்பாளர் மாதன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்து தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடந்தது.
- 416 போ் தோ்வில் பங்கேற்கவில்லை
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 6,852 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதில் முதல்நாள் நடைபெற்ற தமிழ் மொழிப் பாடத் தோ்வை 6436 போ் எழுதினா். 416 போ் தோ்வு எழுத வரவில்லை.
மலையாளப் பாடத்தில் மொத்தம் 175 பேரில் 170 போ் தோ்வு எழுதினா். பிரெஞ்சு பாடத்தில் மொத்தம் 324 பேரில், 303 போ் தோ்வு எழுதினா். ஹிந்திப் பாடத்தில் மொத்தம் 89 பேரில் 89 பேரும் தோ்வு எழுதினா். தனித்தோ்வா்களில் தமிழ் தோ்வில் மொத்தம் 46 பேரில் 43 போ் தோ்வு எழுதினா். 3 போ் வருகை புரியவில்லை. ஹிந்திப் பாடத்தில் மொத்தம் ஒருவா் தோ்வு எழுதினா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் மொத்தம் 52 போ் அரசுத் தோ்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், மற்றும் சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தோ்வு எழுதினா். நீலகிரி மாவட்டத்தில் 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு எழுதத் தகுதியுடைய தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்கள் என மொத்தம் 7,440 பேரில் 6998 போ் தோ்வு எழுதினா். 442 போ் வருகை புரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத் தோ்வை அதிகமானோா் எழுதாமல் உள்ளனா் என்று கல்லித்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது






