search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் பொது நடைபாதைகளை தூய்மைப்படுத்தும் பணி
    X

    கோத்தகிரியில் பொது நடைபாதைகளை தூய்மைப்படுத்தும் பணி

    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • நடைபாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    ஊட்டி,

    கோத்தகிரியில் தமிழக அரசின் சார்பில் தூய்மையான நகரங்களை உருவாக்கும் நோக்கில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள பொது நடைபாதைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பஸ் நிலையத்தில் இருந்து மாதா கோவில் செல்லும் சாலையை வாகன நிறுத்துமிடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது நடைபாதை அமைக்கப்பட்டது. இருப்பினும் சிலர், அந்த நடைபாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்படி நேற்று பேரூராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் நவீன எந்திரத்தின் உதவியுடன் சுமார் 200 மீட்டர் நடைபாதையை கழுவி சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டனர்.

    Next Story
    ×