என் மலர்
நீலகிரி
- மைதானத்தை சீர் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- ஏப்ரல் 1-ந் தேதி குதிைர பந்தயம் தொடங்குகிறது
ஊட்டி,
கோடை சீசனின் போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாபயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு நாளில் தொடங்கி ஜூன் மாதம் வரை ஊட்டியில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் 1-ந் தேதி பந்தயங்கள் தொ டங்குகின்றன. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்படும். அதன்படி பல்வேறு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. அந்த குதிரைகளுக்கு தினந்தோ றும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து மை தானத்தை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குதிரைகள் ஓடும் பாதையில் உள்ள புற்கள், உரமிட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது.
ஓடுதளத்தில் உள்ள புற்கள் ஒரே சீராக வளர தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருவதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- சுற்றுலாபயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்
- யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வதை காண முடிகிறது.
ஊட்டி,
வனப்பகுதியில் தற்போது கடும் வெயில் சுட்டெரிப்பதால் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளை யம் சாலையில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வதை காண முடிகிறது. நேற்றும் இதேபோல யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்க முயன்றன.
இதனால் இருபுறமும் வா கனங்கள் நிறுத்தப்பட்டன. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன. ஆனால் யானைகள் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன.
அதனை கடப்பதாக தெரியவில்லை. இதுபற்றி அறிந்த வனச்சரகர் சசிக்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் யானை யை காட்டுப்ப குதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டேரி பகுதி வழியாக யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகே வாகனங்கள் அனு மதிக்கப்பட்டன. இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
சமவெளி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுயானைகள் முகா மிட்டுள்ளன. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் சாலை கடந்து மலை ரயில் பாதையில் முகாமிடுகிறது. இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட தால் காட்டு யானைகள் காட்டேரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது உடனடியாக குன்னூர் வனசரகர் சசிக்குமார் தலைமையில் வந்த வனத்துறையினர் காட்டுயானையை அருகேயுள்ள வனப்பகுதிக்கு விரட்டினர் இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- புத்தக கண்காட்சியை சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்ச்நதிரன் நேற்று நேரில் பார்வையிட்டார்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தக விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி,
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சியை சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்ச்நதிரன் நேற்று நேரில் பார்வையிட்டார். நிகழ்ச் சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதா வது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனைப்படி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து படிக்க ஆர்வம் மற்றும் பழக்கம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தக விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் முதலாவது புத்தக திருவிழா நடந்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் காமராஜர் மதிய உணவு திட்டத்தினை கொண்டு வந்தார். அதன்பின்னர் சத்துணவு திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். வாழ்வில் ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். புத்தகம் படிப்பது என்பது மிகவும் அவசியம்.
அனைத்து வகை புத்தகங்கள் உள்ளன. இதில் அறிவு, கல்வி, தொழில் சார்ந்த புத்தகம் படிப்பது அவசியமாகும். இதில் எதை படிக்கின்றோமோ அதற்கேற்றார் போல நமது அறிவு வளர்வது மட்டு மின்றி தொழிலும் அமையும். எனவே தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் நம்மிடையே நினைவாற்றல் ஆனது அதிகரிப்பதோடு வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு வர முடியும்.
எனவே மாணவ- மாணவிகளாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அதனை எடுத்து படித்து அறிவினை வளர்த்து நாட்டிற்கு ஒரு வழிகாட்டியாக முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பஸ் நிறுத்தம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிலா ஜாஸ்மின் ரோந்து சென்றார்.
- 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதையடுத்து கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்த போதைப்பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பஸ் நிறுத்தம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிலா ஜாஸ்மின் ரோந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 31) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் தேவாலா நாடுகாணி சோதனைச்சாவடியில் கஞ்சா வைத்திருந்ததாக அனிஷ்மோன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- மூலிகை தாவரங்கள், வாசனை திரவியங்கள், மற்றும் கெய்மலர்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்து.
- 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் 3-வது மரபியல் பல்வகைமை கண்காட்சி நெடுகுளா கிராமத்தில் நடைபெற்றது. கண்காட்சியை நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் கருப்புசாமி தொடங்கி வைத்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா வரவேற்றார். மலை மாவட்ட சிறு விவசாயிகள் தலைவர் போஜன் வாழ்த்துரை வழங்கினார். இதில் காய்கறிகள், பயிர்கள், மூலிகை தாவரங்கள், வாசனை திரவியங்கள், மற்றும் கெய்மலர்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்து. மேலும் வேளாண்மை அறிவியல் நிலையம், ஆராய்ச்சி நிலையம் செம்மறி ஆடு, இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம், மத்திய நீர் மற்றும் மண்வள ஆராய்ச்சி நிலையம், தமிழக ஊரக புத்தக திட்டம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து பாரம்பரிய மருத்துவப் பயிர்கள், திணை, வரகு கம்பு, சாமை ஆகியவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப் பட்டது. கண்காட்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய முனைவர் மாணிக்கவாசகம், செம்மறி ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரேமா, கோதுமை ஆராய்ச்சி நிலைய நஞ்சுண்டன், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் அபிஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நெடுகுளா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கூடலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போட்ட தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்றது
- மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி மீது வழக்கு போட்ட தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர். அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோபா லகிருஷ்ணன், உஷா, பாசறை மாவட்ட செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பா பு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளரகள் கடநாடுகுமார், தப்பகம்பை கிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, ஓ.சி.எஸ் தலைவர் ஜெயராமன், கிளை செயலாளரும், அமைப்புசாரா ஓட்டுநர் அணி நகர செயலாளருமான நொண்டிமேடு கார்த்திக், இளைஞர் அணி பிரபுதுர்கா, நகர துணைச் செயலாளர் சித்ரா உமேஷ் ராஜேஸ்வரி, ரமேஷ் புவனா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள், கிளைக் செயலாளர்கள், மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மலை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழாவில் வியாபாரம் செய்ய வந்த பழங்குடி நரிக்குறவர் இன மக்களை வனத்துறையினர் தாக்கியதால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைலருமான கப்பச்சி வினோத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அருகில் மாணவர் விசாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டம்
- அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்துக்கு உட்பட்ட நடுவட்டம், சில்வர் கிளவுட், மாக்கமூலா, தேவாலா பழப்பண்ணை ஆகிய பகுதிகளில் சுற்று லாத்துறையின் சார்பில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்கான சாத்தி யக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோரும் உடன் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிரு பர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால் உள்மாநிலம் மற்றும் வெளிமாநிலங்க ளில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிகின்றனர். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஊட்டியில் அதிகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக ரிக்கிறது.
மேலும் கேரளா, கர்நாடகா ஆகிய 2 மாநி லங்களில் இருந்து கூடலூர் வழியாக அதிகளவில் சுற்று லாபயணிகள் வருகை புரிகின்றனர். எனவே கூடலூர் பகுதியில் சுற்றுலாதலங்களை அதிகப்படுத்தும் பட்சத்தில் இப்பகுதிகளில் சுற்று லாபயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் வருவாய் ஈட்டுவதோடு வேலை வாய்ப்பும் கிடைக்க வழி வகை உண்டு.
அதன் அடிப்படையில் நடுவட்டம் பகுதியில் உள்ள ஆங்கிலேயர் காலத்து சிறைச்சாலையில் ஏற்கனவே, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணிகள், வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் தடுப்புச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டது.
இன்றைய தினம் இச்சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டு அருங்காட்சியகமாக மாற்றி சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஏதுவாக பணிகள் தொடங்குவது குறித்து அலுவலர்களுடன் ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தேவாலா பழப்பண்ணை, தொ ரப்பள்ளி மாக்கமூலா ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் பூங்காக்கள் மற்றும் சில்வர் கிளவுட் பகுதியில் சாகச பூங்கா அமைப்பதற்கான சாத்தி யக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- ரெயிலில் செல்லும்போது யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம்.
- 15 நிமிடம் தாமதம் ஆனாலும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலும், அதன்பிறகு குன்னூரில் இருந்து ஊட்டிக்கும் மலை ரெயில் இயக்கப்படுகிறது.
வாகனங்களில் செல்வதை விட மலை ரெயிலில் செல்லும்போது நேரம் அதிகமானாலும் இயற்கை அழகை ரசித்தவாறே செல்லலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்லவே ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்லவே விரும்புபவர்கள். ரெயிலில் செல்லும்போது யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம்.
சில சமயங்களில் யானைகள் தண்டவாளத்தை ஆக்கிரமித்துக்கொண்டு நின்று விடும். அந்த சமயம் மலை ரெயில் நிறுத்தப்பட்டு யானைகள் சென்றபிறகே ரெயில் புறப்பட்டுச் செல்லும்.
இந்தநிலையில் குன்னூா் அருகே உள்ள காட்டேரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக 3 காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. நேற்று குன்னூரில் இருந்து மலைரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென 3 காட்டு யானைகளும் தண்டவாளம் வழியாக நடந்து வந்தன. இதனால் ரெயில் என்ஜின் டிரைவர்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். 15 நிமிடம் யானைகள் தண்டவாளத்தை விட்டு நகராமல் நின்றது. அதன்பிறகு தான் தண்டவாளத்தை விட்டு இறங்கி நடையை கட்டியது. பின்னர் மலைரெயில் புறப்பட்டுச் சென்றது.
15 நிமிடம் தாமதம் ஆனாலும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்.
- வேட்பாளர்களை தனித்தனியாக அழைத்து வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
- இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
வெலிங்டன் கண்டோன்மென்ட் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தி.மு.க.வினரிடம் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலின்போது, ஒவ்வொரு வேட்பாளர்களையும் தனித்தனியாக அழைத்து வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர். நேர்காணல் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்க்கான், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதகத்துல்லா, செல்வம், ஷீலாகேத்ரின், முரசொலி வெங்கடேஷ், நகரிய செயலாளர் மார்ட்டின், ஜெகதளா பேரூர் செல்லாளர் சஞ்சீவ்குமார், உலிக்கல் பேரூர் செயலாளர் ரமேஷ்குமார், குன்னூர் ஒன்றியத்திற்கு நிர்வாகிகள் ராமசாமி, மூர்த்தி, தவமணி, ஜோசப், மகேஸ்வரி, கருணாநிதி, வினோத் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 5 யானைகளில் 3 யானைகள் மட்டும் நேற்று மீண்டும் காட்டேரி பகுதிக்கு வந்தன.
- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினா் எச்சரிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பா ளையம் சாலை, காட்டேரிப் பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 காட்டு யானைகள் முகா மிட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மேட்டுப்பா ளையம் வனப்பகுதியில் இருந்து உணவு, குடிநீா் தேடி 5 காட்டு யானைகள் குன்னூா் அருகே உள்ள ரன்னிமேடு ெரயில் நிலையம் மற்றும் நஞ்சப்ப சத்திரம் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன் நடமாடி வந்தன. தகவல் அறிந்த குன்னூா் வனத்து றையினா், வனச்சரகா் சசிகுமாா் உத்தரவின்பேரில், வனவா் முருகன் மற்றும் வனக் காப்பாளா் சீனிவாசன், வனக் காவலா் திலீப் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் 11 போ் கொண்ட குழுவினா் 5 காட்டு யானைகளையும் அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா்.
2 நாள்களாக அடா்ந்த வனப்பகுதியில் இருந்த இந்த 5 யானைகளில் 3 யானைகள் மட்டும் நேற்று மீண்டும் காட்டேரி பகுதிக்கு வந்தன.
தகவலறிந்து வந்த வனத்துறையினா் காட்டு யானைகள், குடியிருப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து விடாமல் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். காட்டு யானைகள், சாலைக்கு மிக அருகில் முகாமிட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறையினா் வேண்டு கோள் விடுத்துள்ளனா்.
- 7 பேர் கொண்ட குழுவினர் வேலைக்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்
- கிராமசபை கூட்டமும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
கோவை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அல்போன்ஸா தலைமையில் இத்தலார் ஊராட்சி மற்றும் நஞ்சநாடு ஊராட்சியை சேர்ந்ந தணிக்கையாளர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் நூறு நாள் வேலைக்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் குறிப்பிட்ட நாட்களில் முடிக்கப்பட்ட வேலையின் அளவு, நூறு நாள் வேலைக்காண ஊதியம் முறையாக, குறிப்பிட்ட நாட்களுக்குள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதா? போன்றவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கூட்டத்தில் பாலகொலா ஊராட்சி தலைவர் கலையரசி முத்து, துணைத்தலைவர் மஞ்சை.வி.மோகன், ஊட்டி ஊராட்சி கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிந்துஜா, பாலகொலா ஊராட்சி செயலாளர் கார்த்திக், நூறுநாள் வேலைக்கான பாலகொலா ஊராட்சி பொறுப்பாளர் சரிதா ஆகியோருக்கு ஆய்வு குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நடைப்பெறும் வேலை, நடைபெற்று முடிந்துள்ள பகுதிகளுக்கும் தணிக்கையாளர் நேரடியாக சென்றும் தணிக்கை செய்ய உள்ளனர். இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந் தேதி நூறுநாள் வேலைக்காக சிறப்பு கிராமசபை கூட்டமும் பாலகொலா ஊராட்சியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குட்டி யானைக்கு முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
- குட்டி யானையை பராமரிக்கும் பணியில் பொம்மனும், அவரது மனைவி பெள்ளியும் ஈடுபட உள்ளனர்.
ஊட்டி:
தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த படமானது தாயை பிரிந்த 2 யானை குட்டிகளுக்கும், அதனை வளர்க்கும் தம்பதிகளுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பாசத்தை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது. நீலகிரியில் உள்ள முதுமலை யானைகள் காப்பகத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டது.
ஆஸ்கர் விருது பெற்றதன் மூலம் இந்த படத்தில் நடித்த ரகு, பொம்மி என்ற 2 யானைகளும், அதனை பராமரித்த பாகன் பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் தற்போது சர்வதேச அளவில் புகழ் பெற்றுவிட்டனர்.
பாகன் பொம்மன், பெள்ளி ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கி கவுரவித்தார். ஆஸ்கர் விருதை வென்ற படத்தில் நடித்திருந்தாலும் பாகன் பொம்மன், பெள்ளி ஆகியோர் எந்தவித கர்வமும் கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் வனப்பகுதியில் கடந்த வாரம் தாயை பிரிந்து 5 மாத ஆண் குட்டி யானை ஒன்று தனியாக வந்தது. அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த குட்டி யானை விவசாய கிணற்றில் தவறி விழுந்து காயம் அடைந்தது. இதனால் அந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த குட்டி யானையை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரது கண்காணிப்பில் யானை லாரியில் ஏற்றி தர்மபுரியில் இருந்து முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது.
குட்டி யானைக்கு முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து குட்டி யானையை பராமரிக்கும் பணியில் பொம்மனும், அவரது மனைவி பெள்ளியும் ஈடுபட உள்ளனர். மீண்டும் ஒரு குட்டி யானையை வளர்க்க உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.






