search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் பகுதியில் புதிய சுற்றுலாதலங்கள் ஏற்படுத்த ஆய்வு
    X

    கூடலூர் பகுதியில் புதிய சுற்றுலாதலங்கள் ஏற்படுத்த ஆய்வு

    • சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டம்
    • அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்துக்கு உட்பட்ட நடுவட்டம், சில்வர் கிளவுட், மாக்கமூலா, தேவாலா பழப்பண்ணை ஆகிய பகுதிகளில் சுற்று லாத்துறையின் சார்பில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்கான சாத்தி யக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோரும் உடன் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால் உள்மாநிலம் மற்றும் வெளிமாநிலங்க ளில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிகின்றனர். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஊட்டியில் அதிகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக ரிக்கிறது.

    மேலும் கேரளா, கர்நாடகா ஆகிய 2 மாநி லங்களில் இருந்து கூடலூர் வழியாக அதிகளவில் சுற்று லாபயணிகள் வருகை புரிகின்றனர். எனவே கூடலூர் பகுதியில் சுற்றுலாதலங்களை அதிகப்படுத்தும் பட்சத்தில் இப்பகுதிகளில் சுற்று லாபயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் வருவாய் ஈட்டுவதோடு வேலை வாய்ப்பும் கிடைக்க வழி வகை உண்டு.

    அதன் அடிப்படையில் நடுவட்டம் பகுதியில் உள்ள ஆங்கிலேயர் காலத்து சிறைச்சாலையில் ஏற்கனவே, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணிகள், வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் தடுப்புச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டது.

    இன்றைய தினம் இச்சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டு அருங்காட்சியகமாக மாற்றி சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஏதுவாக பணிகள் தொடங்குவது குறித்து அலுவலர்களுடன் ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தேவாலா பழப்பண்ணை, தொ ரப்பள்ளி மாக்கமூலா ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் பூங்காக்கள் மற்றும் சில்வர் கிளவுட் பகுதியில் சாகச பூங்கா அமைப்பதற்கான சாத்தி யக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×